மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் டார்க்கெட்டை சேஸ் செய்த பெங்களூர் அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.
#CSKvRCB மேட்சின் 5 முக்கிய தருணங்கள்!
-
1 தோனியின் போல்ட் மூவ்
மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். கடந்த 2017 சீசனுக்குப் பிறகு பேட்டிங் தேர்வு செய்த இரண்டாவது கேப்டன் தோனிதான்.
-
2 டூப்ளஸி அசத்தல்
சி.எஸ்.கே-வுக்கு இந்தப் போட்டியிலும் டூப்ளஸி - கெய்க்வாட் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த இவர்கள், 9.1 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தனர். கெய்க்வாட் - 33 (25) 4*4, 1*6, டூப்ளஸி - 50 (41) 5*4, 1*6.
-
3 ஜடேஜா கேமியோ
13.5-வது ஓவரில் டூப்ளஸி ஆட்டமிழந்தபோது ஐந்தாவது பேட்ஸ்மேனாக புரமோட் செய்யப்பட்டு களத்துக்கு வந்த ஜடேஜா, 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி பறக்கவிட்டார் ஜடேஜா. அந்த ஓவரில் மட்டும் 37 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால், சி.எஸ்.கே 191/4 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.
-
4 எனெர்ஜடிக் ஸ்டார்ட்
192 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆர்.சி.பி-க்கு கோலி - படிக்கல் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. 3 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்திருந்த இந்த ஜோடியை 4வது ஓவரின் முதல் பந்தில் சாம்கரண் பிரித்தார். கோலி 8 ரன்களில் வெளியேற மறுமுனையில் அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல், 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர்.சி.பியின் பவர்பிளே ஸ்கோர் 65/2.
-
5 ஸ்பின் வலை
ஜடேஜா வீசிய 7வது ஓவரில் இருந்து ஆர்.சி.பி விக்கெட்டுகளை வரிசையாக இழக்கத் தொடங்கியது. பேட்டிங்கில் அசத்திய ஜடேஜா 4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். குறிப்பாக மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ் என ஆர்.சி.பியின் இரண்டு பிக் ஹிட்டர்களுமே ஜடேஜா ஓவரில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினர். இந்த சீசனில் முதல்முறையாக பிளேயிங் லெவனில் இடம்பிடித்த இம்ரான் தாஹிர், 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐபிஎல் 2021-ல் ஆர்.சி.பியின் முதல் தோல்வியாகும். அதேபோல், புள்ளிப்பட்டியலில் சி.எஸ்.கே முதலிடத்தைப் பிடித்தது.
0 Comments