பக்தி பாடல்கள் கொடுக்குற வைப் இருக்குல, அது செமயான ஒரு ஃபீலிங். ஆடி மாசம்லாம் வந்தா நாம சின்ன வயசுல கேட்டு வளர்ந்த நிறைய பக்திப் பாடல்கள் தானாவே நம்ம காதுல விழ ஆரம்பிச்சிரும். நாஸ்டால்ஜியா மோட் கிரியேட் ஆகும். காலேஜ், ஆஃபிஸ்க்குலாம் போகும்போது அதைக்கேட்டு வைப் பண்ணிட்டே போவோம். அன்னைக்கு நாள் முழுவதும் அந்தப் பாடல்களை முணுமுணுத்துட்டே இருப்போம். இந்தப் பாடல்களையெல்லாம் கேட்க கண்டிப்பா நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கணும்னுலாம் இல்லை. அந்த வைப்தான் முக்கியம். கடந்த சில நாள்களா சில பக்தி பாடல்களை லூப் மோட்ல கேட்டுட்டு இருக்கேன். இந்த வீடியோல செமயான வைப்புக்கு உதவும் 10 பக்தி பாடல்களைதான் பார்க்கப்போறோம்.
முதல்ல எந்த நல்ல விஷயம் பண்றதுக்கு முன்னாடியும் ஸ்வீட் சாப்பிடணும்னு சொல்லுவாங்க. இதெல்லாம், இப்போ வந்தது. காலம் காலமா இருக்குற ஒரு விஷயம், எந்த ஒரு விஷயத்தையும் பண்றதுக்கு முன்னாடி பிள்ளையாரை கும்பிட்டுட்டு தொடங்கணும்னு சொல்லுவாங்க. 90’ஸ் கிட்ஸ்லாம் எக்ஸாம் எழுதுறதுக்கு முன்னாடி, காதல் கடிதம் எழுதுறதுக்கு முன்னாடி, ஏன்… பேங்க்ல செக் எழுதும்போதுகூட பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிப்பாங்க, அதுனால, இந்த லிஸ்ட்ல முதல் பாட்டு ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் பாட்டுதான். ஊர்லலாம் கோயில் கொடை நடக்கும். அப்போ, காலைல 4 மணிக்கு வீட்டுல நல்லா தூங்கிட்டு இருப்போம். அப்போ, ரேடியோல ‘அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்’னு டி.எல்.மகாராஜன் குரல்ல பாட்டு தொடங்கும். அப்படியே உடம்புல கரண்ட் ஒண்ணு பாஸ் ஆகி எழும்புவோம். குளிச்சிட்டு காலங்காத்தால கோயில் முன்னாடி பசங்க எல்லாம் ஒண்ணாகூடி வேலைகள் எல்லாம் செய்வோம். செம வைப் அது. இன்னைக்கும் இந்தப் பாட்டைக் கேட்டா அந்த வைப் அப்படியே வரும்.
கார்த்திகை மாசம்னு சொன்னாலே நமக்கு டக்னு நியாபகம் வர்றது ஐயப்பன்தான். கார்த்திகை ஒண்ணாம் தேதி சபரி மலைக்கு மாலை போட்டுட்டு முதல்ல கேக்குற பாட்டு ‘சன்னதியில் கட்டும் கட்டி’ பாட்டுதான். அந்த மாசம் நிறைய பேரோட ரிங்டோனாவே இந்தப் பாட்டு இருக்கும். அதுவும் சாயங்காலம் பூஜைலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வீட்டுல பண்ணுவாங்க. அப்போ, இந்தப் பாட்டைப் போட்டு கும்பலா சேர்ந்து எல்லாரும் பாடுவாங்க. அப்போ ஒரு வைப் வருமே, வேறலெவல்ல இருக்கும். ‘காந்தமலை ஜோதியானவா, எங்க காவலாக வந்து சேரப்பா’ லைன்லாம் ஸ்ரீஹரி வாய்ஸ்ல வரும்போது நம்ம கண்ணு ஆட்டோமெட்டிக்கா மூடி வைப்ல பறந்துட்டு இருப்போம்.
சபரிமலைக்கு மாலை போடும் கார்த்திகை மாதத்துல எல்லா இடத்துலயும் கேக்க முடியுற இன்னொரு பாட்டு ‘எங்க கருப்ப சாமி’ பாட்டு. வேன்ல ஏறி கொஞ்சம் தூரம் போனதும் இந்தப் பாட்டைப் போட்ருவாங்க. அதுவரைக்கும் சும்மா இருந்த சாமிகள் எல்லாம் கண்ணை மூடிட்டு ஆட ஆரம்பிச்சுருவாங்க. ‘சடை முடிக் காரன் அவன், சாமிகளைக் காத்திடுவான், சல்லடையை கட்டு வர்றான், சாஞ்சு சாஞ்சு ஆடி வர்றான்’ லைன்லாம் கேட்டு ஆடாமல் இருக்கவே முடியாது. கொஞ்சம் நேரத்துல ஃபாஸ்ட் பீட் ஆரம்பிக்கும். ‘அந்தா வரான்… இந்தா வரான்… கருப்பசாமினு… ப்பா, என்னா வைப் கிரியேட் பண்ணும் இந்தப் பாட்டு.
எனக்கு தெரிஞ்சு செமயான வைப்க்கு ஏத்த ஒரு பாட்டு ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ பாட்டுதான். இன்னைக்கு இருக்குற கிட்ஸ்கூட இந்தப் பாட்டை ரீமிக்ஸ் பண்ணி வைப் பண்ணிட்டுதான் இருக்காங்க. இந்தப் பாட்டை இந்த டைம்லதான் கேப்பாங்க அப்டினுலாம் சொல்ல முடியாது. எப்பலாம் செம எனர்ஜியான ஒரு பக்தி பாட்டு கேக்கணுமோ அப்போலாம் இந்தப் பாட்டுதான் நிறைய பேரோட ஃபஸ்ட் சாய்ஸா இருக்கும். இன்னைக்கும் பசங்கலாம் சேர்ந்து டான்ஸ் ஆடும்போதுகூட இந்தப் பாட்டை போடுவாங்க. பெங்களூர் ரமணியம்மாள் இந்தப் பாட்டைப் பாடியிருப்பாங்க. இப்போ மட்டுமல்ல, எப்பவும் இந்தப் பாட்டு செமயான வைப் கொடுக்கும். குறிப்பா முருக பக்தர்களுக்கு இந்தப் பாட்டு ஃபேவரைட்டா இருக்கும். அப்புறம் முருகரோட திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் பாட்டு. இதுவும் செமயான வைப் கொடுக்கும். காலைல பெரும்பாலான முருக பக்தர்கள் வீட்டுல கேக்குற பாட்டு இதுதான். அதேமாதிரி எங்கயாவது முருகன் கோயிலுக்கு குடும்பமா கிளம்பினா, கார்ல ஏறுனதும் டிரைவர்கிட்ட இந்தப் பாட்டைதான் போட சொல்லுவாங்க. அப்படி ஒரு வைப் கொடுக்கும். டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் சேர்ந்து இந்தப் பாட்டைப் பாடியிருப்பாங்க.
கன்னியாகுமரில சிவராத்திரி அப்போ சிவாலய ஓட்டம்னு ஒரு விழா நடக்கும். அந்த விழா முழுக்கவே சிவன் தான் நிரம்பி இருப்பாரு. அதுல போடுற முதல் பாட்டு எஸ்.பி.பி பாடுன ‘நமச்சிவாய நமச்சிவாய ஓம் நம சிவாய’ பாட்டுதான். அந்தப் பாட்டைக் கேக்கும்போது சிவபக்தர்கள் அப்படி ஒரு வைப்க்கு போவாங்க. கோரஸ்லாம் வரும்போது மெய்மறந்து அப்படியே பாடிட்டே ஓடுவாங்க. அந்தப் பாட்டுல அப்படி ஒரு மேஜிக் இருக்கும். ரொம்பவே நீளமான ஒரு பாட்டு இது. ஆனால், பாட்டு போறதே தெரியாது. அவ்வளவு ஸ்வீட்டான, எனர்ஜியான பாட்டு இது.
கே.டி.வி பார்த்து வளர்ந்த 90’ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும் ‘வேப்பிலை வேப்பிலை’ பாட்டு எப்படியான வைப் கொடுக்கும்னு. இந்தப் பாட்டுலாம் கேக்கும்போது உங்களால அமைதியா கண்ணை மூடிட்டு உட்காரலாம் முடியாது. கால், கைலாம் தானாவே ஆட ஆரம்பிச்சிரும். எஸ்.ஏ.ராஜ்குமார்தான் இந்தப் பாட்டுக்கு மியூசிக். பின்னி பெடலெடுத்துருப்பாரு. கேக்கும்போதே உடம்பு புல்லரிக்கும். அதே படத்துல ‘பாளையத்தம்மா நீ பாடவிளக்கு’ பாட்டு வரும். அதுவும் செம வைப் கிரியேட் பண்ணும். இந்தப் பாட்டைக் கேட்டதும் அம்மன் கோயிலுக்கு போய் வழிபடணும்னு போனவங்கலாம் இருக்காங்க. ரெண்டு பாட்டுமே அடிபொலிதான். கொஞ்சம் வேப்பிலை எடுத்து கைல வைச்சு ஆட ஆரம்பிச்சா, லூப் மோட்ல போய்கிட்டே இருக்கும். ஆடி மாசம் இந்தப் பாட்டைக் கேட்காமல் ஒருத்தர்கூட பொழுதை கழிக்க முடியாது. அதாங்க எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ பாட்டு. நிறைய படங்கள்லகூட இந்தப் பாட்டை வைப்க்கு யூஸ் பண்ணியிருப்பாங்க. இப்படி வைப் பாடல்களை சொல்லிட்டே போகலாம்.
எப்பக் கேட்டாலும் உங்களை வைப் ஆக்குற பக்தி பாட்டு எதுன்றதை கமெண்ட்ல சொல்லுங்க!