mark zuckerberg

மார்க் ஜக்கர்பெர்க் – கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்… கடைபிடிக்கக் கூடாத 2 விஷயங்கள்!

ஃபேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் ஜக்கர்பெர்க், குறுகிய காலத்தில் செய்த சாதனைகள் யாருமே நினைத்துப் பார்க்க முடியாதது. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கிர்க்லேண்ட் ஹாஸ்டல் அறையில் இருந்து `thefacebook.com’ என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ஜக்கர்பெர்க். இப்போது அவருக்கு வயது 37. அவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ.10,980 கோடி. உலகப் பணக்காரர்களுள் ஒருவராக முன்னேறியிருக்கிறார்.

அவரது வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்…

mark zuckerberg

முழு ஈடுபாடு

எந்த ஒரு காரியத்திலும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுங்கள் என்பது மார்க் ஜக்கர்பெர்க் வாழ்வு சொல்லும் முக்கியமான பாடம். முழு ஈடுபாடு இல்லாவிட்டால், உங்களுக்கு ஒரு செயலைச் செய்யும் உத்வேகம் வராது. உத்வேகம் இல்லையென்றால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது.

பெரிதினும் பெரிது கேள்

கனவானாலும், நிஜமானாலும் பெரிதினும் பெரிது கேள் என்பது அவரின் முக்கியமான தாரக மந்திரம். கனவுகள் பெரிதாகவும், அதற்கென உண்மையான காரணமும் இருக்கும்பட்சத்தில் நிச்சயம் அதை நனவாக்க முடியும்

விரைவாகச் செயல்படுங்கள்

`Move fast and Break things’ என்பது உலகின் மிகப்பெரிய சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கின் முக்கியமான மோட்டோ. விரைவாகச் செயல்படுவது, ஒரு சில விஷயங்களை உடைத்தாலும் தவறில்லை என்பது ஜக்கர்பெர்க்கின் அசைக்க முடியா நம்பிக்கை

mark zuckerberg

முன் தயாரிப்பு

எந்தவொரு விஷயத்துக்காகவும் நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும் முன்னர், அந்த விஷயம் குறித்த முன் தயாரிப்பு அவசியம். அதற்காக சிறிது காலத்தை செலவிட்டாலும், குறிப்பிட்ட அந்த விஷயத்தைத் தொடங்கும் முன்னர் அதுபற்றிய முழுமையான அறிவு உங்களுக்கு இருந்தால் வெற்றி விரைவில் வசப்படும்.

நேரமே பணம்

வெற்றிகரமான நபராக உலகில் இன்று அறியப்படுபவர்கள் நேரத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தவர்களே. அதனால்தான், நேரத்துக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார் ஜக்கர்பெர்க். `நேரத்தை செலவிட்டு விட்டால் அது திரும்பக் கிடைக்காது. எத்தனை மில்லியன் டாலர்கள் செலவிட்டாலும், அதை நீங்கள் திரும்பப் பெற முடியாது’ என்பது அவரது நம்பிக்கை.

ஜக்கர்பெர்க் வாழ்வில் நாம் பின்பற்றக் கூடாத 2 விஷயங்கள்!

ஜக்கர்பெர்க் வாழ்வில் பெரிய அளவில் சாதித்திருந்தாலும், சில தவறான முன்னுதாரணங்களும் அவரிடம் உண்டு

அவசரம் வேண்டாம்!

மார்க் ஜக்கர்பெர்க் ஒரு விஷயத்தை மறைமுகமாகச் சொல்கிறேன் என்ற பெயரில் பலமுறை சோஷியல் மீடியாவில் பல்பு வாங்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இறைச்சி பிரியரான ஜக்கர்பெர்க், அதை ஊக்குவிக்கும் வகையில் தனது பெர்சனல் ஃபேஸ்புக் அக்கவுண்டில் 2011-ம் ஆண்டு பதிவிட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையானது. `I Just killed a pig and goat’ – என்ற அவரது பதிவு தவறான முன்னுதாரணம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், 2012ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் பிரைவசி பிரச்னைகளில் சிக்கித் தவித்தபோது, ஃபோர்ப்ஸ் பேட்டி ஒன்றில் அவசரப்பட்டு சில கருத்துகளைத் தெரிவித்தார் அவர். அதன்பின்னர் சுதாரித்த அவர் பொறுமையானார். ஆனால், அப்போது அவருக்கு வியர்த்து வழிந்ததும் பதைபதைத்ததும் பெரிதாகப் பேசப்பட்டது.

mark zuckerberg

தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தல்!

ஃபேஸ்புக்கின் முகமாக மார்க் ஜக்கர்பெர்க், தன்னை நிலைநிறுத்திக் கொண்டது அந்த நிறுவனத்துக்கு வெற்றியையே கொடுத்திருக்கிறது. ஆனால், ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் போல் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பின்னால் இருந்து அவர் பார்த்துக் கொண்டிருந்தால், ஃபேஸ்புக் இன்று எட்டியிருக்கும் வளர்ச்சியை விட பலமடங்கு பெற்றிருக்கும் என்பது டிஜிட்டல் வணிகத்தில் இருக்கும் நிபுணர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.

Also Read – Trolls-ஐ விடுங்க… சன்னி லியோன் மறுபக்கம் உங்களுக்குத் தெரியுமா?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top