சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர், தங்கள் நிறுவனத்தின் மொத்த கண்ட்ரோலை எடுக்க நினைத்த டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்குக்கு எதிராக Poison Pill Strategy எனப்படும் தடுப்பாட்டத்தை ஆடியிருக்கிறது. அப்படின்னா என்னனுதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
ட்விட்டர் – எலான் மஸ்க்
ட்விட்டரின் மொத்த பங்குகளில் 9.2% பங்குகள் எலான் மஸ்கிடம் இருக்கின்றன. இதனால், அந்த நிறுவனத்தின் பெரிய பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர், திடீரென அதன் நிர்வாகக் குழுவில் இணைவார் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. இந்தநிலையில், ட்விட்டரின் ஒரு பங்குக்கு $52.40 என்று மதிப்பிட்டு 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து அந்த நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற நினைத்தார் மஸ்க். ஏப்ரல் 16 நிலவரப்படி பங்குச்சந்தையில் ட்விட்டரின் ஒரு ஷேரோட மதிப்பு 45.08 அமெரிக்க டாலர்கள். இப்படிப் பார்த்தா மஸ்க் கொடுக்குற தொகையை பெருசாத்தான் தெரியும். ஆனால், ஒரு கம்பெனியை வாங்க அந்த நிறுவனத்தின் சம்மதமும் அவசியம்தானே… அதைவிட்டுட்டு என்கிட்ட பணம் இருக்கு, நான் நினைச்சதைச் செய்வேன்னு எந்தவொரு சின்ன நிறுவனத்தையும் வாங்கிட முடியாதுல்ல… அப்படியான நினைப்புல மஸ்க் இருக்க, அதை Poison Pill Strategy-ன்கிற தடுப்பாட்டம் மூலம் எதிர்த்திருக்கு ட்விட்டரோட நிர்வாகக் குழு.
Poison Pill Strategy-னா என்ன?
ரொம்ப சிம்பிள்ங்க.. எதிரிநாட்டுப் படைகள்கிட்ட சிக்குற Spy-கிட்ட எப்பவுமே ஒரு மாத்திரையோ சயனைடு மாதிரியான உடனடியா உயிர் பறிக்குற சமாசாரங்களோ இருக்கும்ல அதைத்தான் Poison Pillனு சொல்வாங்க. அவங்க கொடுக்குற டார்ச்சர்ல உண்மை எதையும் சொல்லிடக் கூடாதுங்குற நோக்கத்துல அதை சாப்பிட்டுட்டு உயிர் விடுவாங்க. அதே மாதிரியான Strategy-தான் இதுவும். வலுக்கட்டாயமாக தங்கள் நிறுவனத்தைக் கைப்பற்ற ஒருத்தரோ, ஒரு குரூப்போ நினைக்குறப்ப, அதுக்கு எதிரா தங்களோட நிறுவனத்துல ஏற்கனவே பங்குதாரரா இருக்கவங்களுக்கு கூடுதல் பங்குகளை வாங்குற உரிமையைக் கொடுப்பாங்க. அதுவும் சலுகை விலையில்…
இதனால், பங்குகளை வைச்சிருக்கவங்க கிட்ட கூடுதல் ஷேர்ஸ் போய்சேரும். இதன்மூலம், தங்களோட நிறுவனத்தை வாங்க வர்றவங்களோட இண்ட்ரஸ்டை நீர்த்துப் போகச் செய்றதோடு, ஷேர் வேல்யூவையும் கூட்டிடுவாங்க… பெயரைப் போலவே இதை முழுங்கி ஏப்பம் விடுறதும் அவ்வளவு ஈஸியில்லை. ஆனால், எலான் மஸ்கை எதிர்த்து இப்படியான ஒரு துணிச்சலான முடிவை ட்விட்டர் நிர்வாகமும், அதோட இந்திய வம்சாவளி சி.இ.ஓ பராக் அக்ராவாலும் எடுத்திருக்காங்க… என்னோட ஆஃபரை ட்விட்டர் ஏத்துக்கலைன்னா என்கிட்ட Plan B-யும் இருக்குனு மஸ்க் ஒருபக்கம் சொல்லிருக்காரு… பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..
Also Read –