சமீர் பானர்ஜி

விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன் சமீர் பானர்ஜி… யார் இவர்?

விம்பிள்டன் டென்னிஸ், ஆடவருக்கான ஜூனியர் ஒற்றையர் பிரிவு போட்டியானது கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பானர்ஜி சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதிப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் லிலோ என்பவரை எதிர்த்து போட்டியில் விளையாடினார். சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சமீர் பானர்ஜி 7 – 5 மற்றும் 6 – 3 என்ற செட் கணக்கில் விக்டரை வீழ்த்தினார். அமெரிக்கர்கள் மட்டுமல்ல தற்போது இந்தியர்களும் கொண்டாடும் சமீர் பானர்ஜி யார்? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். 

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 17 வயதான சமீர் பானர்ஜி தற்போது வசித்து வருகிறார். சமீர் பானர்ஜியின் தனதை குணால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரின் தாய் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். 1980-களில் இவர்கள் அமெரிக்காவுக்கு குடியேறி அங்கு திருமணம் செய்துகொண்டனர். தற்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகியுள்ளனர். தனது விளையாட்டு தொடர்பாக சமீர் பேசுகையில், “நான் ஐந்து அல்லது ஆறு வயதில் இருந்தபோதே விளையாடத் தொடங்கினேன். வாரத்தின் இறுதி நாள்களில் எனது அப்பாவுடன் விளையாடுவேப். வளர்ந்து வரும்போது பேஸ்பால் மற்றும் ஃபுட்பால் போன்றவற்றை விளைடாடினேன். ஆனால், டென்னிஸின் மீது எனக்கு தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. டென்னிஸில் விளையாடும்போது வெற்றி பெறுவதும் தோல்வி பெறுவதும் என்னைப் பொறுத்தது இந்த சவாலை நான் மிகவும் விரும்பினேன்.

சமீர் பானர்ஜி
சமீர் பானர்ஜி

லியாண்டர் பேஸ் போன்றவர்களுடன் என்னையும் ஒப்பிட்டு பேசிவது மகிழ்ச்சியை தருகிறது. அவரும் விம்பிள்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை அறிவேன். அடுத்ததாக ப்ரோ டூர்னமெண்டுகளில் கலந்துகொள்ள விரும்புகிறேன். அதில் வெற்றிபெறுவேன் என்றும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் சமீர் பானர்ஜி தனது சுற்றுப்பயணங்களில் இருந்து ஓய்வு பெற்று வரும் மாதங்களில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எகனாமிக்ஸ் அல்லது பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தில் டிகிரி படிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விம்பிள்டன் போட்டியை தன்னுடைய பயிற்சியாளர் கார்லஸ் எஸ்டபன் இல்லாமலேயே எதிர்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீர் பானர்ஜிக்கு அமெரிக்காவில் மட்டுமல்லாது இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். சமீர் விளையாடும்போது அவரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியர்கள் இருந்தனர். இதனால் நெகிழ்ந்த சமீர் பானர்ஜி, “இந்தியர்கள் அனைவரும் எனது வெற்றியைக் கொண்டாடியது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த போட்டி முழுவதும் எனக்கு ஆதரவாக இந்தியர்கள் இருந்தனர். இந்தியாவுடன் எனக்கு ஆழமான உறவு உள்ளது. எனது பெற்றோர்கள் இந்தியாவில்தான் வளர்ந்தார்கள். நான் பலமுறை இந்தியாவுக்கு வந்துள்ளேன். இந்தியாவில் உள்ள ஆர்.கே.கண்ணா டென்னிஸ் மைதானத்தில் விளையாடியுள்ளேன். நான் அமெரிக்கா சார்பாக போட்டியில் கலந்துகொண்டு விளையாடினாலும் நான் ஒரு இந்தியனும்கூட” என்று பேசியுள்ளார்.

புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரரான விஜய் அம்ரித்ராஜ், சமீர் பானர்ஜியை வாழ்த்தியுள்ளார். தனது வாழ்த்தில் அவர், “விம்பிள்டன் ஜூனியர் ஒற்றைபி பிரிவு 2021-ம் ஆண்டுக்கான போட்டியில் இந்திய அமெரிக்க வீரர் 17 வயதான அமித் பானர்ஜி அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளார். சிறப்பான எதிர்காலம் அமைய அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : இந்திய ரயில்வேயின் புதிய Vistadome கோச்சில் என்ன ஸ்பெஷல்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top