லேப்டாப்

வொர்க் ஃப்ரம் ஹோமில் லேப்டாப் சிக்கல் கொடுக்கிறதா… ஹீட்டிங் பிரச்னையைத் தவிர்க்க 5 ஐடியாக்கள்!

கொரோனா தொடர்பான ஊரடங்கால் பெரும்பான்மையானவர்கள் வொர்க் ஃப்ரம் ஹோமில் உள்ளனர். இதனால், லேப்டாப்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இல்லையெனில், இளைஞர்கள் பெரும்பாலான பொழுதுகளை லேப்டாப் மற்றும் மொபைலுடன்தான் கழித்து வருகின்றனர். இத்தகைய நிலையில், லேப்டாப் பயன்படுத்தும் பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை ஹீட்டிங்தான் எனலாம். லேப்டாப் மிகச்சிறிய அளவில் இருப்பதால் அதன் பாகங்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும். இதனால், காற்றோட்டம் என்பது மிகவும் குறைவான அளவிலேயே இருக்கும். முறையாக நாம் லேப்டாப்பை பராமரிக்காவிட்டால் ஹீட் ஆவது உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். இதனால், ஹார்ட்வேர் செயலிழப்பு வரை ஏற்படும் என்கிறார்கள். மடிக்கணினி வெப்பமடைவதைத் தடுக்க சில எளிய வழிகளைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

லேப்டாப்

* பெரும்பாலான லேப்டாப்களில் ஏர் வெண்ட்கள் உள்ளன. உங்களது லேப்டாப்பை தலையணை, படுக்கை மற்றும் உங்களது மடியில் வைப்பதால் ஏர் வெண்டுகள் அடைக்கப்படுகின்றன. இதனால், உங்களது லேப்டாப் எளிதில் வெப்பம் அடையும். இதனைத் தடுக்க உங்களது லேப்டாப்களை ஃப்ளாட்டான இடங்களில் வைத்து பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் லேப் டாப்களை பயன்படுத்தும்போது ஏர் வெண்ட்களை எதுவும் அடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். லேப்டாப் ஸ்டேண்ட் மற்றும் ஹோல்டர் போன்றவற்றை வாங்கி அதில் வைத்து உங்களது லேப்டாப்பை பயன்படுத்து இன்னும் நல்லது.

* உங்களது வீட்டில் ஏ.சி அறை இருந்தால் அதில் வைத்து உங்களது மடிக்கணினியைப் பயன்படுத்துங்கள். ஏ.சி அறை இல்லாதபட்சத்தில் லேப்டாப் கூலிங் பேடை வாங்கி அதனை பயன்படுத்துங்கள். இவை உங்களது லேப்டாப்பை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். லேப்டாப் வெப்பமடைவதற்கு கூலிங் பேட் பயன்படுத்துவது என்பது தற்காலிக தீர்வாகும்.

* லேப்டாப்பை சிறிது நேரம் பயன்படுத்தினாலே வெண்ட் மற்றும் ஃபேன்களில் அதிகளவில் தூசிகள் வந்து அடைகின்றன. இதனால், லேப்டாப் வெப்பநிலை குறைவது கட்டுப்படுத்தப்பட்டு வெப்பநிலை அதிகரிக்கிறது. லேப்டாப் கூல் பேட் பயன்படுத்தும் அதே சமயத்தில் ஏர் ப்ளோவர் அல்லது வேக்கம் கிளீனரைப் பயன்படுத்தி லேப்டாப்பில் படிந்துள்ள தூசிகளை சுத்தம் செய்யுங்கள். லேப்டாப் சர்வீஸ் செண்டர்களில் உங்களது லேப்டாப்பை கொடுத்தும் தூசிகளை சுத்தம் செய்துகொள்ளலாம்.

* உங்களது லேப்டாப்பின் வெப்பநிலையை கண்காணியுங்கள். இதற்கென தனியாக Real Temp, GPU-Z, Speccy, HWMonitor மற்றும் Core Temp போன்ற ப்ரோகிராம்கள் உள்ளன. இவையனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி உங்களது லேப்டாப்பின் வெப்பநிலையை கண்காணிக்கலாம். உங்களது லேப்டாப் ப்ராசஸரின் வெப்பநிலை அதிகபட்சமாக 65 சி அளவில் இருப்பதையும் உங்கள் ஜிபியூ வெப்பநிலை 80 சி அளவுக்கு கீழ் இருப்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். இதுவே, பாதுகாப்பான வெப்பநிலையாக உள்ளது.

* ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல ப்ரோக்ராம்களில் பணியாற்றுவதைத் தவிருங்கள். ஒரு ப்ரோக்ராமில் நீங்கள் பணிபுரிந்து முடித்ததும் அதனை மினிமைஸ் செய்யாமல் அதனை க்ளோஸ் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்களது லேப்டாப்பின் செயல்திறன் அளவு குறைவாக இருக்கும். இதனால், லேப்டாப் சூடாவதும் குறையும்.

Also Read : செல்லப்பிராணி வளர்க்கப்போறீங்களா… இந்த 5 விஷயங்களை மனசுல வைச்சுக்கோங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top