இவங்கலாம் தோனியோட டீம் மேட்டா இருந்தவங்களா… அதிகம் வெளியில் தெரியாத 5 பேர்!

சி.எஸ்.கே கேப்டன் தோனியின் அதிகம் வெளியில் தெரியாத 5 ஐபிஎல் டீம் மேட்ஸ் பத்திதான் இந்தக் கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

தோனி

ஐபிஎல் தொடங்கிய 2008-ம் ஆண்டு முதல் கடந்த 2021 சீசன் வரை சி.எஸ்.கே கேப்டனாக இருந்தவர் மகேந்திரசிங் தோனி. இடையில் 2 ஆண்டுகள் சி.எஸ்.கே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தபோது புனே அணிக்காவும் இவர் விளையாடியிருந்தார். 2022 ஐபிஎல் சீசன் தொடங்க சில நாட்களே இருந்தபோது, சி.எஸ்.கே-வின் கேப்டன்ஷிப்பை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக ஜடேஜா அந்த அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.

களத்தில் சிறந்த வியூக வகுப்பாளராகக் கருதப்படும் தோனியுடன் ஒரே அணியில் விளையாட வேண்டும் என்று உலகின் பல வீரர்களும் விரும்புவதுண்டு. அப்படி, தோனியுடன் விளையாடிய, அதேநேரம் அதிகம் வெளியில் தெரியாத அவரின் 5 டீம் மேட்ஸ் பற்றிதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.

ஸ்காட் ஸ்டைரிஸ்

ஸ்காட் ஸ்டைரிஸ்
ஸ்காட் ஸ்டைரிஸ்

நியூசிலாந்தின் பேட்டிங் ஆல்ரவுண்டரான ஸ்காட் ஸ்டைரிஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். ஆனால், 2011 சீசனில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். சி.எஸ்.கேவுக்காக இரண்டே இரண்டு போட்டிகளில் விளையாடிய இவர், அந்தப் போட்டிகளில் மொத்தமே 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இரண்டு போட்டிகளுக்குப் பிறகு இவருக்கு சி.எஸ்.கே நிர்வாகம் பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கவில்லை. இருப்பினும், 2011 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே, இறுதிப்போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மிட்செல் மார்ஷ்

மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ்

தோனி, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடியபோது, அந்த அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷும் இடம்பெற்றிருந்தார். 2016 ஐபிஎல் சீசனில் புனே அணிக்காக 3 போட்டிகளில் விளையாடினார் மார்ஷ். அந்த 3 போட்டிகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2017 சீசனில் அவரை புனே அணி மீண்டும் ஏலத்தில் எடுத்தது. ஆனால், அந்த சீசனில் தோள்பட்டை காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாஹீரை புனே அணி எடுத்தது. 2017 சீசனில் இறுதிப் போட்டி வரை புனே அணி முன்னேறியபோதிலும், ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியைச் சந்தித்தது.

ஜஸ்டின் கெம்ப்

ஜஸ்டின் கெம்ப்
ஜஸ்டின் கெம்ப்

தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டரான ஜஸ்டின் கெம்ப், 2010-ல் கோப்பையை வென்ற சி.எஸ்.கே அணியில் இருந்தார். அந்த சீசனில் சென்னை அணிக்காக அறிமுகமான கெம்ப், இறுதிப் போட்டியில் இடம்பெறவில்லை. மொத்தம் 5 போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருந்த அவர், பேட்டிங்கில் மொத்தமே 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், மற்ற போட்டிகளில் விக்கெட் எடுக்கவில்லை. 2010 சீசனுக்குப் பிறகு ஜஸ்டின் கெம்ப் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

நூவன் குலசேகரா

நூவன் குலசேகரா
நூவன் குலசேகரா

இலங்கை வேகப்பந்து வீச்சாளரான குலசேகரா, சி.எஸ்.கேவுக்காக 2012 சீசனில் விளையாடினார். 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட குலசேகரா, அந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டார். மொத்தமாக 14 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த 5 போட்டிகளில் ஒன்றில் குலசேகராவுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சீசனில் பெரிதாக ஜொலிக்காத குலசேகராவை, அடுத்த சீசனில் சி.எஸ்.கே எடுக்கவில்லை.

ஸ்காட் போலண்ட்

ஸ்காட் போலண்ட்
ஸ்காட் போலண்ட்

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட். மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய இவர், 2016 சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மொத்தம் 7 ஓவர்கள் பந்துவீசிய போலண்ட், 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன்பின்னர், டீம் பேலன்ஸ் உள்ளிட்ட காரணங்களால் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

Also Read –

Also Read – IPL 2022: `எடுத்துப்பாரு ரெக்கார்டு’ – சி.எஸ்.கே கேப்டனாக தோனி… சாதனைகள் என்னென்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top