எந்த ஐபிஎல் டீம் எந்த கோலிவுட் ஹீரோவோட மேட்ச் ஆவாங்க… ஒரு ஜாலி கற்பனை!

ஐபிஎல் தொடர்ல இதுக்கு முன்னாடி வரைக்கும் விளையாடிட்டு இருந்த 8 டீம்களையும் நம்ம கோலிவுட் ஹீரோக்கள் கூட ஒப்பிட்டா எப்படி மேட்ச் ஆகுதுனு பார்க்கலாமா… இது ஒரு சின்ன கற்பனைதாங்க.. ‘No Offence’ ரசிகர்களே!

ஐபிஎல்

கிரிக்கெட்னாலே இந்திய ரசிகர்களுக்கு ஊதா கலர் இல்லாட்டி வெள்ளைக் கலர் ஜெர்ஸிதான் அப்டினு இருந்த ஒரு நிலைமையை மாத்தி யெல்லோ ஃபீவர், ஆரஞ்சு ஆர்மி, Bleed Blue-னு கலர் கலரா மட்டும் இல்லீங்க… ரசிகர் நினைச்சுக் கூட பார்க்காத காம்பினேஷனை சாத்தியப்படுத்துனது ஐபிஎல் தாங்க.. 2008 தொடங்கி இதுவரைக்கும் 14 சீசன்கள் முடிஞ்சிருக்கு. பதினஞ்சாவது சீசனுக்கு ஆரவாரமா வீரர்களோட ரசிகர்களும் தயாராகிட்டாங்க.

ஒவ்வொரு ஐபிஎல் டீமுக்கும், அதன் ரசிகர்களுக்கு ஒரு Characterization உருவாகிருச்சுனே சொல்லலாம். அப்படி டீமைப் பொறுத்து ரசிகர்களுக்கும் சோசியல் மீடியா தொடங்கி களத்துக்கு வெளியில சண்டை செஞ்சுட்டு இருக்காங்க.. இப்படியான சூழல்ல ஒவ்வொரு ஐபிஎல் டீமோட Nature-க்கு ஏத்த மாதிரி நம்ம கோலிவுட் ஹீரோக்களோட ஒப்பிட்டா எப்படி இருக்கும்? இந்த சின்ன கற்பனையோட விளைவுதான் இந்த வீடியோ.. சரி வாங்க எந்த ஐபிஎல் டீம் நம்மளோட எந்த ஹீரோவோட மேட்ச் ஆகுறாங்கனு பார்ப்போம்.

டெல்லி கேப்பிடல்ஸ் – சி.கா!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

துடிப்பான இளம் படையா இருக்க ஒரு டீம். இந்த டீம் பேல பெருசா நெகட்டிவ் எதுவும் இருக்காது. இந்த கான்செப்ட்ல ஃபிட் ஆகுற கோலிவுட் ஹீரோனு பார்த்தா அது சிவகார்த்திகேயன்தான். எல்லாரோடையும் ஒரு டெம்போ மெயிண்டெய்ன் பண்ணுவாரு. டெல்லி டீமைப் பார்த்தீங்கன்னா நம்ம வீட்டுப் பசங்க, சின்ன பசங்க ஜெயிச்சுட்டுப் போகட்டும்னு எல்லாருக்கும் ஒரு குட்வில் இருக்கும். அதேமாதிரிதான் சி.கா-வும் பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி அவரோட வெற்றி எல்லாருக்கும் ஒரு சந்தோஷம் கொடுக்கும்.

பஞ்சாப் கிங்ஸ் – தனுஷ்

தனுஷ்
தனுஷ்

எல்லா சீசன்லயும் ஏதாவது ஒரு பிளேயர் மாங்கு மாங்குனு போராடிட்டு பெர்ஃபாமன்ஸ் கொடுத்துட்டு இருப்பான்.. ஆனா, ஓவரால் டீம் பெர்ஃபாமன்ஸ்னு பார்த்தா சொதப்பிடுவாங்க.. தனி ஒருவனா போராடுனா சில, பல மேட்சுகள்ல ஜெயிக்கலாம், ஆனா எல்லா மேட்ச்லயுமே அப்படி ஒரு வெற்றியைப் பதிவு பண்ண முடியுமானு கேட்டா நிச்சயம் இல்லைன்கிறதுதான் ஆன்ஸர். இதே மாதிரிதான் தனுஷ், அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டர்ல பிச்சு பெடலெடுத்துட்டு இருப்பார். அப்படி சில படங்களைத் தன்னோட பெர்ஃபாமென்ஸால தாங்கிப் பிடிச்சுடுவார். ஆனா, இது எல்லா இடத்துலையும் அவருக்கு வொர்க் அவுட் ஆகாதுன்றதுதான் கள நிலவரம்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – சூர்யா

சூர்யா
சூர்யா

இவங்களோடு விளையாட்டு தனி ரகமா இருக்கும். எந்த தப்பு தண்டாவும் பண்ணாம நேர் வழியில Geninue ஆ விளையாடுற டீம். பெருசா மாஸ் ஓபனிங் மாதிரியான கேம் பிளே இருக்காது. சி.எஸ்.கே, மும்பை டீம்லாம் பார்த்தீங்கன்னா ஒவ்வொரு கேமுக்கும் தடாலடியா விளையாடுவாங்க. அப்படியான பெர்ஃபாமன்ஸ் இவங்க கிட்ட இருக்காது. ஆனால், திடீர்னு பார்த்தா ஃபைனல்ஸ்ல இருப்பாங்க.. அதே மாதிரிதான் நம்ம ஹீரோ சூர்யாவும், அவரோட படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கோ இல்லியோ, ஒரு படமா நல்ல பெயரை வாங்கிடும். அதேமாதிரி, வசூல் ரீதியாவும் நல்ல பெயரை சம்பாதிச்சுடும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – விஜய் சேதுபதி

விஜய்  சேதுபதி
விஜய் சேதுபதி

ஒரு சீசன்ல பயங்கர பாப்புலரா இருப்பாங்க… இன்னொரு சீசன்ல பார்த்தா பாயிண்ட்ஸ் டேபிள்ல கடைசில இருப்பாங்க. அதே மாதிரிதான் வி.சேவும் ஒரு வருஷம் பார்த்தீங்கன்னா அஞ்சாறு படம் ஹிட் கொடுப்பார், இன்னொரு வருஷம் பார்த்தீங்கன்னா ஹிட்டே இல்லாம போய்டும். தடலாடியா முடிவெடுக்குறது இவங்களோட நேச்சரா இருக்கும். திடீர்னு பார்த்தா நல்ல விளையாடிக்கிட்டு இருந்த வார்னரை பெஞ்ச்ல உட்கார வைப்பாங்க. அதேமாதிரிதான் விஜய் சேதுபதியும் வில்லன் மாதிரியான மாஸ் ஃபெர்பாமன்ஸ் கொடுத்து டாப் கியர்ல போய்ட்டு இருக்கும்போது, கடைசி விவசாயி மாதிரியான ஒருசில சீன்களே வந்துட்டுப் போற படத்தையும் பண்ணுவார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – விக்ரம்

விக்ரம்
விக்ரம்

ஒரு டீமா பேப்பர்ல பார்த்தீங்கன்னா பயங்கர ஸ்ட்ராங்கான டீமா இருப்பாங்க.. களத்துல இவங்க சண்டையும் சிறப்பாவே செய்வாங்க. ஆனால், ரிசல்ட்னு பார்த்தா இவங்களுக்கு சாதகமா இருக்க வாய்ப்பு ரொம்பவே கம்மியாதான் இருக்கும். அதே மாதிரிதான் நம்ம விக்ரமும் பயங்கரமான பெர்ஃபாமன்ஸ் கொடுப்பார். ஆனால், இவருக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்குறது இல்லனு ஒரு குறை இருக்கு. ஆர்.சி.பி ஏன் தோக்குறாங்கங்கன்ற காரணம் யாருக்குமே தெரியாது. அதேதான் இங்கயும் நிலைமை.

ராஜஸ்தான் ராயல்ஸ் – சிம்பு

சிம்பு
சிம்பு

எல்லாருக்கும் முன்னால முதல்ல வெற்றியைப் பதிவு செஞ்ச டீம்னா ராஜஸ்தான்தான். ஆனா, அதுக்கப்புறம் அவங்க எடுக்குற முடிவுகள்லாம் சொதப்பலாவே இருக்கும். நம்ம சிம்புவும் அப்படித்தான், இளம் வயசுலேயே ஒரு ஹீரோவாவும் வல்லவன் மாதிரியான படங்கள் மூலமா ஒரு டைரக்டாரவும் Established ஆனவர். ஆனா, அதுக்கப்புறம் அவரோட கரியர்ல நிறைய சொதப்பல்கள்தான் மிஞ்சுச்சேனே சொல்லலாம்.

மும்பை இந்தியன்ஸ் – விஜய்

விஜய்
விஜய்

மாஸான ஓபனிங், ரசிகர்கள் வரவேற்புனு இவங்க ஆடுற ஒவ்வொரு மேட்சுமே கவனம் பெறும். இண்டர்நேஷனல் லெவல்ல பல பெரிய பிளேயர்கள் இவங்க டீம்ல இருப்பாங்க.. அதிக முறை ஃபைனல்ல ஜெயிச்சு சக்ஸஸ் ரேட் ஜாஸ்தியா இருக்கும். அதே மாதிரியான ஒரு வரவேற்புதான் விஜய் படங்களுக்கும் இருக்கும். மாஸ் ஒபனிங்கோடு வெளியாகும் இவரது படங்களுக்கும் சக்ஸஸ் ரேட் அதிகமாகவே இருக்கும். அதிக முறை கப் அடிச்ச டீம் மும்பைன்கிற மாதிரி, அதிக வசூல் படங்கள் அதிகம் கொடுத்திருப்பாரு விஜய்.

சென்னை சூப்பர் கிங்ஸ் – அஜித்

அஜித்
அஜித்

வெறித்தனமான ஃபேன்ஸ் இருக்க டீம்னா ஐபிஎல்ல சி.எஸ்.கேதான். ஜெயிச்சாலும், தோத்தாலும், ஏன் ஐபிஎல்ல இருந்து சஸ்பெண்டே ஆனாலும் ரசிகர்கள் கொண்டாடுவாங்க. அதேமாதிரிதான், அஜித்துக்கும் வெறித்தனமான ஃபேன்ஸ் ஜாஸ்தியா இருப்பாங்க. படம் சூப்பர்ஹிட்டானாலும் ஃபிளாப் ஆனாலும் கொண்டாடித் தீர்த்துடுவாங்க. சி.எஸ்.கே மேட்சா பி.பி டேப்ளெட்டை பக்கத்துலயே வைச்சுக்கோங்கனு ஒரு காமெடி சொல்லுவாங்க. பல மேட்சுகளையும் கடைசி ஓவர் வரை இழுத்துட்டே போய்தான் முடிப்பாங்க. அப்படியாகவே, அஜித் படங்களுக்கான அப்டேட்டுகளும் சரியான நேரத்துல வெளியாகாது. எப்படா கொடுப்பாங்க அப்டேட்டுனு ரசிகர்கள் டென்ஷனாவே வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. வலிமை அப்டேட் இதுக்கு நல்ல எக்ஸாம்பிள்னே சொல்லலாம்.

இது மாதிரி புதுசா வந்திருக்க குஜராத், லக்னோ டீம்கள் நம்மளோட எந்த ஹீரோக்களோட மேட்ச் ஆவாங்கனு கமெண்ட்ல சொல்லுங்க…

Also Read – IPL 2022: `எடுத்துப்பாரு ரெக்கார்டு’ – சி.எஸ்.கே கேப்டனாக தோனி… சாதனைகள் என்னென்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top