வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த `மாநாடு’ படத்தின் கதை முன்பே விஜய்க்கு சொல்லப்பட்டது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், இந்த ப்ராஜெக்ட் பற்றி, முன்பே ஒருமுறை எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் ஹிண்ட் கொடுத்திருக்கிறார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? தெரிந்துகொள்வோம்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2012-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற படம் ‘துப்பாக்கி’. ஆனால் அந்தப் படம் அப்போது பலத்த சர்ச்சைகளையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பது தங்கள் மனதை புண்படுத்தியிருப்பதாக சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. ஆங்காங்கே இந்தப் போராட்டங்களும் எதிர்ப்புகளும் வலுக்கத் தொடங்கவே படக்குழுவினர், படத்தில் இடம்பெற்றிருந்த அவ்வாறான சில காட்சிகளை நீக்கியும், தவிர்க்கமுடியாத காட்சிகளில் வரும் இஸ்லாமியக் குறீயீடுகளை ‘ப்ளர்’ செய்தும் படத்தை வெளியிட்டனர். இதனால் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு வெகுவாகவே குறையத் தொடங்கியது.
அந்த நேரத்தில் விஜய் தரப்பு படு பிஸியாக இருந்துவந்தது. குறிப்பாக விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சி அவ்வபோது மீடியாவை சந்தித்து விளக்கம் அளித்து வந்தார். அவ்வாறான நேரத்தில்தான் எஸ்.ஏ.சி, தவறுதலாக கவனத்தில் வராமல் இடம்பெற்ற அவ்வாறானக் காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று வருத்தம் தெரிவித்ததுடன் கூடவே விஜய் தனது அடுத்த படத்தில் ஒரு இஸ்லாமியராக நடித்து இஸ்லாமியர்களின் மனதை குளிர்விப்பார் என்றும் அறிவித்தார். இந்த ஓப்பன் அறிவிப்பு அப்போது பொதுவெளியில் சிறிய சலசலப்பைத்தான் ஏற்படுத்தியது என்றாலும் விஜய்யின் ரசிகர்கள் மனதில் மிகப்பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது.
Also Read : `படம் எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க..’ தமிழ் சினிமாவின் பெண்டிங் படங்கள்!
இந்நிலையில் சிம்பு `அப்துல் காலிக்’ எனும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தின் கதையை ‘துப்பாக்கி’ சமயத்தில்தான் விஜய்யிடம் வெங்கட்பிரபு சொல்லியிருந்திருக்கிறார். அப்போதைய சூழலில் விஜய்யின் அடுத்த படம் ‘மாநாடு’ படம்தான் என்றிருந்ததை மனதில் வைத்துத்தான் எஸ்.ஏ.சி, விஜய் அடுத்த படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார் என அறிவித்திருக்கிறார்.
ஆனால், ஏனோ சில காரனங்களால் அந்த ப்ராஜெட்க் டேக் ஆஃப் ஆகாமல் போயிருக்கிறது. அதன்பிறகு வெங்கட்பிரபு அந்தக் கதையை கார்த்தி நடிக்க ‘பிரியாணி’ என இயக்கவிருந்திருக்கிறார். பின் அதுவும் மாறிப்போய்தான் கடைசியில் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ படமாக அமைந்து சிம்புவுக்கும் வெங்கட்பிரபுவுக்கும் சூப்பர் கம்பேக்காக அமைந்திருக்கிறது.
ஒருவேளை விஜய் அப்போதே ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Wow amazing blog layout How long have you been blogging for you made blogging look easy The overall look of your web site is magnificent as well as the content
istanbul hurdacı firmalar içinde lideriz hurdacı En yakın istanbul istanbul hurdacı telefonu olan numaramızdan ulaşabilirsiniz kadıköy hurdacı https://bit.ly/kadikoy-hurdaci-telefonu