பரணி நட்சத்திரம்

நட்சத்திர கோயில்கள் – பரணி நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!

நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.

அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

பரணி நட்சத்திரம்
பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதி-சுக்கிரன், ராசி அதிபதி-செவ்வாய். பரணி நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதியாக முதல் பாதத்தில் சூரியனும், இரண்டாம் பாதத்தில் புதனும், மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், நான்காம் பாதத்தில் செவ்வாயும் வலம் வருகின்றன. `பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்பது ஜோதிட பழமொழியாகும். அதற்காக இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எல்லோரும் தரணி ஆள்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், எப்போதுமே தனித்து பிரதிபலிப்பர்கள். இயல்பிலேயே ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். பகுத்தறியும் திறமையுடன் மிகப்பெரிய பிரச்னையையும் சுலபமாக கடந்து செல்பவர்களாக இருப்பார்கள். இந்நட்சத்திரக்காரர்கள் இளமை பருவத்திலேயே நன்முறையில் முன்னேற்றத்தை காண்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துர்க்கை அம்மனை வழிப்பட நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.

திருப்புகலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்
திருப்புகலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்

திருப்புகலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்

உறுதியான மனப்போக்கும், ஞானமும் பெற்ற பரணி நட்சத்திரக்காரர்கள் திருப்புகலூர் ஸ்ரீஅக்னிஸ்வரர் ஆலயத்துக்கு விசேஷ நாட்களிலோ அல்லது தங்களால் இயலும் நேரங்களிலோ சென்று வர நன்மை உண்டாகும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தத் திருத்தலமானது, காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறக்கப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், இறைவன் மேற்கு நோக்கி இருந்து அருள்பாலிப்பது இதன் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு மேற்கு நோக்கி இறைவன் அமைந்திருப்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இத்திருத்தலம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமாவரம், மார்கழி தரூர்பூஜை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட சிவதலங்களுக்குரித்தான விழாக்களுக்கும் பிரசித்தி பெற்ற இடமாகத் திகழ்கிறது. அத்துடன் சுவாமி அக்னீஸ்வரர் அக்னியின் சொரூபமாக அமைந்திருப்பதால், அதனைத் தணிக்கும் வகையில் அந்த மூலஸ்தானத்தைச் சுற்றி தண்ணீர் நிரப்பி வைக்கப்படும்.

திருப்புகலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்
திருப்புகலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்

இத்திருத்தலத்தில் மிருகண்டமகாரிஷியால் நடத்தப்பட்ட யாகத்தில் அக்னியில் இடப்பட்ட பட்டாடை அக்னி வகைகளில் ஒன்றான பரணி என்கிற ருத்ராக்னியின் மூலம் திருத்தலத்தினுள் இருக்கும் சுவாமிக்கு சாற்றப்பட்டிருந்தது. இந்த அதிசயத்தின் மூலமாகத் தான் பரணிநட்சத்திரகார்களுக்கு இத்திருத்தலம் விசேஷமாகத் திகழ்கிறது. பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உண்டான தோஷங்களை இத்திருத்தலத்தினை அடைவதன் மூலமாக நீக்கிக்கொள்ள முடியும். அத்துடன் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, வேலையின்மை என வாழ்கையின் சிக்கல்களைத் தீர்த்து கொள்ளும் இடமாக இத்திருத்தலம் விளங்குகிறது.

நட்சத்திரக் கோயில்கள் – அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில் எது?

எப்படிப் போகலாம்?

ஸ்ரீஅக்னீஸ்வரர் திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் உள்ள நல்லாடை என்ற ஊரில் அக்னீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மயிலாடுதுறைக்கு பேருந்து, ரயில் வசதிகள் இருக்கின்றன. அருகில் இருக்கும் விமான நிலையம், புதுச்சேரி.

புதிதாக வீடு கட்டுவோர் இத்திருத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரரிடம் ஆறு செங்கல்களை வைத்து பூஜை செய்து அதில் 3 செங்கல்களை இறைவனுக்கு படைத்துவிட்டு மீதி உள்ள 3 செங்கல்களை எடுத்து சென்று வீடு கட்டுவதில் உபயோகித்து கொண்டால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top