முத்தையா முரளிதரன்

முரளிதரன் பந்தை எறிந்தாரா… ஆஸி. கிரிக்கெட் போர்டின் சதியை முறியடித்த பின்னணி!

`முரளி உலகின் பல பகுதிகள்லயும் பௌலிங் போட்டிருக்கார். இப்போ திடீர்னு ஒருத்தர் வந்து அவர் த்ரோ பண்றார்னு சொல்றதை எப்படி எடுத்துக்கிறதுனே தெரியலை. ஆஸ்திரேலியன் கிரிக்கெட் போர்டு சைடுல இருந்து இந்த செயல்பாடு மோசமானதுதான்…. முரளி எவ்வளவு அற்புதமான பௌலர்னு உலகத்துக்கே தெரியும்… அவருக்கு இப்படி நடக்குறதை ஏத்துக்கவே முடியலை’ – ஆஸ்திரேலியாவுல 1999ல நடந்த டிரை சீரிஸப்போ முரளி பௌலிங்கை நோபால்னு அம்பயர்ஸ் அறிவிச்சு பெரிய காண்ட்ரோவர்ஸி ஆனப்போ ஸ்ரீலங்கன் மேனேஜர் ரஞ்சித் பெர்னாண்டோ மனம் வெதும்பி சொன்ன வார்த்தைகள் இவை. கிரிக்கெட்டோட மிகப்பெரிய சர்சைகள்ல ஒண்ணா கருதப்படுற அந்த பிரச்னையப்போ என்ன நடந்துச்சு… உண்மையிலேயே முரளிதரன் பாலை த்ரோ பண்ணாரா… ஐசிசி என்ன சொல்லுச்சுனு அப்போ நடந்ததைப் பத்திதான் நாம பார்க்கப்போறோம்.

முரளிதரன்
முரளிதரன்

இந்த சர்ச்சை ஸ்டார்ட் ஆனது 1995ல நடந்த Benson & Hedges சீரிஸ்லதான். அந்த சீரிஸோட ஏழாவது மேட்ச் அப்போ முரளி போட்ட ஆஃப் ஸ்பின் த்ரோனு சொல்லி அம்பயர் டேரல் ஹேர் நோ பால்னு அறிவிக்குறார். அடுத்தடுத்த 3 ஓவர்கள்ல 7 முறை அம்பயர் நோபால்னு சொன்னது சர்ச்சையாச்சு. 4 நாளைக்கு முன்னாடி நடந்த ஆஸ்திரேலியா மேட்சப்ப எதுவும் சொல்லாத அவர், வெஸ்ட் இண்டீஸ் மேட்சப்போ இப்படி அறிவிச்சிருந்தது கேள்விக்குள்ளாச்சு. அதுக்குப் பிறகு அந்த சீரிஸ் முழுக்க முரளி விளையாடல. பௌலிங் ஆக்‌ஷனை செக் பண்ண ஐசிசி டீம், ஆக்‌ஷன் லீகல்தான்னு கிளியர் பண்ணாங்க. அந்த டூர்ல டேரல் ஹேரோட சேர்த்து ராஸ் எமர்ஸனும் டோனி மெக்குலனும் இருவேறு சந்தர்ப்பங்கள்ல முரளியோட பௌலிங்கை நோபால்னு அறிவிச்சிருந்தாங்க. இதே ஆஸ்திரேலியாவை 1996 வேர்ல்டு கப்ல அடிச்சு ஸ்ரீலங்கா பழிதீர்த்துக்கிட்டது வேற கதை.

முரளிதரன்
முரளிதரன்

கட் பண்ணா 1999 ஆஸ்திரேலியா – இலங்கை – இங்கிலாந்து டிரை சீரிஸ். அந்த சீரிஸோட எட்டாவது மேட்ச் நடக்குறதுக்கு முன்னாடி நடந்த சம்பவம் ஆஸ்திரேலியன் கிரிக்கெட் போர்டு முரளியோட கரியரை சிதைக்குறதுக்கு எந்த அளவுக்கு இறங்குச்சுங்குறதை நமக்குத் தெளிவாவே காட்டும். முரளி த்ரோ பண்றாருனு நோ பால் கொடுத்த அதே எமர்ஸன்தான் அந்த மேட்சுக்கும் அம்பயர். மேட்சுக்கு முன்னாடி அவர்கிட்ட ஆஸி கிரிக்கெட் போர்டு தரப்புல இருந்து பேசுனவங்க, முன்னாடி நீங்க எப்படி செயல்பட்டீங்களோ அப்படியே செய்யுங்க’னு சொல்லிருக்காங்க. இதப்பத்தி எமர்ஸனே ஒரு பேட்டில சொல்லும்போது,அவங்க எனக்கு அப்படிப் பண்ணுங்கனு ஆர்டர் போடலை. ஆனா அப்படி செய்யுறதுக்கு என்னை என்கரேஜ் பண்ணாங்க’னு சொல்லி அம்பலப்படுத்திருப்பார். இங்கிலாந்து மேட்சப்போ ஸ்கொயர் லெக்ல நின்னிருந்த எமர்ஸன், முரளி பௌலிங்கை நோபால்னு அறிவிப்பார். என்னதான் ஏசிபியோட சப்போர்ட் இருந்தாலும், அந்த இடத்துல எமர்ஸனுக்குப் புரியல அங்க மூணாவதா இருக்க இன்னொருத்தரோட கெப்பாசிட்டி. அவர்தான் ஸ்ரீலங்கன் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா. நேரா அம்பயர்கிட்ட போய் பேசிப்பார்த்தாரு… ஆனா எதுவும் மாறுற மாதிரி தெரியலைன்ன உடனே, இங்கிலாந்து பிளேயர்ஸுக்கு பை பை சொல்லிட்டு ஸ்ரீலங்கன் பிளேயர்ஸை கூட்டிட்டு வாக்-அவுட் பண்ணிடுவார்.

Also Read – வாட்சன் முட்டியில் ரத்தம், கலங்கின கோலி..! – ஐ.பி.எல் எமோஷனல் மொமெண்ட்ஸ்!

அப்போ கமெண்ட்ரில இருந்த இயான் போத்தம் சொன்ன வார்த்தைகள் ரொம்ப முக்கியமானவை. `பிளேயர்ஸான உங்களை விட எனக்கு நிறையவே தெரியும்னு அம்பயர் எமர்ஸன் சொல்லிருப்பார்னு நினைக்கிறேன். இந்த யங் மேன் (ரணதுங்கா) பண்ணதைப் பார்த்து உலகத்துல இருக்க எல்லா அம்பயர்ஸுமே ஹேப்பியாகியிருப்பாங்க. முதல் ஓவர்ல எதுவுமே சொல்லாத இவரு (எமர்ஸன்) இப்போ இப்படி சொல்றது விநோதமா இருக்கு’னு பதிவு பண்ணார். 1898ல எர்னி ஜோன்ஸ் தொடங்கி, 1960ஸ்ல இயன் மெக்கிஃப், 1999கள்ல பிரட் லீ, ஷோயப் அக்தர், அப்புறம் சயீத் அஜ்மல்னு நிறைய பௌலர்ஸ் இதே புகாருக்கு உள்ளாகியிருக்காங்க.

முரளிதரன் - அர்ஜூனா ரணதுங்கா
முரளிதரன் – அர்ஜூனா ரணதுங்கா

அந்த மேட்ச் சஸ்பென்ஸ் இதோட முடியலை. ஆஸி – ஸ்ரீலங்கன் கிரிக்கெட் போர்டு சமரச பேச்சோட, முரளி லெக் ஸ்பின் மட்டும்தான் போடணும்’னு சொன்னதை ஏத்துக்கிட்ட ரணதுங்கா,எமர்ஸன் இனிமேல் நோபால் அறிவிக்கவே கூடாது’னு சொன்னார். மேட்ச் முடிஞ்சதும் ரணதுங்காவுக்கு சம்பளத்துல 75% அபராதமும், 6 மேட்ச் சஸ்பெண்டும் கொடுத்தாங்க. பின்னாட்கள்ல இதைப்பத்தி பேசுறப்போ, `உலகமே கொண்டாடுறப்போ, ஒண்ணு ரெண்டு அம்பயர்ஸுக்காக ஏன் கவலைப்படணும்’னு முடிச்சிருப்பார். முரளிங்குற அந்த யங் ஸ்டர்தான் இன்னிக்கு இலங்கை கிரிக்கெட்டோட முக்கியமான அடையாளம். அதே மேட்ச்ல அம்பயர் எமர்ஸன் ஸ்கொயர் லெக்ல நின்னு பார்க்க, வின்னிங் ரன்னை அடிச்சதும் அதே முரளிதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top