சோசியல் மீடியா எனும் பேட்டில் கிரவுண்டில் ஓனரான ஃபேஸ்புக்கை முந்தி ஒருபடி முன்னணியில் நிற்கிறது இன்ஸ்டாகிராம். ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம் பெஸ்ட் எனக் கொண்டாடப்பட காரணங்கள் என்ன?
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருப்பவை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம். இளைஞர்களிடம் பிரபலமாகத் தொடங்கியிருந்த போட்டோ, வீடியோ ஷேரிங் தளமாக உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராமை, 2012 ஏப்ரலில் கையகப்படுத்தியது ஃபேஸ்புக். அதன்பின்னர், யூஸர் எங்கேஜ்மெண்டில் ஃபேஸ்புக்கை சேஸ் செய்து வேற லெவல் ரீச்சைப் பெற்றது இன்ஸ்டா.
ஃபேஸ்புக்கைத் தாண்டி இன்ஸ்டாகிராமை இளசுகள் கொண்டாட 4 காரணங்கள்!
எங்கேஜ்
ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம் முந்தி நிற்க முக்கியமான காரணம் அசுர வளர்ச்சி. வியாபார நிறுவனங்கள் இன்ஸ்டாகிராமில் அதிக கவனம் செலுத்த இதுவே ரீசன். உலக அளவில் பலதரப்பட்ட மக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இன்ஸ்டாவின் வளர்ச்சி யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. ஃபேஸ்புக்கில் 228 மில்லியன் ஆக்டிவ் யூஸர்ஸ் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், இன்ஸ்டாகிராமில் அந்த எண்ணிக்கை 300 மில்லியன் என்றிருக்கும் என்கிறது ஒரு ஆய்வு. அதேபோல், ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்டுக்குக் கிடைக்கும் சராசரி லைக்குகள் எண்ணிக்கை இன்ஸ்டாவில் அதிகம்.
பயன்படுத்த எளிது
இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவது கடினம் என பெரும்பாலான மக்கள் தவறுதலாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில், இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவது எளிது. போட்டோ, வீடியோ ஷேரிங்குக்காக உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம், டிஜிட்டலில் மிகப்பெரிய ஹிட்டடித்த ஸ்டிராட்டஜி இது. இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பார்க்கும் பயனாளர்களில் 72% பேர் அந்த வீடியோவில் சொல்லப்பட்ட மெசேஜைத் தெளிவாகப் புரிந்துகொள்வதாக ஹப்ஸ்பாட் நிறுவன ஆய்வில் தெரியவந்திருக்கிறது. வீடியோ, போட்டோக்கள் மூலம் உருவாக்கப்பட்ட எக்ஸ்பிளைனர் வகை வீடியோக்கள் பயனாளர்களை எளிதாகக் கவருவதாகவும், மற்ற போஸ்டுகளை விட இந்தவகைப் பதிவுகள் 37% அளவுக்கு அதிகமாக பகிரப்படுவதும் ஆய்வு முடிவில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனால், டெக் ஃப்ரண்ட்லி நெட்டிசன்கள் மட்டுமல்லா பெரிதாக தொழில்நுட்பம் பற்றி அறிந்திருக்காத பயனாளர்களையும் ஈர்க்கிறது இன்ஸ்டா.
பெர்சனல் கனெக்ட் – பாதுகாப்பு, வேகம்
ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டா ஒரு படி மேலே இருக்க முக்கியமான காரணங்களுள் முதன்மையானது இது. ஃபேஸ்புக் பயனாளர்கள் நண்பர்களைப் பெறுவதற்கு அனுமதிக்கிறது. ஆனால், இன்ஸ்டாகிராம் பின் தொடருபவர்களைப் பெற வழிவகை செய்கிறது. இன்ஸ்டாவில் உங்கள் ஃபாலோயர் மட்டுமே உங்கள் தகவல்களைப் பார்க்க முடியும். ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராமின் வடிவமைப்பில் அதன் பயனாளர்களுடன் அதிக பெர்சனல் கனெக்ட் இருக்கும். ஃபேஸ்புக்கை ஒப்பிடுகையில் இன்ஸ்டாகிராமின் செயல்பாடு விரைவாக இருக்கும். அதில், பதிவுகளை விரைவாக உங்களால் பார்க்கமுடியும்.
ஃபேஸ்புக்கில் ஒருவரை நண்பராக சேர்த்துக்கொண்டால், உங்களுடைய பதிவுகளை அவரும், அவருடைய பதிவுகளை நீங்களும் பார்த்துக்கொள்ள முடியும். உரையாடலாம். ஆனால், இன்ஸ்டாகிராமில் ஒருவர் உங்களை பின்தொடர்ந்தால் உங்களுடைய பதிவுகள் மட்டுமே அவருக்குத் தெரியும். அவருடைய பதிவுகள் உங்களுக்குத் தெரியாது, நீங்கள் அவரைப் பின்தொடராத பட்சத்தில். அதனால், ‘அட்வைஸ் பன்றது ஈசி, அட்வைஸ் கேக்குறது கஷ்டம்ல…’ என வாழும் இளசுகளிடம் ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டா கூடுதல் மவுசோடு இருக்கிறது.
சிறந்த கதை சொல்லி
ஃபேஸ்புக்கை ஒப்பிடுகையில் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் சீராக ஒருங்கிணைக்கப்பட்டு, கதை சொல்லல் அனுபவம் சிறப்பானதாக இருக்கும். அடிப்படையில், ஸ்டோரீஸ் விஷயத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு ஸ்நாப்சாட்-தான் முன்னோடி. ஆனால், அதை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்ட இன்ஸ்டாவின் அடுத்தகட்ட பாய்ச்சல் அபாரமானது. ஃபேஸ்புக், அதன் செயலியில் ஸ்டோரிஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தியிருந்தாலும், அதில் இன்ஸ்டாகிராம் அளவுக்கு கவனத்தை ஈர்க்கும் மேஜிக் மிஸ்ஸிங். அதேபோல், ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்டியை எங்கேஜ் செய்ய ஹேஷ்டேக் பயன்பாட்டை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கைவிட அதிகம் ஊக்குவிக்கிறது.
Also Read – கூகுளின் மாஸ் அப்டேட்… Android 12 -ல் வரப்போகும் 10 அம்சங்கள்!