தமிழ் சினிமாவில் குஷி கிரியேட் செய்த மேஜிங்கே தனி. ஒட்டுமொத்த படமாகவும் சரி; விஜய், ஜோதிகா, எஸ்.ஜே.சூர்யா என ஒவ்வொருவரின் கரியராகவும் சரி சினிமாவின் அடுத்தக்கட்டத்தை நோக்கியும் நடிகர்களின் அடுத்தக்கட்டத்தை நோக்கியும் பயணிக்க வைத்தது குஷி. இந்தப் படம் வெளியாகி 5 வருடங்கள் கழித்து விஜய் நடித்து வெளியான படம் சச்சின். இந்த இரண்டு படங்களுக்கும் விஜய்தான் ஹீரோ; ஜீவாதான் ஒளிப்பதிவாளர் என்பதை தாண்டியும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
காதலர்களின் ஈகோ
குஷி படத்தின் சிவா – ஜெனிக்கும், சச்சின் படத்தின் சச்சின் – ஷாலினிக்கும் இருக்கிற பிரச்னையே ஈகோதான். இவர்களுக்குள் காதல் இருக்கிறது என்று அவர்கள் சொல்லிக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால், முதலில் நான் சொல்ல மாட்டேன் என்கிற ஈகோ இவர்கள் நால்வருக்குமே உண்டு. இதில், சச்சின் மட்டும் ஷாலினிக்கு நீயே வந்து உன் காதலை என்கிட்ட சொல்லுவே என்று ஷாலினியின் ஈகோவை மேலும் தூண்டிவிடுவார். சிவா – ஜெனியைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் பிடித்திருந்தாலும், சின்ன சின்ன பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஈகோ பிரச்னையாக நிற்கும்.
கிளாமர் டால்
காதலர்களுக்கும் ஈகோ இருந்தால் அதை உடைக்கும் கருவியாக பொசசிவ்னஸைத்தான் உபயோகப்படுத்துவார்கள். அப்படி பொசசிவ்னஸை கிளப்ப கிளாமர் புயலாக வந்த டால்கள்தான் மும்தாஜும் பிபாசா பாஸும். இந்த இரண்டு படங்களிலும் இருவருக்குமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காட்சிகளும், பாடலும்தான் இருக்கும். குஷியில் கட்டிப்பிடிடா பாட்டு என்றால் சச்சினில் கட்டிக்கோடா பாட்டு. அதேப்போல் இந்த இரு கேரக்டர்களும் ஹீரோவோடு நெருங்கிப் பழகும் காட்சிகள் இருக்கும்; அதை ஹீரோயின் பார்த்து கடுப்பாகும் காட்சிகளும் இருக்கும்.
சீனியர் ஃப்ரெண்ட்
குஷி படத்தில் விவேக் நடித்த விக்கி என்கிற கேரக்டரும் சச்சினில் வடிவேலு நடித்த அய்யாசாமி என்கிற கேரக்டரும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இருவரும் படத்தின் மிக முக்கியமான காமெடியன் என்றாலும் இருவரும் பல வருடங்களாக ஒரே கல்லூரியில் அரியர் வைத்து படிக்கும் ஸ்டுடண்டாக வருவார்கள். விக்கி கேரக்டர் ஐந்து வருடங்களாக ஒரே கல்லூரியிலும் அய்யாசாமி ஒன்பது வருடங்களாக ஒரே கல்லூரியிலும் படிப்பார்கள். இவர்கள் இருவருமே ஹீரோக்களுக்கு நல்ல நண்பராகவும் படத்தின் காமெடிக்கு மிகவும் உறுதுணையாகவும் இருப்பார்கள்.
இந்த ஒற்றுமைகள் போக உங்களுக்கு வேறு எதாவது ஒற்றுமைகள் தெரிந்திருந்தால் அதை கமெண்ட் பண்ணுங்க.
Your article helped me a lot, is there any more related content? Thanks!