சோசியல் மீடியா

சோசியல் மீடியாவிலிருந்து திடீரென `Quit’ பண்ணீங்கனா என்ன நடக்கும் – 9 விஷயங்கள்!

தினசரி நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைதளங்களில் இருந்து திடீரென நீங்க வெளியேறுனா என்ன நடக்கும்னு என்னிக்காவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா… 9 விஷயங்கள்ல என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

சோசியல் மீடியா

சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள்

2020 ஆய்வறிக்கை ஒன்றின் தரவுகளின்படி உலக அளவுல சராசரியா ஒருவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 145 நிமிஷங்களை சோசியல் மீடியாக்கள்ல செலவழிக்கிறதா சொல்றாங்க. இது இரண்டு மணி நேரத்துக்கும் மேல… இந்த நம்பர் படிப்படியாகக் கூடிக்கிட்டே வருது. அதுவும் குறிப்பா கொரோனா லாக்டௌன் சமயத்துல சோசியல் மீடியாக்களோட வளர்ச்சி அசுரப் பாய்ச்சல்ல இருந்துச்சு. இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூ-டியூப் இப்படி சோசியல் மீடியா என்கிற வரையறைக்குள் வரும் லிஸ்ட் ரொம்ப நீளமானது. இப்படியான சோசியல் மீடியாக்கள் இல்லாம ஒருநாளை நம்மால் கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியாது. அங்கே பகிரும் கலாசார நிகழ்வுகள், தனிப்பட்ட கருத்துகள், நண்பர்களுடனான அரட்டைனு எல்லாத்தையும் மிஸ் பண்ணுவோம்னு நீங்க நினைச்சுக் கூட பார்த்திருக்க மாட்டீங்க…

ஒருவேளை நீங்க திடீர்னு சோசியல் மீடியாவில் இருந்து `Quit’ பண்ணிட்டா என்ன நடக்கும்?

  • நீங்க உங்க வேலைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் போடும் அந்த உழைப்பால் கிடைக்கும் ரிசல்டுகளும் பெரிய அளவில் வித்தியாசம் காட்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் `Productivity’ ஜாஸ்தி ஆகும்னு சொல்றாங்க.
  • சோசியல் மீடியாக்களை அடிக்கடி செக்-இன் செய்து அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கதை நீங்க தவிர்த்திடுவீங்க. இதுவும் ஒருவகையான multi tasking-தான். இதனால, நீங்க செய்யுற வேலைல கவனம் அதிகமாகி, குறைந்த நேரத்துல வேலையைச் செஞ்சு முடிப்பீங்கனு ஆய்வாளர்கள் சொல்றாங்க. நாம செய்யுற வேலைக்கான நேரத்தை அதிகப்படுத்துறதுல முக்கியமானது multi tasking.
  • The ​​American Psychological Association என்ன சொல்றாங்கனா, மல்டி டாஸ்கிங்னால நீங்க நார்மலா ஒரு வேலையை செய்து முடிக்கிற நேரத்தை விட கூடுதலா 40% நேரம் எடுக்கும்னு சொல்றாங்க. மல்டி டாஸ்கிங் இல்லாட்டி ஒரு வேலையை 40% வேகமா செய்து முடிப்பீங்க.
  • பொதுவா சோசியல் மீடியா உங்க கிரியேட்டிவிட்டியைக் கடுமையாகப் பாதிக்கும் என்பது உளவியல் நிபுணர்கள் கருத்து. சோசியல் மீடியாவில் இருந்து நீங்க ஃப்ரியாகும்போது, உங்க கிரியேட்டிவிட்டியும் கூடும், அதேபோல் சரியான நேரத்தில் பிரேக் எடுத்து உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரமும் அதிகமாகும்.
  • சோசியல் மீடியா ஆப்-களில் இருந்து காட்டப்படும் நோட்டிபிகேஷன்களால் தொடர்ச்சியாக நீங்கள் எங்கேஜாகவே இருப்பீர்கள். அதேநேரம், இதிலிருந்து வெளியே வந்துவிட்டால், அந்த மாதிரியான பரபரப்புகள் எதுவுமின்றி அமைதி கிட்டும்.
  • சோசியல் மீடியாவில் இருந்து வெளியே வந்த ஆரம்ப காலகட்டங்களில் நீங்கள் அதிக கவலையோடு இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். சோசியல் மீடியாவில் நீங்கள் ஆக்டிவாக இருந்தபோது நடந்த உரையாடல்கள், உங்கள் நண்பர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்களோ என்கிறரீதியிலான கவலைகள் ஆரம்பத்தில் ஆட்கொள்ளும். இதிலிருந்து மீள சிறிதுகாலம் பிடிக்கும் என்பது இயல்புதான்.
  • சமூக வலைதளங்களை ரொம்ப ஆக்டிவ்வாக சிலர் பயன்படுத்துவது போல, அதற்கு அடிமையாகும் அளவுக்கு நீங்க ஒரு யூஸர் என்றால், உங்களுக்கு டோபோமைன் சுரப்பும் அதிகமாக இருக்கும். திடீரென அதிலிருந்து நீங்கள் வெளியே வரும்போது, ஆக்டிவிட்டியை அதிகரிக்கும் டோபோமைன் சுரப்பும் குறைந்துவிடும். இதனால், அடிக்கடி சோர்ந்து போனது போன்ற உணர்வைப் பெறுவீர்கள்.
  • ஆரம்ப காலகட்டங்களில் எதிர்மறை எண்ணங்களால் நீங்கள் ஆட்கொள்ளப்படுவீர்கள். மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வர முடியும் என்கிறார்கள்.
  • சோசியல் மீடியா பயன்பாடு சுத்தமாக இல்லை என்றால், உங்களின் தூக்கமும் மேம்படும்.

Also Read – நண்பர்களோடு நேரம் செலவழிப்பது மெண்டல் ஹெல்த்துக்கு ஏன் Essential – 4 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top