முதல்முறையாக மாறும் #CSK கேப்டன்ஷிப் – தோனிக்குப் பின் சி.எஸ்.கேவின் ஃபுல்டைம் கேப்டனாகும் ஜடேஜா!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தொடங்க இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், சி.எஸ்.கேவின் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து தோனி விலகியிருக்கிறார். ஜடேஜா புதிய கேப்டனாகப் பொறுப்பேற்கிறார்.

தோனி - ஜடேஜா
தோனி – ஜடேஜா

சி.எஸ்.கே

ஐபிஎல் தொடரின் சக்ஸஸ்ஃபுல் டீம்களில் முக்கியமான அணியாக வலம் வருவது சென்னை சூப்பர்கிங்ஸ். கடந்த 2008 ஐபிஎல் தொடரின் முதல் சீசன் தொடங்கியது முதலே சி.எஸ்.கேவின் கேப்டனாக தோனி செயல்பட்டு வந்தார். துணை கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னா, தோனி விளையாடாத போட்டிகளில் கேப்டன் பொறுப்பை வகித்தார். ஆனால், கடந்த 14 சீசன்களில் சி.எஸ்.கே அணி பங்கேற 12 சீசன்களிலும் தோனி தலைமையில்தான் களம்கண்டது.

தோனி - ஜடேஜா
தோனி – ஜடேஜா

முடிவுக்கு வரும் தோனி கேப்டன்ஷிப்

இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் 15-வது சீசன் மார்ச் 26-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், சி.எஸ்.கே முக்கியமான முடிவை எடுத்திருக்கிறது. சி.எஸ்.கேவின் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார். ஐபிஎல் சீசனில் ஜடேஜா கேப்டனாகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை. ஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா, கடந்த 2012 முதல் சி.எஸ்.கேவின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வருகிறார். இந்த சூழலில் அவருக்கு சென்னை அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் தோனி அடுத்த இரண்டு சீசன்கள் விளையாடுவார் என்று கூறப்பட்டிருக்கிறது.

Also Read – IPL 2022-ல் கலக்கப்போகும் 14 தமிழக வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top