கலகலப்பு

கலகலப்பு vs அயன்… டைமண்ட் சேசிங் சீன்ல எது பெஸ்ட்?!

அயன் படத்தோட டைமண்ட் சேஸிங் சீன் செமயான வைரல். நிறைய பேர் அதை பகிர்ந்து கதை எழுதிட்டு இருந்தாங்க. இன்னொரு கேங்க், எத்தனை டைமண்ட் சேஸ் சீன் வந்தாலும் கலகலப்பு டைமண்ட் சேஸிங் சீனை அடிச்சுக்க முடியுமானு வம்பிழுக்குறாங்க. ரெண்டு சேஸ்லயும் எது பெஸ்ட்?

எல்லா சினிமாலயும் சேஸிங் சீனுக்கு எப்பவுமே மவுஸ் அதிகம்தான். ஏன்னா, பார்த்துட்டு இருக்குற நம்மளை ரொம்பவே பரபரப்பாக்கி விட்ரும். அயனும் அந்த மாதிரிதான். படமே பரபரப்பா போயிட்டு இருக்கும்போது அந்த சீன் இன்னும் பரபரப்பா மாத்தி விட்ரும். டைமண்ட் திருடிட்டானு மாடில இருந்துலாம் குதிச்சு துரத்திப் போய் தலை முடியை புடிச்சா இழுத்தா அதுமட்டும் தனியா வரும். அடங்@3$லனு இருக்கும். சரி, தேவா சரியா புடிச்சிட்டாருனு நினைக்கும்போது டைமண்ட் பாஸ் பண்ணிடுவாங்க. ஹாரிஸ் மாம்ஸ் மியூசிக் ஸ்டார்லாம் ஆகும். கூஸ்பம்ப்ஸ் அண்ட் டேய் தேவா புடிடான்ற மாதிரி போகும்.

பொதுவா சேஸிங் சீன்னா, ஓவர் ஹீரோயிஸமாகி வழக்கமான ஒண்ணா மாத்தி கெடுத்துடுவாங்க. அந்தமாரி கிளீஷே அயன்ல அந்த சீன்ல இருக்காது. இடைல வர்ற தடைகளையெல்லாம் அவர் தாண்டுறது அந்த கேரக்டர் பக்காவா பண்ற மாதிரி நமக்கு தோணும். அல்டிமேட் என்னனா, ஆல்ரெடி அடிவாங்கி, இடிவாங்கி ஓடிகிட்டு இருப்பாரு. டைமண்ட் வைச்சிருக்குறவன் ஒரு வீட்டுக்குள்ள ஓடிடுவான். பின்னாடி போன சூர்யாவை போட்டு அந்த அம்மா அடிக்கும். நிஜமாவே சிரிப்பு வந்துடுச்சு. ஓடுல சறுக்கி வர்றது நிறைய படங்கள்ல வந்துருக்கு. ஆனால், எவர்கிரீன் இதுதான். கடைசில ஒருவழியா டைமண்ட தேவா புடுங்குபிறகுதான் நிம்மதியா இருக்கும். செம பரபரப்பான சீன். இந்த சீனுக்கு ரியாக்‌ஷன் வீடியோலாம் பாருங்க கூஸ்பம்ப்ஸா இருக்கும்.

கிட்ஸ் லைக் அயன். லெஜண்ட்ஸ் லைக் கலகலப்புடானு குரூப் ஒண்ணு கிளம்பியிருக்காங்க. அயன்ல இந்த டைமண்ட் சேஸ் ஒரு லைனா ஆர்டரா இருக்கும். ஆனால், கலகலப்புல காமெடி, மெடிடேஷன், ரிலாக்சேஷன், கோமா, வில்லனிஸம்னு ஏகப்பட்ட லேயர்ஸ் இருக்கும். அதுதான் இந்த கலகலப்போட ஸ்பெஷல் விஷயமே. அதுலயும் ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு டயலாக்கும் மீம் டெம்ப்ளேட்டுதான். அமிதாப் மாமை பொளந்து எடுப்பானுங்க, என்ன ஏன்டா அடிக்குற? இங்க அடிச்ச இங்க தான் வலிக்கும்ன்றதுலாம் சுந்தர்.சியின் எவர்கிரீன் டயலாக். சிவாவும் விமலும் சம்பவம் பண்ணியிருப்பாங்க.

 சிவா பைக் எடுத்துட்டு கிளம்பிடுவாரு. பின்னாடி அடியாட்கள் துரத்துவாங்க. விமல் துள்ளிப் போய் டயர் புடிப்பாரு. இடைல அவர பார்த்து உன் சூர்யா சிரிப்பை சிரிச்சிடு பயந்துருவான்னுவாரு. ஷப்பா சே, யாருடா நீங்கலாம். கால்ல கயிறு கை ஸ்கூட்டர்ல இருக்கும். சிவா அந்த நேரத்துல உன்னைப் பார்த்து ஸ்கூல்டேல்ல ஆஞ்சநேயர் வேஷம் பொட்டியே அந்த நியாபகம் வருதுன்னுவாரு. ஏன்டா, நினைவுகளை நினைக்கிற மொமண்டா அதெல்லாம்? இடுப்பு வலி சரியாகும்ல, அந்த மொமண்ட்லாம் ஆவ்ஸம். அதுக்கு ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பாரு பாருங்க. சிரிச்சு சிரிச்சு ஆனந்தக் கண்ணீரே வரும். அப்படியே அந்த சீன் முடியும்.

என்னைக் கேட்டா டெக்னிக்கலாவும், பிரில்லியண்டாவும் பெஸ்ட் சீன் அயன்தான். ஆனால், எண்டர்டெயின் பண்ற சீன்னு ஒண்ணு இருக்கும்னா அது கலகலப்புதான். எத்தனை சீன் வந்தாலும் இந்த சேஸுக்கு ஈடு இணை இல்லைனே சொல்லலாம். 

Also Read – வேற லெவல் சேட்டைகள்… கவிஞர் வாலி பண்ண வம்புகள்!

3 thoughts on “கலகலப்பு vs அயன்… டைமண்ட் சேசிங் சீன்ல எது பெஸ்ட்?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top