மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்த நிலையில், இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.5 ஓவர்களில் ராஜஸ்தான் எட்டியது.
#RRvKKR மேட்சின் 5 முக்கிய தருணங்கள்…
-
1 திணறும் ஓபனிங் பாட்னர்ஷிப்
கொல்கத்தா அணிக்கு இந்த முறையும் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமையவில்லை. சுப்மன் கில் 11 ரன்களிலும், நிதிஷ் ராணா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் கொல்கத்தாவின் ஸ்கோர் 25/1.
-
2 மோர்கன் சோகம்
கொல்கத்தா கேப்டன் மோர்கனின் மோசமான ஃபார்ம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக அவர் சோபிக்கவில்லை. ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் இந்தப் போட்டியில் ரன் அவுட்டாகி மோர்கன் வெளியேறினார்.
-
3 ராஜஸ்தானின் கால்குலேட்டட் ரிஸ்க்
கொல்கத்தாவை ரன் குவிக்காமல் தடுத்தது ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்தது. பவர்பிளேவில் 25/1 என்றிருந்த கொல்கத்தாவின் ஸ்கோர் 10 ஓவர்களில் 61/4. கொல்கத்தாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை சொதப்பினர். டெத் ஓவர்களிலும் ராஜஸ்தான் சிறப்பாகப் பந்துவீசியது.
-
4 ஃபினிஷர் கிறிஸ் மோரிஸ்
சி.எஸ்.கே மேட்சில் அதிரடி காட்டிய ரஸல், கம்மின்ஸ், தினேஷ் கார்த்திக், ஷிவம் மவி என 4 விக்கெட்டுகளை டெத் ஓவரின் முக்கிய தருணங்களில் வீழ்த்தி அசத்தினார் கிறிஸ் மோரிஸ். இதனால் கொல்கத்தாவால் 20 ஓவர்களில் 133/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
-
5 நிதான சஞ்சு சாம்சன்
134 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் சிறப்பான தொடக்கம் கொடுக்கவில்லை. ஜெய்ஸ்வால் 22, ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார். கொல்கத்தா அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் தோல்வியைச் சந்தித்து புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கிறது.
0 Comments