Android 12

கூகுளின் மாஸ் அப்டேட்… Android 12 -ல் வரப்போகும் 10 அம்சங்கள்!

கூகுளின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடான Google I/O-வில் ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-ஸின் அடுத்த அப்டேட்டான Android 12 ஓ.எஸ் வெளியிடப்பட்டது. `Material You’ என்ற UI இண்டர்ஃபேஸை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓ.எஸ், கூகுளின் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0-க்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்களுடன் வெளிவந்திருக்கிறது. கூகுளின் பிக்ஸல், விவோ, ஒன் பிளஸ், ஓப்போ உள்ளிட்ட 11 நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் இதன் பீட்டா வெர்ஷனை டிரை பண்ணலாம். முழுமையான வெர்ஷனுக்கு செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும்.

Android 12 -ல் வரப்போகும் 10 அம்சங்கள்

பேட்டரி சேவர் மற்றும் பெர்ஃபாமென்ஸ்

முந்தைய ஓ.எஸ்ஸில் இயங்கும் ஸ்மார்ட்போன்களின் பேட்டர் லைஃபை விட ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்கும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் என்கிறது கூகுள். சி.பி.யு உள்ளிட்ட கோர் சிஸ்டத்தின் பேட்டரி பயன்பாட்டை 22% வரை இந்த ஓ.எஸ்ஸில் குறைத்திருப்பதாகச் சொல்கிறது அந்த நிறுவனம்.

Android 12

பிரைவசி

ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் முழுக்க முழுக்க பயனாளர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் 14 ரிலீஸுக்குப் பிறகு பிரைவசி சர்ச்சை கூகுளைச் சுற்றிய நிலையில், அதற்கேற்ப இந்த அப்டேட்டைக் கொடுத்திருக்கிறது. இதில், பயனாளர்களுக்குத் தனியாக பிரைவசி டேஸ்போர்ட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த மாதிரியான தகவல்களை போனில் இருக்கும் செயலிகள் பயன்படுத்துகின்றன, எப்போதெல்லாம் பயன்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடித்து, அதைத் தடுக்க முடியும்.

கேமரா, மைக்ரோபோன்

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆப், கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவைகளை அக்சஸ் செய்யும் நேரத்தில் அதுகுறித்து பயனாளர்களுக்கு ஒரு இண்டிக்கேட்டர் மூலம் தகவல் கொடுக்கும் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கான அனுமதியை நீங்கள் தடுக்க வேண்டும் என்று நினைத்தால், குவிக் செட்டிங்கில் இருக்கும் ஆப்ஷன் மூலம் உடனடியாக எண்டு கார்டு போட முடியும்.

ரிமோட் ஆப்

ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் டிஃபால்டாக இருக்கும் ரிமோட் ஆப் மூலம் உங்கள் ஸ்மார்ட் டிவியை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

Android 12

ஒன் ஹேண்ட் மோட்

பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்களை எளிதாகக் கையாளும் வகையில் இந்த ஓ.எஸ் வெர்ஷனில் `ஒன் ஹேண்ட் மோட்’ என்ற வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது.

கூகுள் அசிஸ்டெண்ட்

ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் ஸ்லைட் பட்டன்களை லாங் ப்ரஸ் செய்வதன்மூலம் ஸிரியின் உதவியைக் கேட்கமுடியும். அதேபோல், ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் பவர் பட்டனை லாங் ப்ரஸ் செய்து கூகுள் அசிஸ்டெண்ட்டை உயிர்ப்பிக்கலாம்.

Android 12

வைஃபை ஷேரிங்

அருகிலிருப்பவர்களுக்கு உங்கள் வைஃபையை க்யூ.ஆர் கோட் மூலம் எளிதாக ஷேர் செய்யலாம். இதற்காக வைஃபை செட்டிங்க்ஸில் `நியர் ஃபை’ என ஆப்ஷன் சேர்க்கப்பட்டிருக்கிறது.

லொக்கேஷன்

இதுவரை ஸ்மார்ட்போன் ஆப்களில் உங்களின் சரியான லொக்கேஷனைக் கொடுத்து வந்திருப்பீர்கள். இதற்கு மாறாக தோராயமான உங்கள் லொக்கேஷனைக் கொடுக்க இதில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

கலர் கரெக்‌ஷன்

உங்களின் வால்பேப்பருக்கு ஏற்றவாறு, அதிலிருக்கும் நிறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு கலர் கரெக்‌ஷனை ஆட்டோமெட்டிக்காகச் செய்துகொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது.

குவிக் டைல்ஸ்

நோட்டிபிகேஷன் ஷேடை நீங்கள் மேலிருந்து கீழே ஸ்வைப் செய்யும்போது தோன்றும் குவிக் டைல்ஸை சற்றே பெரிதாக வடிவமைத்திருக்கிறது கூகுள். வட்ட வடிவத்துக்குப் பதில் செவ்வக வடிவ பாக்ஸில் ஐகான்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கூகுளின் Android 12 பற்றிய உங்கள் கருத்து என்ன.. கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Also Read – சிறுவர்களுக்குப் பிரத்யேக இன்ஸ்டாகிராம்… ஃபேஸ்புக்கின் திட்டம் எழுப்பும் கேள்விகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top