சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 17வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்த நிலையில், பஞ்சாப் அணி இலக்கை 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டியது.
#PBKSvMI மேட்சின் 5 முக்கிய தருணங்கள்
-
1 பவர்பிளே சறுக்கல்
பவர்பிளே முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் - 21/1. ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி இரண்டாவது முறையாக 21 என்ற குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்திருக்கிறது.
-
2 இஷான் கிஷான்
ஒன் டவுன் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக இஷான் கிஷானைக் களமிறக்கிய மும்பையின் முடிவு பாதகமாக அமைந்தது. பவர்பிளே உள்பட முக்கியமான கட்டத்தில் 17 பந்துகளைச் சந்தித்த அவர், 6 ரன்களோடு நடையைக் கட்டினார்.
-
3 அசத்தல் ரோஹித்
முதல் 9 ஓவர்களில் மும்பையின் ஸ்கோர் 39/2. சூர்யகுமார் யாதவுடன் கைகோர்த்து ரோஹித் ஷர்மா அதிரடி காட்ட, 15.2 ஓவர்களில் மும்பை நூறு ரன்களை எட்டியது. ரோஹித் ஷர்மா 63 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா - சூர்யகுமார் யாதவ் ஜோடி 79 ரன்கள் சேர்த்தனர்.
-
4 மிடில் ஆர்டர் சோகம்
பொல்லார்ட், ஹர்திக், குர்ணால் பாண்டியா என மும்பையின் மிடில் ஆர்டர் இந்தமுறையும் சோபிக்கவில்லை. இதனால், அந்த அணியால் 20 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
-
5 ஸ்லோ ஃபினிஷ்
132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இறங்கிய பஞ்சாப் பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது. 8வது ஓவரில் மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ் கெய்லுடன் இணைந்து 17.4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றியை உறுதிப்படுத்தினார் கேப்டன் கே.எல்.ராகுல். சின்ன ஸ்கோர்தான் டார்கெட் என்பதால், ராகுல், கெய்ல் இருவருமே மெதுவாக ரன் சேர்த்தனர். ராகுல் 52 பந்துகளில் 60 ரன்களும், கெய்ல் 35 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
0 Comments