ரிக்கி பாண்டிங்

`அசால்டு’ சேதுவா… அ.குமாரா… ரிக்கி பாண்டிங் சொதப்பல்ஸ்!

கிரிக்கெட் ஃபீல்டுல ஜிகர்தண்டா `அசால்டு’ சேது கணக்கா பில்டப் கொடுக்கப்பட்டுட்டு வர்றவர் ரிக்கி பாண்டிங். ஆனால், அதே பாண்டிங் அ(அழுகுனி) குமாரான மொமண்ட்ஸ் ஆன் ஃபீல்டுலயும் சரி ஆஃப் ஃபீல்டுலயும் சரி நிறையவே இருக்குங்குறதை ஹிஸ்டரி பதிவு பண்ணி வைச்சிருக்கு. அதப்பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

2011 வேர்ல்டு கப் சீரிஸ்ல பாகிஸ்தான் மேட்ச்ல கீப்பர்கிட்ட கேட்ச் கொடுத்து அவுட் ஆன பிறகும் பாண்டிங் கிரீஸை விட்டு வெளியேறல… தேர்டு அம்பயர் அவுட் கொடுத்ததும்தான் வெளியேறுனார். இதைப்பத்தி பேசுறப்ப, பேட்ல பட்டுச்சுனு தெரியும். அம்பயர் அவுட் கொடுக்காம எப்படி வெளியபோறது?’னு சொல்லிருப்பார். இதே சம்பவத்தை பாண்டிங் முன்னாடியே பலமுறை பண்ணவர்தான். ஆனா, அந்த சீரிஸ்ல இதேமாதிரி ஒரு சிச்சுவேஷன்ல சச்சின், அவராவே வெளியேறியிருந்ததால, டிஸ்கஷன்ஸ் வலுவா நடந்துச்சு. இதே மாதிரி ஒரு சம்பவத்துல பாண்டிங்குக்கே விபூதி அடிச்சிருந்தார் நம்ம சேவாக். 2008 மொகாலி டெஸ்ட்ல 90ஸ்ல பேட்டிங் பண்ணிட்டு இருந்த சேவாக் பேட்ல பட்டு கீப்பர் கேட்ச் ஆகிடும். ஆனாலும் அம்பயர் நாட் அவுட் கொடுத்ததால கிரீஸ்ல இருப்பார். அப்போ சேவாக் கிட்ட அவுட் பத்தி பாண்டிங் கேக்க, ஆமா டிப்தான் ஆச்சு. அம்பயர் அவுட் கொடுக்கலலனு சொல்லவே, பாண்டிங் நேரா போய் அம்பயரைக் கூட்டிட்டு வருவார்.இல்லல்ல சார் அவர் பொய் சொல்றார்’னு அவரோட ஃபிளேவர்லயே பதிலடி கொடுத்திருப்பார் சேவாக்.

2008 சிட்னி டெஸ்ட். மங்கி கேட், ஆன்ஃபீல்டு அம்பயர்களின் முடிவுகளில் ஆதிக்கம் பண்ணதுனு பாண்டிங்கை கிரிக்கெட் உலகமே விமர்சனம் பண்ண மேட்ச். அப்போ, சைமண்ட்ஸ் ஹர்பஜனைப் பார்த்து சொன்ன விஷயம் பெரிய இஷ்யூ ஆச்சு. ஆனா, அதுக்கப்புறம் பாண்டிங்கும் கில்கிறிஸ்டும் சைமன்ட்ஸுக்கு சப்போர்ட் பண்றாங்க. ஹர்பஜனை 3 மேட்ச் சஸ்பெண்ட் பண்ணவும் மொத்த இந்தியன் டீமும், சீரியஸை விட்டே வாக் அவுட் பண்ண ரெடியானது. பெருசா கோபமே படாத சச்சினே, கேப்டன் கும்ப்ளே கிட்ட பேசிருந்தாலே பாதி பிரச்னையை முடிச்சிருக்கலாம். ஆனா, அவங்க மேல தப்ப வைச்சிக்கிட்டு முதல் ஆளா மேட்ச் ரெஃப்ரிகிட்ட போனதெல்லாம் டூமச்னு சொல்லிருந்தார். அதேமேட்சோட செகண்ட் இன்னிங்ஸ்ல கிட்டத்தட்ட அம்பயர் மாதிரிதான் பாண்டிங் செயல்பட்டார்னு ஹர்பஜன் குற்றம்சாட்டினார். அதுவும் ஸ்லிப்ல கங்குலி அடிச்ச பந்தை கிளார்க் பிடிச்ச கேட்ச் கிளியரா தரைல பட்டது தெரிஞ்சிருந்தும் பாண்டிங் அப்பீல் போனாரு. இதோட உச்சமா, அம்பயர் மார்க் பென்சன் கேட்ச் பிடிச்சது உறுதியானு பாண்டிங்கிட்ட கேட்டுட்டு அவுட் கொடுத்ததெல்லாம் கிரிக்கெட் ஃபீல்டு பார்க்காதது. அப்போ கமெண்ட்ரில இருந்த கவாஸ்கர், `That is nonsense, utter nonsense’னு விமர்சிச்சிருந்தார். இதைப்பத்தி பின்னாட்களில் பாண்டிங் பேசும்போது, `Low Point of Captaincy’ னு சொல்லிருந்தாரு.

Ponting: At the Close of Play புக்ல மைக்கேல் கிளார்க் பத்தி அவர் எழுதியிருந்த ஒரு விஷயத்தை மார்க் டெய்லர், ஷேன் வார்னேனு அவரோட கொலீக்ஸே கண்டிச்சுப் பேசுனாங்க. ஆஸி துணை கேப்டனா கிளார்க் இருந்தப்போ அவருக்கும் மாடலா இருந்த லாரா பிங்கில் இடையிலான ரிலேஷன்ஷிப் பத்தி அவர் சொல்லிருந்த விஷயங்கள் சர்ச்சையாச்சு. இதப்பத்தி கடுமையான விமர்சனத்தைப் பதிவு பண்ண வார்னே, கிளார்க் விஷயத்துல பாண்டிங் பொறாமைபடுறார்னு ஓட்டியிருந்தார்.

Also Read – முரளிதரன் பந்தை எறிந்தாரா… ஆஸி. கிரிக்கெட் போர்டின் சதியை முறியடித்த பின்னணி!

பொதுவா, எதிர் டீம் பிளேயர்ஸை ஓவரா வம்பிழுக்குற ஆஸ்திரேலியன் பிளேயர்ஸ், அதுக்கு, `ஆன்ஃபீல்டுல நடக்குற விஷயங்கள் அங்கேயே முடிஞ்சு போய்டனும்’னு ஆஸ்திரேலியன் பிளேயர்ஸ் அடிக்கடி சமாளிபிகேஷன் கொடுப்பாங்க. ஆனா, அதை பாண்டிங் அந்த வாக்கை எந்த இடத்துலயும் காப்பாத்துனது இல்ல. மங்கி கேட் தொடங்கி எல்லா சர்ச்சைகளப்பவும் தான் மேல தப்பு இல்லைங்குறதுக்காக அவர் எந்த எல்லைக்கும் போய் விளக்கம் கொடுப்பாரு.

1999 சிட்னி பிரஸ்மீட்டுக்கு இடது கண்ணுல காயத்தோட வந்தார் பாண்டிங். முந்தின நாள் நைட்கிளப் ஒண்ணுல நடந்த சண்டைல பட்ட காயம்னு உறுதியாச்சு. ஆல்கஹால் பிரச்னை அது. அதுக்காக கவுன்சிலிங் போகப்போறேன். இதுமாதிரியான சம்பவங்கள் இனிமேல் நடக்காம இருக்க என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்வேன்னும் சொல்லிருப்பார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆஸ்திரேலியாவோட சக்ஸஸ்ஃபுல் கேப்டன், தொடர்ச்சியா 2 முறை வேர்ல்டு கப் அடிச்சவர், பேட்டிங் கிரேட்னு பாண்டிங்கோட அசாதாரண சாதனைகளை அசைச்சுக்க முடியாதுங்குறது உண்மைதான். பாண்டிங் பண்ண சம்பவங்கள்ல முக்கியமான சம்பவம்னா எதைச் சொல்வீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top