கார்னியா மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை துறையில் பல புதுமையான அறுவை சிகிச்சை நுட்பங்களுடன் – குறிப்பிடத்தக்க மாற்றங்ககளை செய்துள்ளார் சூசன்.
உலக அளவில் மதிப்புமிக்க இந்தப் பட்டியலை ஆண்டுதோறும் சர்வதேச வெளியீடான ‘The Ophthalmologist’ (கண் மருத்துவர்) தொகுத்து வழங்கி வருகின்றனர். உலகின் 100 சிறந்த கண் மருத்துவர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த சூசன் ஜேக்கப் இடம்பிடித்துள்ளார்.
இப்படி பட்ட கௌரவமிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள டாக்டர் சூசன் ஜேக்கப், ஒளிவிலகல் மற்றும் கார்னியா அறக்கட்டளையின் இயக்குநரும் தலைவருராவார். சென்னையில் உள்ள டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையின் குழுவில் கண்புரை மற்றும் கிளவ்கோமா சேவைகளுக்கான மூத்த ஆலோசகராகவும் இருந்து வருகிறார். மேலும் 21 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர்.
இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ரிஃப்ராக்டிவ் சர்ஜரியின் கிரிட்ஸிங்கர் நினைவு விருது உட்பட பல மதிப்புமிக்க சர்வதேச விருதுகளையும் டாக்டர் சூசன் ஜேக்கப் பெற்றவர். இவை மட்டுமின்றி சூசன் பல விருதுகளை வாங்கியுள்ளார். அவரது கண்டுபிடிப்புகளும், பல நோயாளிகளுக்கு வாழ்க்கையை மாற்றி அமைத்து இருக்கிறது. குறிப்பாக கார்னியா மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை துறையில் பல புதுமையான அறுவை சிகிச்சை நுட்பங்களுடன் – குறிப்பிடத்தக்க மாற்றங்ககளை செய்துள்ளார் சூசன்.
இதேபோல், டாக்டர் சூசன் சாதனை பற்றி அவருடன் வேலை பார்க்கும் டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனைத் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.