GOAT De-Aging

AI முதல் DeAging வரை… 2024 தமிழ் சினிமாவில் நடந்த புதுமைகள்!

தமிழ் சினிமா இந்த வருசம் டெக்னாலஜில பூந்து விளையாடிருக்குனுதான் சொல்லணும். DeAging கான்சப்ட்ல இருந்து Ai வரைக்கும் நிறைய புதுமைகள் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கு.

* தாடி வச்சா அப்பா, ஷேவ் பண்ணா பையன்.. டபுள் ஆக்சன்னு வந்துட்டாலே தெய்வ மகன் காலத்துல இருந்து தமிழ் சினிமால வந்த டெக்னிக் இதுதான். அதை மாத்தி  GOAT படத்துல சின்ன வயசு விஜய்யை DeAging டெக்னாலஜி மூலமா கொண்டு வந்திருக்காங்க. ஏற்கனவே சூர்யாவோட ஆதவன் படத்துல இதை டிரை பண்ணிருப்பாங்க. ஆனா அது ப்ராப்பரான டி-ஏஜிங் டெக்னிக் கிடையாது. ஒரு சின்ன பையனை நடிக்க வச்சி அதுல முகத்தை மட்டும் சூர்யா முகத்தை வச்சிருப்பாங்க. இதுல விஜய்யே கம்மியான வயசு மாதிரி காட்டிருக்காங்க.

* கூலி படத்துல ரஜினிக்கு டி-ஏஜிங் டிரை பண்ணப்போறதா ஒரு பேச்சு இருக்கு. ஏற்கனவே விக்ரம்ல கமலுக்கு பண்ண நினைச்சிருந்ததா லோகேஷ் சொல்லிருந்தாரு.

* சத்யராஜ் நடிச்ச வெப்பன் படத்துலயும் சின்ன வயசு சத்யராஜை காட்டுறதுக்கு AI பயன்படுத்திருக்காங்க.

* Ai மூலமா யாரோட வாய்ஸை வேணாலும் ரி-க்ரியேட் பண்றது இந்த வருசம்தான் பாப்புலர் ஆனது. அதுக்குள்ள தமிழ் சினிமாலயும் வர ஆரம்பிச்சுடுச்சு. GOAT-ல பவதாரணி குரலை வச்சி ஒரு பாட்டு ரிலீஸ் ஆனது. சூப்பர் சிங்கர் ப்ரியங்காவை பாட வச்சி பவதாரணி குரலா அதை மாத்திருந்தாங்க.

* இறந்தவங்களை பாட வைக்கிறது மட்டுமில்ல நடிக்க வைக்கிறதும் நடந்திட்டு இருக்கு. இந்தியன் 2-ல நெடுமுடிவேணு கதாபாத்திரத்தை அப்படிக் கொண்டு வந்திருந்தாங்க. நடிகர் விவேக் இறப்பதற்கு முன்னாடி இந்தியன் 2-ல நிறைய போர்சன்ல நடிச்சிருந்தாரு. ஆனா அவர் மறைவுக்கு பிறகு சில சீன்களை நடிகர் கோவை பாபு வை வச்சி ஷூட் பண்ணி விவேக் ஃபேஸ் மாத்தி படத்துல பயன்படுத்திருக்காங்க.

இந்தியன் - 2 விவேக்
இந்தியன் – 2 விவேக்

* மார்க் ஆண்டனி படத்துல சில்க் ஸ்மிதாவைக் கொண்டு வந்த மாதிரி GOAT படத்துல விஜயகாந்த் வரப்போறதா ஒரு செய்தி சுத்திட்டு இருந்தது. ஆனா அது டவுட்டுதான்னும் சொல்றாங்க. படம் வந்தா தான் தெரியும்.

* கங்குவா படத்தோட கான்சப்ட் டிசைனிங்லயும் அந்த வேர்ல்டு எப்படி இருக்கணும், காஸ்டியூம் எப்படி இருக்கணும்ங்குற ப்ளானிங்கிற்கும் Ai யூஸ் பண்ணிதான் கிரியேட் பண்ணிருக்காங்கனு பாடலாசிரியர் மதன் கார்க்கி சொல்லிருக்காரு. அவரும் இந்தப் படத்துக்கு ஸ்கிரீன்ப்ளே எழுதிருக்காரு.

இதுல நீங்க ரொம்ப ஆச்சர்யப்பட்ட டெக்னாலஜி எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – IMAX-ல் வெளியாகும் விஜய்யின் GOAT – IMAX என்றால் என்ன தெரியுமா?

8 thoughts on “AI முதல் DeAging வரை… 2024 தமிழ் சினிமாவில் நடந்த புதுமைகள்!”

  1. I loved as much as youll receive carried out right here The sketch is tasteful your authored material stylish nonetheless you command get bought an nervousness over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike

  2. you are truly a just right webmaster The site loading speed is incredible It kind of feels that youre doing any distinctive trick In addition The contents are masterwork you have done a great activity in this matter

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top