மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 16-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்த நிலையில், பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை 16.3 ஓவர்களில் எட்டியது. இதன்மூலம் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் பெங்களூர் அணி மீண்டும் முதலிடம் பிடித்தது.
-
1 பவர்பிளே திணறல்
பவர்பிளேவில் ராஜஸ்தான் அணி திணறுவது இந்த மேட்சிலும் தொடர்ந்தது. 6 ஓவர்களில் ராஜஸ்தானின் ஸ்கோர் 32-3.
-
2 துபே - டீவாட்டியா
ஷிவம் துபேவின் 46 (32), ராகுல் டீவாட்டியாவின் 40 (23) ரன்களும் ராஜஸ்தான் 177 என்ற சவாலான இலக்கை எட்ட உதவியது.
-
3 சிராஜ் - ஹர்ஷல் படேல்
பவர்பிளே, மிடில் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய முகமது சிராஜ், டெத் ஓவர்களில் மிரட்டிய ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். சிராஜ் - 3/27, ஹர்ஷல் படேல் - 3/47
-
4 படிக்கல் - கோலி கிளாசிக்
178 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 16.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. 6 பௌலர்களைப் பயன்படுத்தியும் ராஜஸ்தானால் இந்த ஜோடியைக் கடைசிவரை பிரிக்க முடியவில்லை.
* தேவ்தத் படிக்கல், தனது முதல் ஐபில் செஞ்சுரியை அடித்தார். படிக்கல் - 101* (52), 11*4, 6*6
* விராட் கோலி இந்தப் போட்டியில் தனது 40வது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்தார். கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்ததும் கோலிதான். கோலி - 72* (47), 6*4, 3*6. -
5 மகளுக்கு டெடிகேஷன்
விராட் கோலி இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த ரெக்கார்டைத் தனது செல்ல மகள் வாமிகாவுக்கு டெடிகேட் செய்தார் கோலி. இந்த வீடியோ செம வைரல். ஐபிஎல் தொடரில் முதல்முறையாக தொடர்ச்சியாக 4 போட்டிகளில் ஆர்.சி.பி வென்றிருக்கிறது.
0 Comments