கிரிக்கெட் உலகத்துல மட்டுமில்லீங்க… ஒட்டுமொத்த ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுமே உத்துக் கவனிக்குற மேட்ச்னா அது இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்தான்… கிரிக்கெட் உலகத்தோட மிகப்பெரிய Rivelry-க்கள்ல முக்கியமான இந்த இரு நாடுகளும் முதல் முறையா எங்க எப்போ சந்திச்சுக்கிட்டாங்க தெரியுமா.. இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் எப்பவுமே ஸ்பெஷலா ஏன் சொல்றாங்க… அதுக்கான 3 முக்கியமான காரணங்களைப் பத்திதான் இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறோம்.
Rivalry

பொதுவா ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுல ஒவ்வொரு டோர்னமெண்ட்லயும் சில டீம்கள் இடையேயான மேட்ச்னாலே ரசிகர்கள் பயங்கரமா எங்கேஜ் ஆகுவாங்க. ஃபுட்பால்ல ஸ்பானிஷ் லீக்கான லா லிகால ரியல் மேட்ரிட் – பார்சிலோனா மேட்சுக்கு ரசிகர்கள் வெறித்தனமா வெயிட் பண்ணுவாங்க. ஐபிஎல்ல சி.எஸ்.கே – மும்பை இந்தியன்ஸ் மேட்சும் அந்த லிஸ்ட்லதான் வரும். இந்த மாதிரியான மேட்சுகள்தான் அந்த தொடர்களோட ஹைலட்டாவே இருக்கும். அப்படியான மேட்ச்களின்போது ரெண்டு டீமும் களத்துல சண்டை செஞ்சா, அந்த அணிகளோட ரசிகர்கள் சோசியல் மீடியா தொடங்கி பல பிளாட்ஃபார்ம்கள்லயும் பயங்கர எங்கேஜிங்கா களமாடுவாங்க.. ஒவ்வொரு சிக்ஸர், ஃபோர், விக்கெட்டுக்கும் இங்க எமோஜிக்கள், ஸ்டேட்டஸ்கள்னு தெறிக்க விடுவாங்க.. கிரிக்கெட் உலகின் அப்படியான Biggest Rivalry-தான் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச். இரு நாடுகள் மோதுற ஒவ்வொரு மேட்சுமே களத்துலயும் களத்துக்கு வெளியிலயும் பயங்கரமா தீப்பிடிக்கும்.
Emotional Connect
இரு நாடுகள் இடையிலான அரசியல்ரீதியான உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசலால், 2012-க்குப் பிறகு bilateral series நடக்கவே இல்லை. அதேநேரம், உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, ஆசியக் கோப்பை போன்ற தொடர்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. 2000-த்தில் கனடாவில் நடந்த ஃப்ரண்ட்ஷிப் கப், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பொதுவான இடங்களில் இரண்டு அணிகளும் மோதிய போட்டிகள் நடந்திருக்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் என்றாலே, அது இரு அணி ரசிகர்களுக்கும் எப்போதும் ஸ்பெஷலானது. எமோஷனலா அந்த மேட்சுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் ரசிகர்கள். மற்றெந்த மேட்சுகளை விடவும் இந்த மேட்சுக்கு சிலிர்த்துப் போய் சில்லறையை விட்டெறிவார்கள் ஃபேன்ஸ்.

இந்தியா – பாகிஸ்தான் மேட்சுகள் மேட்சோட இண்டன்ஸிட்டி எந்த அளவுக்கு இருக்கும்ங்குறது சமீபத்திய எடுத்துக்காட்டு அர்ஷ்தீப் சிங். சமீபத்திய ஆசியக் கோப்பை மேட்ச்ல ஆசிஃப் அலியோட கேட்சைத் தவறவிட்ட அவர் எந்த அளவுக்கு விமர்சனங்களுக்கு உள்ளானாருங்குறது நம்ம எல்லாருக்குமே தெரியும். இதே மாதிரி பல சம்பவங்கள் இதுக்கு முன்னாடியும் நடந்துருக்கு. அந்த அளவுக்கு இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்களோட Impact இருக்கும். உலகக் கோப்பை தொடர்களைப் பொறுத்தவரை 2021 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு வரை பாகிஸ்தானை எதிர்க்கொண்ட எல்லாப் போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்றிருந்தது. இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு ஐசிசி தொடரிலும் இந்தியா – பாகிஸ்தான் மேட்சுக்கு முன்பாக ‘Mauka Mauka’ என்ற பெயரில் விளம்பரங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் போலவே, இந்த விளம்பரங்களுக்கும் உலக அளவில் தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. ஆனால், 2021 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.
Also Read – எம்.பி.பி.எஸ் ஸ்டூடண்ட் டு ஆக்டிங் – நடிகை சௌந்தர்யாவின் பயணம்!
பிஸினஸ்
ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மேட்சையும் இந்த லிஸ்ட்ல சில பேரு சேர்க்குறது உண்டு. கிரிக்கெட்டை தேசிய விளையாட்ட வைச்சிருக்க ஆஸ்திரேலியா ரசிகர்கள், தங்களோட அணி நியூசிலாந்துகூட தோக்குற எப்பவும் விரும்ப மாட்டாங்க.. அங்க கிரிக்கெட் தேசிய விளையாட்டு மட்டும்தான், ஆனா இந்தியாவுல கிரிக்கெட் ஒரு மதம். இதப்பத்தி ஒரு முறை கௌதம் காம்பீர் குறிப்பிடும்போது, `இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்களுக்குனே தனி பிஸினஸ் மார்க்கெட் உருவாகிடுச்சுனே சொல்லலாம். ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மேட்சுகளை இந்த லிஸ்ட்ல சிலபேர் சேர்ப்பாங்க. ஆனால், லாஜிக்கா நீங்க ஒரு சின்ன கணக்குப் போட்டுப் பார்த்தீங்கன்னா, அந்த ரெண்டு நாடுகளோட மொத்த மக்கள் தொகை சுமார் 3 கோடி என்ற அளவுலதான் இருக்கும். அதுவே பாகிஸ்தான்ல 9 கோடி பேர் இருக்காங்க. இந்தியாவுல 140 கோடி பேருக்கும் மேல இருக்காங்க. இவங்கள்ல சுமார் 10% பேர் மட்டுமே எங்கேஜ் ஆனாலே, அந்த நம்பர் வேற லெவல்ல இருக்கும்’னு பதிவு பண்ணிருந்தாரு. அதுதாங்க நிஜமும். இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்களைப் பாக்குறவங்களோட எண்ணிக்கை நம்ம நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். 2019 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மேட்சை டிவில பார்த்தவங்க எண்ணிக்கை மட்டுமே 273 மில்லியனுக்கும் மேல… கிரிக்கெட் ஹிஸ்டரியைப் பொறுத்தவரை அதிகம் பேரால் பார்க்கப்பட்டு டாப் 3 Highest Ratings உள்ள மேட்சுகள் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்தான்.

இந்தியா – பாகிஸ்தான் முதல் முறையா எப்போ மோதுனாங்கன்னா…. பிரிவினைக்குப் பிறகு 1948-ல் பாகிஸ்தான் அணி, Imperial Cricket conference-ன் உறுப்பினரானது. முதல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி, டெல்லி பெரேஷா கோட்லா மைதானத்தில் 1952 அக்டோபர் 16-ம் தேதி தொடங்கியது. அப்போதைய பாகிஸ்தான் அணியில் இருந்த அப்துல் காதர், அமீர் இலாஹி என இருவர் இந்திய அணிக்காக ஏற்கனவே விளையாடியவர்கள். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஹேமு அதிகாரியின் 81 ரன்கள் டாப் ஸ்கோரோடு 372 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள், ஃபாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸில் 152 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆகும். அந்தப் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்கள்லயே உங்க ஃபேவரைட்டா என்கவுண்டர் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
0 Comments