Orkut

ஆர்குட் தோல்வி தொடங்கியது எங்கே… 5 காரணங்கள்! #Orkut

கூகுளின் சமூக வலைதளமான ஆர்குட் பற்றி 90ஸ் கிட்ஸ் எமோஷனலாக ட்விட்டரில் விவாதித்துக் கொண்டும், பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டும் இருக்கிறார்கள். 2014-ல் மூடுவிழா நடத்தப்பட்ட ஆர்குட் 7 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்க என்ன காரணம்?

கம்ப்யூட்டரையும் இணையதளத்தையும் 2000-களின் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய 90ஸ் கிட்ஸின் முதல் சோஷியல் மீடியா ஆர்குட்டாகத் தான் இருக்கும். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய `Orkut Büyükkökten’ என்ற ஊழியரின் பெயரால் 2004-ல் தொடங்கப்பட்டது. 2008 வாக்கில் மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக உருவெடுத்த ஆர்குட், இந்தியா, பிரேசில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 20 கோடிக்கும் மேலான பயனாளர்களுடன் விஸ்வரூபமெடுத்தது.

ஆர்குட் மூலம் நண்பர்களுடன் இணைப்பில் இருப்பது, போட்டோ, ஹாபிகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். நீங்கள் மாடரேட்டராக இருக்கலாம், ஆல்பங்களைப் பதிவேற்றலாம், இணைப்புகளைப் பகிரலாம் என சோஷியல் மீடியாவில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ… அதையெல்லாம் ஆர்குட்டில் செய்யலாம். ஜிடாக் மெசெஞ்சரைப் பயன்படுத்தி நண்பர்களுக்கு மெசேஜ் கூட அனுப்ப முடியும். உங்கள் நண்பர்களை, `cool, Trustworthy, sexy’ உள்ளிட்ட பல ஆப்ஷன்களில் 1 முதல் 5 வரை நீங்கள் ரேட் செய்யவும் முடியும். தீமை மாற்றிக்கொள்வது, க்ரஷ் லிஸ்ட் உருவாக்குவது என ஆர்குட் கொடுத்த வசதிகள் கொஞ்சம் நீளமானதுதான்.

பிரைவசி விஷயத்தில் மற்ற பயனாளர்கள் உங்கள் புரஃபைலைப் பார்ப்பதை நீங்கள் தடுக்க முடியாது ஆர்குட்டுக்குப் பின்னடைவைக் கொடுத்தது.

ஆனால், திடீரென ஒன் ஃபைன் டே ஆர்குட் சேவையை நிறுத்தப்போவதாக அதன் பயனாளர்கள் அனைவருக்கும் கூகுள் மெயில் அனுப்பியது. 2014ம் ஆண்டு ஜூலை 5, 6 தேதிகளில் கூகுளிடமிருந்து ஆர்குட் பயனாளர்களுக்கு வந்த அந்த இ-மெயில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுவரை இருந்த தகவல்களை ஒரே ஒரு ஜிப் ஃபைலாக டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று அறிவித்து, செப்டம்பர் மாதத்தோடு மூடுவிழா நடத்தியது கூகுள். வளர்ந்துவந்த அந்த சமூக வலைதளத்தை மூட கூகுள் முடிவெடுத்தது ஏன் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இந்தியாவில் மே 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டங்களால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பிரபல சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று ஒரு தகவல் பரவியது. இதனால், 90ஸ் கிட்ஸ் தங்களது நினைவலைகளை எமோஷனலாக ட்விட்டரில் பகிர்ந்துகொண்டனர். ஒருகட்டத்தில் ட்விட்டரில் டிரெண்டாகும் அளவுக்குத் தீவிரமாக அவர்கள் ரசிகர்கள் களமாடவே, அது என்னடா புது பெயர் என 2கே கிட்ஸ் கூகுளை நச்சரிக்கத் தொடங்கினர்.

Orkut

ஆர்குட்டின் தோல்வி தொடங்கியது எங்கே?

ஃபேஸ்புக்கின் அசுர வளர்ச்சிதான் ஆர்குட் மூடப்பட்டதற்குக் காரணம் என பொதுவாக சொல்லப்பட்டாலும், வேறு சில காரணங்களும் டெக் வல்லுநர்களால் முன்வைக்கப்படுகிறது.

  • எது நடந்ததாலும் டோண்ட் கேர் என்ற கூகுளின் பாலிஸிதான் ஆர்குட்டின் தோல்வி தொடங்கிய புள்ளி. ஃபேஸ்புக்கின் தொடக்க காலத்தில் நெட்டிசன்களை ஈர்த்த ஒரு அம்சம் லைக் பட்டன். காலத்துக்கேற்ப அதை அப்டேட் செய்துகொள்ளவில்லை. கூகுள் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ஆர்குட்டில் ஃபீட்பேக் கொடுப்பது எளிதாக இல்லை.
  • ஆர்குட்டை வீழ்த்திய மற்றொரு அம்சம், உங்கள் புரஃபைலை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்ற தகவலைப் பார்க்க முடியும் என்பதே. இது ஒருவித பாதுகாப்பின்மையை பயனாளர்களிடம் ஏற்படுத்தியது என்று சொல்லலாம். லிங்க்ட் இன்னில் இந்த வசதி இருந்தாலும், அது புரபஷனலாகப் பலருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள நேர்மறையான வகையில் உதவியது.
  • பிரைவசி விஷயத்தில் மற்ற பயனாளர்கள் உங்கள் புரஃபைலைப் பார்ப்பதை நீங்கள் தடுக்க முடியாது ஆர்குட்டுக்குப் பின்னடைவைக் கொடுத்தது. சொந்தத் தகவலை பொதுவெளியில் இருக்கும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதும் நெட்டிசன்களுக்குக் கவலையளித்தது.
  • இப்போதைய ஃபேஸ்புக் பக்கத்தைப் போல, நீங்கள் ஸ்க்ரோல் செய்தால் ஆர்குட்டில் போஸ்டுகள் லோட் ஆகாது. ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த வசதி இல்லையென்றாலும், பின்னர் மேம்படுத்தப்பட்டது.
  • சோசியல் மீடியா அனுபவம் ஆர்குட்டில் பிளீஸிங்க்காக இல்லையென்றே சொல்லலாம். கூகுளின் லெகஸி மட்டுமே அதைக் காப்பாற்றப் போதுமானதாக இல்லை. மொத்தமாக மதிப்பிழக்கும் முன்னர், நாமே மூடிவிடலாம் என்று நினைத்து கூகுள் முடியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.

Also Read – சமூக வலைதளங்களுக்கு இந்தியா வகுத்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top