ஐபிஎல் 2022

IPL 2022 Retention: 4 அணிகளுக்கு புதிய கேப்டன்; ஏலத்துக்குப் போகும் ராகுல், ரஷீத் – ஐபிஎல் ரீடென்ஷன் ஹைலைட்ஸ்!

IPL 2022 Retention: ஐபிஎல் 2022 தொடருக்கு முன்னதாக எட்டு ஐபிஎல் அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. தோனி, கோலி, ரோஹித் ஷர்மா, வில்லியம்சன், ரிஷப் பன்ட் உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்…

ஐபிஎல் 2022

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகளோடு சேர்த்து 10 அணிகள் விளையாட இருக்கின்றன. அந்தத் தொடருக்கு முன்னதாக வீரர்கள் மெகா ஏலம் இந்த மாத இறுதி அல்லது ஜனவரி 2022-ல் நடக்கும் என்று தெரிகிறது. ஏலத்துக்குச் செல்வதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதிகபட்சமாக 3 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள், சர்வதேச போட்டிகளில் விளையாடாத 2 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ள முடியும். தக்கவைக்கப்பட்ட வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கான காலக்கெடு நவம்பர் 30-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 9.30 மணிக்கு மேல் இதுகுறித்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஐபிஎல் 8 அணிகள் ரூ.296 கோடி செலவில் 27 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்களில் 19 பேர் இந்திய வீரர்கள், 8 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

IPL 2022 Retention

அதன்படி, ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் யார், யார் – ஏலத்துக்கு முன்பாக அவர்களிடம் மீதமிருக்கும் தொகை எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே எதிர்பார்க்கப்பட்டதுபோலவே, ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), எம்.எஸ்.தோனி (12 கோடி ரூபாய்), மொயின் அலி (8 கோடி ரூபாய்), ருதுராஜ் கெய்க்வாட் ( 6 கோடி ரூபாய்) ஆகியோரைத் தக்கவைத்துக் கொண்டது. அனுமதிக்கப்பட்ட ரூ.90 கோடியில், ரூ.42 கோடி இதற்காக செலவிடப்பட்ட நிலையில், ரூ.48 கோடியோடு மெகா ஏலத்தில் பங்கேற்கிறது.

ரீடெய்ன் செய்யப்படாத முக்கிய வீரர்கள்:

சுரேஷ் ரெய்னா, டி.ஜே.பிராவோ, பாப் டூப்ளஸிஸ், தீபக் சஹார்.

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்

ரிஷப் பன்ட் தலைமையில் கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ், கேப்டனை ரூ.16 கோடியில் தக்க வைத்துக் கொண்டது. இதுதவிர, அக்ஸர் படேல் (ரூ.9 கோடி), பிரித்வி ஷா (ரூ.7.5 கோடி), நோர்கியே (ரூ.6.5 கோடி). வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க அந்த அணியிடம் ரூ.47.5 கோடி கையிருப்பு இருக்கிறது.

ரீடெய்ன் செய்யப்படாத முக்கிய வீரர்கள்:

ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிஸோ ரபாடா, அவேஷ் கான்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா இந்த முறை ஆந்த்ரே ரஸல் (ரூ.12 கோடி), வருண் சக்கரவர்த்தி (ரூ.8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (ரூ.8 கோடி), சுனில் நரேன் (ரூ.6 கோடி) ஆகியோரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கேப்டன் மோர்கன், ஏற்கனவே கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரீ-டெய்ன் செய்யப்படாத நிலையில், 2022 சீசனில் புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும். கையிருப்புத் தொகை ரூ.48 கோடி.

ரீடெய்ன் செய்யப்படாத முக்கிய வீரர்கள்:

இயான் மோர்கன், சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

ஐந்து முறை சாம்பியனான மும்பை, கேப்டன் ரோஹித் ஷர்மா (ரூ.16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (ரூ.12 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.8 கோடி), பொல்லார்ட் (ரூ.6 கோடி) ஆகியோரைத் தக்கவைத்திருக்கிறது. கையிருப்புத் தொகை – ரூ.48 கோடி.

ரீடெய்ன் செய்யப்படாத முக்கிய வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், டிரெண்ட் போல்ட்

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்

கேப்டன் ராகுல் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், மயங்க் அகர்வால் (ரூ.12 கோடி), அர்ஷ்தீப் சிங் (ரூ. 4 கோடி) என இரண்டு இந்திய வீரர்களை மட்டும் அந்த அணி தக்கவைத்திருக்கிறது. ரூ.72 என்ற அதிகபட்ச தொகையோடு ஏலத்தில் கலந்துகொள்ளும் பஞ்சாப் பெரிய தொகை கொடுத்து முக்கிய வீரர்களை அணிக்குள் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம்.

ரீடெய்ன் செய்யப்படாத முக்கிய வீரர்கள்:

கே.எல்.ராகுல், ரவி பீஷ்னோய், நிகோலஸ் பூரான்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த சில சீசன்களாகத் தடுமாறிக் கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி), ஜோஸ் பட்லர் (ரூ.10 கோடி), யாஸ்வி ஜெய்ஷ்வால் (ரூ.4 கோடி) ஆகியோரைத் தக்கவைத்திருக்கிறது. அதேநேரம் ரூ.62 கோடியோடு ஏலத்துக்குச் செல்லும் இந்த அணி பல முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று நம்பலாம்.

ரீடெய்ன் செய்யப்படாத முக்கிய வீரர்கள்:

ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி (ரூ.15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (ரூ. 11 கோடி), முகமது சிராஜ் (ரூ.7 கோடி) ஆகியோரைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. டிவிலியர்ஸ் ஓய்வு அறிவித்துவிட்ட நிலையில், கேப்டனாகவும் ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க ஆர்.சி.பி திட்டமிடலாம்.

ரீடெய்ன் செய்யப்படாத முக்கிய வீரர்கள்:

யுஸ்வேந்திர சஹால், தேவ்தத் படிக்கல், ஹர்ஷல் படேல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கேப்டன் கேன் வில்லியம்சன் (ரூ.14 கோடி), ஜம்மு காஷ்மீர் வீரர்களான அப்துல் சமத் (ரூ.4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி) ஆகியோரை சன்ரைசர்ஸ் தக்கவைத்திருக்கிறது. ரூ.68 என்ற பெரிய தொகையோடு ஏலத்துக்குப் போகிறது.

ரீடெய்ன் செய்யப்படாத முக்கிய வீரர்கள்:

ரஷீத் கான், டேவிட் வார்னர், ஜானி பேரிஸ்டோவ், புவனேஷ்வர் குமார்.

Also Read – IPL 2022: லக்னோ, அகமதாபாத்… ரூ.12,715 கோடிக்கு புதிய அணிகள்; ஐபிஎல் தொடரில் என்ன மாற்றங்கள் வரும்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top