நடிகர் ராம்கி பத்தி இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
இவரோட அப்பா ஒரு சி.பி.ஐ. ஆபிசர்..
பாக்க பாலீஷா ஃபாரீனர் மாதிரி இருந்தாலும் விருதுநகர்க்காரர்…
அப்போ பீக் ஹீரோயினா இருந்த ராதிகா, இவர் காதலுக்கு பெரிய வில்லியா இருந்தாங்க…
பாகுபலி, கே.ஜி.எஃப் இண்டர்வெல் பிளாக்குக்குலாம் இவர் நடிச்ச சீன்தான் இன்ஸ்பிரேஷன்…
பெண்களுக்கு மட்டுமில்ல… ஆண்களுக்கும் பிடிச்ச ஹீரோ… இப்படி அடுக்கிட்டே போகலாம். இன்னும் இவர பத்தி பல ஆச்சரியங்களைப் பாக்கலாம்..!

இவரைப் பார்க்கிற நிறையபேர் நீங்க ஆந்திராவானு கேட்பாங்க. ஆனா அவரோட சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர். அப்பா சி.பி.ஐ ஆபீசர். சின்ன வயசுல அமெரிக்கன் காலேஜ்ல படிப்பை முடிச்சுட்டு, சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்யூட்ல சேர்ந்து சினிமா கத்துக்கிட்டார். அருண்பாண்டியன், ஆபாவாணன் எல்லோருமே இவர் கூட படிச்ச நண்பர்கள்தான். மொத்தமா ஒன்னாத்தான் காலேஜ் முடிச்சாங்க.
சினிமாவுல டெக்னீஷியனா போயிடலாம்னு நினைச்சார் ராம்கி. அப்போ ஆபாவாணன் நான் இயக்குநர் ஆனா உன்னையும், அருண் பாண்டியனையும் வைச்சுத்தான் படம் பண்ணுவேன்னு வாக்குறுதி கொடுத்தார். அந்தநேரம் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து ஊமைவிழிகள் படத்தை உருவாக்கினாங்க. அதுல ராம்கியும் நடிக்கிறதா இருந்தது. ஆனால் நட்சத்திரங்கள் அதிகமாக நடிச்சதால ராம்கிக்கு அந்த படத்துல ரோல் இல்ல. ஆனாலும் நண்பர்களுக்காக ராம்கி அந்தப் படத்துல டெக்னிக்கல் சப்போர்ட் பண்ணிக் கொடுத்தார். ஆல்ரெடி ராம்கி சிலம்பம் மாஸ்டர், தேக்வாண்டோ ப்ரவுன் பெல்ட்டுங்குறதால ஃபைட்டரா களம் இறங்க முடிவு செஞ்சார். ஊமை விழிகள்ல க்ளைமாக்ஸ்ல கார்த்திக் சங்கிலியோட சண்டைபோடுவார். அப்போ கார்த்திக்கிற்கு டூப் போட்டது ராம்கிதான். இப்படி அந்தப்படம் முழுக்க நண்பர்களுக்காக வேலை பார்த்தார்.

அப்போதான் சின்னப்பூவே மெல்லப்பேசு படத்துக்கான வாய்ப்பு கிடைக்குது. நடிகர் பிரபுகூட இரண்டாவது கதாநாயகனா வாய்ப்பு கிடைக்குது. ஆனாலும் விடலை. படம் ரிலீஸூம் ஆச்சு. பார்த்த மக்கள் எல்லோரும் ராம்கியை கொண்டாட ஆரம்பிச்சாங்க. முதல் படத்துலயே ஃபைட், பாட்டு, காமெடினு எல்லாமே பண்ணார். ராம்கிக்கு இது முதல் படம்னே சொல்ல முடியாத அளவுக்கு பிரிச்சு மேய்ஞ்சிருப்பார். சங்கீத வானில் சந்தோஷம் பாடும்னு ஒரு பாட்டுல ரொமான்ஸ் நாயகனா ஃப்ரூவ் பண்ணினார். இப்படி முதல் படத்துலயே மக்கள் மனசுல இடம்பிடிச்சுட்டார். முதல் படமே அதிரடியான வெற்றி. இந்த படம் தெலுங்கில் டப் ஆகி ரிலீஸ் ஆச்சு. அங்கேயும் செம்ம ஹிட். தெலுங்குலயும் ராம்கி பிரபலமானார். அடுத்த வருஷமே 8 படங்கள் ராம்கிக்கு ரிலீஸ் ஆச்சு. படம் வெற்றின்னாலும் தோல்வின்னாலும் இயக்குநர்கள் படம் இயக்க குவிஞ்சாங்க. அதேபோல தயாரிப்பாளர்களின் ஹீரோவாவும் மாறிப் போனார். அந்த 8 படங்களில் செந்தூரப்பூவே மெகா ஹிட். செந்தூரப்பூவே இங்கு தேன் கொண்டு வானு பாடி பெண்கள் மனசை கொள்ளையடிச்சார், ராம்கி. இந்த பாட்டுல வந்த காஸ்ட்யூம்ஸை தேடி தேடி வாங்கின இளைஞர்கள் அதிகம். அதேபோல இவரோட ஹேர்ஸ்டைலுக்கும் அன்னைக்கு ரசிகர் பட்டாளமே இருந்துச்சு. பெண் ரசிகைகளை குத்தகைக்கு எடுத்த நடிகர்களில் ராம்கிக்கு முக்கியமான இடம் உண்டு.
இந்தப்படத்துலதான் ராம்கியும், நிரோஷாவும் முதல்முதலா ஜோடி சேர்ந்து நடிச்சாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்ச புதுசுல ரெண்டுபேருக்குமே ஆகாம மோதல் உருவாக ஆரம்பிச்சது. இந்தப்படம் முடிக்கும்போது ரெண்டுபேருக்கும் இடையில காதலா மாறிடுச்சு. செந்தூரப்பூவே க்ளைமாக்ஸ்ல ராம்கி-நிரோஷா ரயில் ஏறிப்போற மாதிரி ஒரு சீன் வரும். அந்த சீன்ல ராம்கி முதல்ல ரயில் ஏறிட்டு, அடுத்ததா நிரோஷா ஏறுவாங்க. அப்படி நிரோஷா ஏறும்போது, தவறி தண்டவாளத்துல சிலிப் ஆகி விழப்போனாங்க. அப்போ உடனடியா ராம்கி கையைக் கொடுத்து நிரோஷாவை காப்பாத்தியிருப்பார். அப்போ நிரோஷா விழுந்திருந்தா முகத்துல பலமான அடிபட்டிருக்கும். அதைப் பார்த்துதான் நிரோஷா ராம்கியை காதலிக்க ஆரம்பிச்சிருக்கார். ஆனா இந்தக் காதலுக்கு இவங்க அக்கா ராதிகா ஒத்துக்கவே இல்லை. ராம்கியை நிரோஷா கல்யாணம் பண்ணக்கூடாதுனு எதிர்ப்பா இருந்து ராம்கியோட மோதல் போக்கை கடைபிடிச்சாங்க.

அடுத்த வருஷம் இவருக்கு பெரிசா பிரேக் கொடுக்கலை. அப்போதான் மருதுபாண்டி ரிலீஸ் ஆகுது. படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றிக் கொடி நாட்டியது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் கதாநாயகனாக ஒன்மேன் ஷோ காட்டியிருந்தார், ராம்கி. அடுத்தது நண்பன் ஆபாவாணன் அழைக்க இணைந்த கைகள் படத்தில் நடிச்சார். தன் உயிர் நண்பன் அருண்பாண்டியனுடன் பட்டையைக் கிளப்பினார், ராம்கி. அந்தப்படத்தோட இண்டர்வெல் ப்ளாக்கும், க்ளைமாக்ஸூம் இன்னைக்கு வரைக்கும் நின்னு பேசும். அந்த படத்தோட இண்டர்வெல் ப்ளாக் ஹைப்புக்கு பின்னாலதான் இண்டர்வெல்னா இப்படி சீன்கள் வைக்கணும்னு மத்த இயக்குநர்கள் நினைக்கவே ஆரம்பிச்சாங்க. இண்டர்வெல் சீன்ல ராம்கி டூப் போடாம நடிச்சிருக்காரோனு சொல்ற அளவுக்கு தத்ரூபமான உழைப்பு ராம்கியோடது. இந்தப்படத்துல நிரோஷா, அருண்பாண்டியனுக்கு ஜோடியா நடிச்சிருப்பாங்க. ஆனா ராம்கிக்குத்தான் ஜோடியா நடிக்க கமிட் ஆனாங்க. ஆனா நடிகை ராதிகாவோட ப்ரஷரால அருண் பாண்டியனுக்கு ஜோடியா நடிச்சாங்க. அடுத்தடுத்து ஆக்ஷன், த்ரில்லர்னு ஜானர்கள் செலக்ட் பண்ணி நடிக்க ஆரம்பிச்சார், ராம்கி. ஒரு கட்டத்துல பாளையத்து அம்மன், அப்டைவீட்டு அம்மன்னு படங்கள் பண்ண ஆரம்பிச்சார். 2004-ம் ஆண்டுக்கு பின்னால நடிக்கிறதை நிறுத்தினவர், ஆஸ்திரேலியா, இலங்கையில சீரியல்கள், விளம்பரங்களை இயக்க ஆரம்பிச்சார்.
ரொம்ப நாளைக்கு அப்புறமா பிரியாணி, மாசாணி படங்கள் மூலமா ரீ-என்ட்ரி கிடைச்சது. அடுத்து நிறைய படங்கள் நடிச்சாலும் தெலுங்குல ஆர்.எக்ஸ் 100 படத்தில் குணச்சித்திர வேடம் பண்ணார். படம் ஹிட்டடிச்சு, ராம்கிக்கு அவார்டும் கிடைச்சது. கடைசியா கஸ்டடியில முக்கியமான கேரக்டர் பண்ணார். இப்படி 90-கள்ல படம் ஓடுதோ, இல்லையோ ராம்கிக்கு படங்கள் புக் ஆகிட்டே இருந்தது. அவருக்கு இருந்த அசைக்க முடியாத ஃபேன்பேஸூம், தயாரிப்பாளர்கள்கிட்ட கறார் காட்டாம இருந்ததுதான் முக்கியமான காரணம். ராம்கி உச்சத்துல இருந்தாலும் சரிஞ்சதுக்கு காரணம், தேர்வு செஞ்ச கதைகள் பெரிசா எதுவும் கைகொடுக்காம போனதுதான். இரண்டு கதாநாயகர்கள்ல ஒருத்தராவும் நடிச்சுக்கிட்டே இருந்தார். சோலோ ஹீரோவா மாத்துற மாதிரியான கதைகளை செலக்ட் பண்ணவே இல்லை. அப்படி தேர்வு செஞ்சதும் கைகொடுக்கலை.
Also Read – இளையராஜாவை மட்டும்தான தெரியும்.. இந்த 90’ஸ் மியூஸிக் டைரக்டர்களைத் தெரியுமா?
ராம்கியைப் பொறுத்தவரைக்கும் ஒரு டெக்கி மேன். ஃபாரின்ல என்ன டெக்னாலஜி, கருவிகள் ரிலீஸ் ஆனாலும், அதை இவர் வாங்கிடுவார். அதேபோல அமெரிக்காவுல போய் முறைப்படி ஜோசியம் படிச்சு, கத்துக்கிட்டவர். 90-காலக்கட்டத்துலயே தமிழ் சினிமாவுல மூட்டு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரான ஆனந்த் ஜோஷியை தேடிப்போன முதல் ஆளும் இவர்தான். இந்த டாக்டர்கிட்டதான் இப்போ அஜித் எல்லாம் முழங்கால் ஆப்பரேஷன் பண்ணியிருக்கார். இன்னொரு ஆச்சர்யமான தகவல் இவர் செம்மையான மிமிக்ரி கலைஞரும் கூட. ஃபிலிம் இன்ஸ்ட்யூட்க்கு வர்றப்போவே இதெல்லாம் கத்துக்கிட்டார். இப்படி பல திறமைகளை கொண்டவர். செகண்ட் ஹாஃப்ல இவருக்கு செம்மையான பிரேக் இன்னும் கிடைக்காமலே இருக்கு.
நடிகர் ராம்கி பத்தின உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
The Best Premium IPTV Service WorldWide!
Great write-up, I’m regular visitor of one’s website, maintain up the excellent operate, and It’s going to be a regular visitor for a long time.
Attractive section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I acquire in fact enjoyed account your blog posts. Anyway I’ll be subscribing to your feeds and even I achievement you access consistently quickly.
You are my intake , I have few web logs and occasionally run out from to brand.I conceive this website contains some really wonderful info for everyone. “Drunkenness is temporary suicide.” by Bertrand Russell.
You could certainly see your enthusiasm in the work you write. The arena hopes for more passionate writers such as you who aren’t afraid to mention how they believe. Always go after your heart. “In America, through pressure of conformity, there is freedom of choice, but nothing to choose from.” by Peter Ustinov.
hi!,I really like your writing very a lot! percentage we keep in touch more approximately your post on AOL? I need an expert on this space to unravel my problem. May be that’s you! Taking a look ahead to see you.