IPL 2022: `எடுத்துப்பாரு ரெக்கார்டு’ – சி.எஸ்.கே கேப்டனாக தோனி… சாதனைகள் என்னென்ன?

சென்னை சூப்பர்கிங்ஸின் கேப்டனாக கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகத் தொடர்ந்த எம்.எஸ்.தோனி, அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். சி.எஸ்.கே-வின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டிருக்கிறார். சென்னை கேப்டனாக தோனியின் ரெக்கார்டு என்ன?

Dhoni
Dhoni

சி.எஸ்.கே கேப்டன்

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டு முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகத் தொடர்ந்து வந்தவர் மகேந்திரசிங் தோனி. ஆனால், 2022 சீசன் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னர் அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சி.எஸ்.கேவின் கேப்டனாக 204 போட்டிகளில் தோனி விளையாடியிருக்கிறார். இதில், 121 போட்டிகளில் அந்த அணி வென்றிருக்கிறது. வெற்றி சதவிகிதம் 59.50%. மொத்தம் 82 போட்டிகளில் சி.எஸ்.கே தோற்றிருக்கிறது. ஒரு போட்டி முடிவில்லாமல் டையில் முடிந்திருக்கிறது.

சாம்பியன் சி.எஸ்.கே

ஐபிஎல் தொடரில் இதுவரை 4 முறை சி.எஸ்.கே சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு (5 முறை) அடுத்தபடியாக அதிக முறை கோப்பைகள் வென்றவர் தோனிதான். அதேபோல், மூன்று முறை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. மேலும், சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சென்னை 2010 மற்றும் 2014 என இரண்டு முறையும் சாம்பியனாக வாகை சூடியிருக்கிறது.

Dhoni
Dhoni

ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடியபோது, கேப்டனாக 300 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். மேலும், ஐபிஎல் கோப்பையை 40-வது வயதில் வென்ற தோனி, முதல் சீசனில் ஷேன் வார்னே (39 வயது), இரண்டாவது சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் கில்கிறிஸ்ட் (37 வயது) ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்தார்.

Also Read – IPL 2022: ரொனால்டோவின் ‘Sui Celebration’-னோடு கொண்டாடிய சிராஜ் – என்ன அர்த்தம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top