நம்ம சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜனைக் கொண்டாடத தமிழக கிரிக்கெட் ரசிகர்களைப் பார்ப்பது அரிது. அந்த அளவுக்கு எளிமையாக பின்னணியில் இருந்து சர்வதேச வீரராக ஜொலித்து, பல யங் ஸ்டர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருப்பவர் டி.நடராஜன். அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். நடராஜனோட கிரிக்கெட் ஜர்னி எங்க தொடங்குச்சுனு அவரோட ஹிஸ்டரியைப் பத்திதான் இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறோம்.
சேலம் பக்கத்துல இருக்க சின்னப்பம்பட்டிதான் நடராஜனோட சொந்த ஊர். அப்பா தங்கராசு விசைத்தறில பணியாற்றுகிறவர். அம்மா, சின்னதா சாந்தா ரோட் சைட் ஸ்நாக்ஸ் கடை ஒன்றை நடத்திட்டு வந்தவங்க. அவருக்கு திலகவதி, தமிழரசி, மேகலா என 3 உடன்பிறந்த சகோதரிகள் மற்றும் சக்தி எனும் சகோதரர் இருக்கிறார். சின்ன வயசுல இருந்த டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் கலக்கி வந்த நடராஜனின் திறமையை அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்கிற ஜேபி என்பவர் சரியாக அடையாளம் கண்டார். அவரது உந்துதலாலேயே சென்னைக்கு வந்து பர்ஸ்ட் கிளாஸ் டிவிஷன் மேட்சில், 2010-11 சீசனில் நடராஜன் பி.எஸ்.என்.எல் அணிக்காக விளையாடத் தொடங்கினார். பின்னர், விஜய் கிளப் மற்றும் அஷ்வின், முரளி விஜய் போன்ற பெரிய பிளேயர்ஸ் ஆடிய ஜாலி ரோவர்ஸ் கிளப் போன்ற அணிகளுக்காக விளையாடத் தொடங்கினார். ஜே.பி அண்ணா எனக்குக் கிடைச்ச வரம். அவர் இல்லாட்டி இந்த இடத்துக்கு நான் வந்திருக்க மாட்டேன் என பல தருணங்களில் நடராஜன் நெகிழ்ந்திருக்கிறார். சிறுவயது பள்ளித் தோழியான பிரியங்காவை 2018-ல் நடராஜன் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்குக் ஹன்விகா என்கிற மகள் இருக்கிறார். தனது பேத்தி பிறக்கும் வரையிலுமே சாந்தா, சிக்கன் பக்கோடா கடையை நடத்தி வந்திருக்கிறார். பின்னர் பேத்தியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், கடையை மூடினாராம். சிறுவயதில் இவரது தம்பி சக்தி, மளிகைக் கடைகளில் வேலைக்குப் போனவராம். இந்தநிலையில், சின்னம்பட்டியிலேயே அவருக்குத் தனியாக மளிகைக் கடை ஒன்றை நடராஜன் வைத்துக் கொடுத்திருக்கிறார்.
Also Read – `எல்லாம் சும்மா தீயா இருக்கும்…’ சிங்கர் சிம்புவின் பெஸ்ட் பாடல்கள்!
2015 ரஞ்சி சீசனில் மேற்குவங்க அணிக்கெதிராக தமிழ்நாடு அறிமுக வீரராகக் களமிறங்கினர். அதுவரை நல்லா போயிட்டிருந்த அவரோட கரியர்ல, `டேய் அவன் த்ரோ அடிக்கிறான்டா’ என்பது மாதிரியா விமர்சனங்களோடு, பௌலிங் ஆக்ஷனை ரிப்போர்ட் அடித்தனர். இது நடராஜனை மனதளவில் கடுமையாகப் பாதித்திருக்கிறது. பின்னர், தமிழக அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சுப்ரமணியம், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரத் ரெட்டி ஆகியோர் உதவியுடன் பௌலிங் ஆக்ஷனில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதேபோல், தமிழக அணியின் பௌலிங் கோச்சாக இருந்த எல்.பாலாஜியும் இவருக்குப் பெரிய அளவில் உதவியிருக்கிறார். ரன்னிங்கை சரி செய்ய கயிறு கட்டிக் கொண்டே ஓடி பயிற்சி எடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாதம் இப்படியே பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அந்த காலகட்டம், அவரது கரியரில் வேதனையான காலகட்டம் என்றே சொல்லலாம்.
எந்தவொரு இந்தியன் கிரிக்கெட்டருக்கும் இல்லாத பெருமை நம்ம நடராஜன்கிட்ட இருக்கு. அது என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க!
பின்னர், அதிலிருந்து மீண்டு தமிழக அணியில் மீண்டும் இடம்பிடித்ததோடு, டி.என்.பி.எல் தொடரிலும் கோவை அணிக்காக விளையாடினார். டி.என்.பி.எல் மேட்ச் ஒன்றில் வாஷிங்டன் சுந்தர் – அபினவ் முகுந்த் இணைக்கு எதிராக ஆறு பந்துகளில் 6 யார்க்கர்களை வீசியது நடராஜனின் புகழை பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்தது. 2017 ஐபிஎல் சீசனில் முதல்முறையாக பஞ்சாப் அணிக்காக நடராஜன், 3 கோடி ரூபாயில் ஏலம் எடுக்கப்பட்டார். அந்த சீசனில் 6 மேட்சுகள் மட்டுமே விளையாடியிருந்தாலும் பௌலிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொடுத்திருந்தார். 2018 சீசனில் எஸ்.ஆர்.ஹெச் இவரை ரூ.40 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது. புவி, சந்தீப் ஷர்மா, கலீல் அஹமது, சித்தார்த் கவுல் மற்றும் பேசில் தம்பி என ஃபாஸ்ட் பௌலர்கள் நிறைந்திருந்த அந்த டீமில் முதல் இரண்டு சீசனில் விளையாட இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2020 சீசனில் கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சின்ன கிரவுண்டான சார்ஜாவில் பிக் ஹிட்டரான பொல்லார்டுக்கு எதிராக இவர் வீசிய யார்க்கர்கள், யாருடா இந்தப் பையன் என சர்வதேச கிரிக்கெட் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. டென்னில் பால் காலம் தொட்டே யார்க்கர்கள் வீசுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்த நடராஜன், யார்க்கர் கிங்காகவும் அறியப்பட்டார். அதன்பிறகு எஸ்.ஆர்.ஹெச் பிளேயிங் லெவனில் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.
2020-ல் ஆஸ்திரேலியா பயணித்த இந்திய டீமுடன் நெட் பௌலராக நடராஜன் பயணித்தார். மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவத்திக்குப் பதிலாக டி20 போட்டிகளில் சேர்க்கப்பட்டார். முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்படவே, ஒன்டே சீரிஸுக்கான டீமிலும் நடராஜன் இடம்பெற்றார். இந்திய வீரர்கள் அதிகம் பேர் காயமடைந்த சீரிஸ் அதுவாகத்தான் இருக்கும். டி20, ஒன்டே சீரிஸ்களைப் போலவே சீனியர் வீரர்கள் காயம் காரணமாக காப்பாவில் நடந்த முக்கியமான டெஸ்ட் மேட்சில் அறிமுகவீரர்களாக இவரும் வாஷிங்டன் சுந்தரும் களமிறங்கினர். காப்பா மைதானத்தில் தோற்காத ரெக்கார்டை நீண்ட நாட்களாக வைத்திருந்த ஆஸ்திரேலியா, அந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவியது. ரிஷப் பண்ட் மட்டுமல்லாது நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பெர்ஃபாமன்ஸும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்தியாவுக்கு ஈட்டுக் கொடுத்தது. 2020 டிசம்பரில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய நடராஜன், 2021 டிசம்பரில் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னம்பம்பட்டியில் கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் தொடங்கினார். சர்வதேச தரத்தில் இவர் உருவாக்கியிருக்கும் கிரவுண்டில் பல இளம் நடராஜன்கள் உருவாக்கப்படுவார்கள் என்று நம்பிக்கையோடு சொல்கிறார். சென்னை எம்.ஆர்.எஃப் பவுண்டேஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட் போலவே மிகப்பெரிய அளவில் அந்த அகாடமியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இவரது கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே…
கடந்த 2020-21 ஆஸ்திரேலியா சீரிஸ்தான் நம்ம நடராஜன் சர்வதேச போட்டிகள்ல அறிமுகமான சீரிஸ். அந்த சீரிஸ் மூலமே டி20, ஒன்-டே மற்றும் டெஸ்ட் என மூன்று ஃபார்மேட்டுகளிலும் இந்திய அணிக்காக அறிமுகமானார் டி.நடராஜன். இப்படி ஒரே சீரிஸ் மூலமா எல்லா ஃபார்மேட்டுகள்லயும் அறிமுகமான ஒரே இந்திய வீரர் அவர்தான்.
தமிழ்நாடு டீமுக்காக ரஞ்சி டிராபியில் விளையாடியபோது நடராஜனின் பௌலிங் ஆக்ஷனை கம்ப்ளெயிண்ட் செய்தார்கள். அதிலிருந்து அவர் போராடியே மீண்டார். அந்த சீக்வென்ஸ் இன்டர்வெல் பிளாக்காக வரலாம் என்று நினைக்கிறேன். அதேபோல், இந்தியன் டீமுக்காக அவர் முதன்முதலில் விளையாடிய டி20 சீரிஸ் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அந்த சீரிஸை இந்தியா வென்றபிறகு கோப்பையை வாங்கி வந்த கேப்டன் கோலி, அதை நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார். அதை ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் சமூகமும் கொண்டாடித் தீர்த்தது. இந்தியாவுக்காக நடராஜன் அறிமுகமான அந்த சீக்வென்ஸ் எஸ்.கே படத்தின் கிளைமேக்ஸாக வரலாம் என்று தோன்றுகிறது. இன்டர்வெல், கிளைமேக்ஸ் சீக்வென்ஸ் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
நடராஜனோட பெஸ்ட் இன்னிங்ஸ்னா உடனே உங்களுக்கு நினைவுக்கு வர்ற இன்னிங்ஸ் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.