உலகின் இரண்டாவது மிகப்பெரிய வெப்சைட் யூ டியூப். கூகுளின் ஆன்லைன் வீடியோ தளமான யூ டியூபில் இருக்கும் வீடியோக்களை ஒரு நாளைக்கு பில்லியன் கணக்கான மணிநேரம் பயனாளர்கள் பார்க்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான மணி நேரங்களுக்கான வீடியோக்கள் யூ டியூப் சர்வரில் அப்லோட் செய்யப்படுகின்றன. 2005-ல் தொடங்கப்பட்ட யூ டியூபை அடுத்த ஆண்டே 1.65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.12 கோடி) கொடுத்து கூகுள் கையகப்படுத்தியது. அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு மக்களே. கூகுள் நிறுவனத்தின் முக்கியமான வருவாய் ஆதாரம் யூ டியூப்தான். 2020-ல் யூ டியூபின் வருமானம் மட்டும் 19.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.14.94 லட்சம் கோடி).
குறிப்பாக 2020 லாக்டௌனுக்குப் பிறகு யூ டியூப் பயன்பாடு உலக அளவில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. யூ டியூபில் சேனல் தொடங்குவது இலவசம்தான் என்றாலும், அதிலிருந்து வருமானம் பார்க்க உங்கள் சேனல் `Monetize’ ஆகியிருக்க வேண்டும். அதற்கென யூ டியூப் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. கூகுள் சர்ச்சில் இதற்கான விடையை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இப்போது நாம் பார்க்கப் போவது யூ டியூபில் அதிக வியூஸ் பெறுவது மற்றும் உங்கள் வீடியோவை எப்படி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்ப்பது என்பதைப் பற்றியும்தான்.
ஐடியா கொடுக்குற உன்னோட யூ டியூப் சேனலுக்கு எவ்வளவு சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்கன்னு கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குதுங்க… அந்த கேள்வியைத் தாண்டி சில பேசிக் ஸ்டெப்ஸ், ஐடியாக்களைத்தான் கொடுக்குறோம். அப்படி இல்லையா… மாஸ்டர் ஸ்டைல்ல சொல்லணும்னா, `If you want take it
Or else venam tension Leave it baby…’
யூ டியூபில் ஆடியன்ஸைச் சென்றடைய 6 ஐடியாக்கள்!
-
1 யூ டியூப் பேசிக்ஸ்
யூ டியூப் சேனலைத் தொடங்கியவுடனே நமக்கு வியூஸ் கிடைத்துவிடாது. முதலில் மெதுவாக நடந்து, அதன்பின்னர் ஓடத் தொடங்கலாம். உங்கள் யூ டியூப் சேனல் லோகோ, டிஸ்கிரிப்ஷன் தொடங்கி உங்கள் சேனல் பற்றிய முழு விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் புரஃபைல் தகவல்கள் முழுமையாக இருக்கும்பட்சத்திலேயே சர்ச்சில் உங்களது சேனல் வீடியோக்கள் காட்டப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதேபோல், வெவ்வேறு டாபிக் குறித்து வீடியோ கண்டெண்டுகள் உங்களிடம் இருந்தால், அதற்கென தனி செக்ஷன்களை குழப்பம் இல்லாமல் குறிப்பிட்டு வீடியோக்களைப் பிரித்துக் காட்டுங்கள். இது வியூவர்ஸுக்கு உங்கள் சேனல் மீது பாசிட்டிவ் தாட்ஸை ஏற்படுத்தும்.
-
2 கீ வேர்ட், டேக்
உங்கள் வீடியோக்களுக்கு முக்கிய கீ வேர்டுகளைக் கொண்ட தலைப்பைத் தேர்வு செய்யுங்கள். கூகுளைப் போன்றே யூ டியூபும் சர்ச் என்ஜின்தான் என்பதால், அதற்கென தனி அல்காரிதமும் இருக்கிறது. மக்கள் அதிகம் தேடும் கீ வேர்டுகளை கூகுள் சர்ச் டிரெண்ட் மூலம் அறிந்துகொண்டு முடிந்தவரை அவற்றை வீடியோ தலைப்புகளில் பயன்படுத்துங்கள். அதேபோல், வீடியோவை அப்லோட் செய்யும்போது அது தொடர்புடைய டேக் வேர்டுகளைச் சரியாக நிரப்புங்கள். டேக் வேர்டுகள், கீ வேர்டுகள் கொண்ட தலைப்புகள் உங்கள் வீடியோவை தேடுதல் முடிவுகள் எனப்படும் சர்ச் ரிசல்ட்டுகளில் காட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். அதேபோல், கீ வேர்டுகளை வைத்தே உங்கள் வீடியோ டிஸ்கிரிப்ஷனையும் கட்டமையுங்கள்.
-
3 தம்ப் இமேஜ்
உங்கள் வீடியோவுக்கு நீங்கள் வைக்கும் தம்ப் இமேஜ், பல நேரங்களில் மேஜிக் நிகழ்த்தும். தரமானதாகவும் அதேநேரம் டீடெய்லாவும் உங்க தம்ப் இமேஜ் இருக்கமாதிரி பார்த்துக்கோங்க. புரியுறமாதிரி ஃபாண்ட், எங்கேஜிங்கான டைட்டில், பேசியல் குளோஸ்-அப்ஸ் இதெல்லாம் பெரும்பால யூ டியூப் சேனல்கள் கடைபிடிக்குற டெக்னிக்ஸ். அதேமாதிரி தம்ப் இமேஜூக்குப் பயன்படுத்துற போட்டோக்கள் ஹை குவாலிட்டில இருக்கதையும் உறுதிப்படுத்திக்கோங்க.
-
4 கற்றுக்கொள்வது
சக்ஸஸ்ஃபுல்லா இருக்க யூ டியூப் சேனல்களுக்கு அடிக்கடி விசிட் அடிங்க. அவங்க என்ன மாதிரியெல்லாம் யூ டியூப் வீடியோவை அழகுபடுத்துறாங்கனு அதுல இருந்து ஒரு இன்ஸ்பிரேஷன் எடுத்து, அவங்ககிட்ட இருந்து கத்துகோங்க. புகழ்பெற்ற ஓவியரான பிகாசோவோவ ஒரு பிரபலமான கோட் இருக்கு, `Good artists Borrw, great artists steal'. அதேநேரம், அந்த மாதிரி கிரியேட்டிவ் வீடியோவை அப்படியே காப்பி அடிச்சு பண்ணிடாதீங்க. அவங்ககிட்ட இருந்த நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டு, அந்த விஷயங்களை உங்க வீடியோ மேக்கிங்லயும், எடிட்டிங்கலயும் பயன்படுத்தலாம். ஏற்கனவே இதுக்கான ரிசல்ட் புரூவ் ஆனதால, உங்க வீடியோவுக்கும் குறைந்தபட்ச முன்னேற்றம் கிடைக்கும் என்பது கியாரண்டி.
-
5 சோசியல் மீடியா
உங்க யூ டியூப் வீடியோ லிங்குகளை சோசியல் மீடியாவுல போஸ்ட் பண்றதை வழக்கமா வைச்சுக்கோங்க. சோசியல் மீடியாவுல ஒரு பாப்புலர் பெர்சனாலிட்டியா உங்களை நீங்க வளர்த்துக்கிட்டா, உங்க சோசியல் மீடியா ஃபாலோயர்ஸ் மூலமா யூ டியூப் வியூஸ் கொண்டுவர்றது ஈசியாகலாம். அதேமாதிரி, உங்க யூ டியூப் வீடியோவோட SEO ரேங்கிங்கையும் எப்படி பலப்படுத்துறதுனு கத்துக்கிட்டு அதையும் சிறப்பா செஞ்சா, சர்ச் என்ஜின் ரிசல்ட்ஸ் மூலமாவும் வியூஸ் பெற முடியும்.
-
6 எண்ட் ஸ்கிரீன்ஸ்
உங்க வீடியோ முடியுற நேரத்துல, அதோட தொடர்புடைய வீடியோக்கள், சோசியல் மீடியா லிங்குகள் இப்படி வெரைட்டியா இருக்க மாதிரி எண்ட் ஸ்கீரின் போடலாம். இது வியூவர்ஸை எங்கேஜா வைச்சுக்க உதவும். அதேபோல், உங்களோட மற்ற வீடியோக்கள் பற்றி அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பா இது அமையலாம். யூ டியூபோட அல்காரிதம் பாப்புலர் வீடியோ பற்றிய ரெக்கமண்டேஷன் கொடுக்குறதுக்கு முன்னாடி இது உங்களோட சேனல் வளர்றதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
0 Comments