உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்களில் கூகுள் முதன்மையானது. அமெரிக்க அதிபர் தொடங்கிய தங்களுடைய க்ரஷின் மொபைல் எண் வரை கூகுளில் மக்கள் தேடாத விஷயங்களே இருக்க முடியாது. அவ்வளவு பெருமைகளையும் பெற்ற கூகுள் பற்றிய சுவாரஸ்யமான ஒன்பது தகவல்கள் இங்கே…
* கூகுள் தொடங்கிய 1998-ம் ஆண்டு ஒரு நாளைக்கு சுமார் 5,00,000 பேர் கூகுளை பயன்படுத்தி வந்தனர். இப்போது, வினாடிக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூகுளை பயன்படுத்தி வருகின்றனர். கூகுளின் ஒரு பகுதியாக இருக்கும் யூ டியூபில் ஒவ்வொரு மாதமும் மக்கள் ஆறு பில்லியன் மணி நேரம் அளவுக்கு வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.
* கூகுளின் ஒரிஜினல் பெயர் பேக்ரப் என்று அழைக்கப்பட்டது. இணைய தளங்களை வரிசைப்படுத்தும் தளமாக இதனை உருவாக்க விரும்பினர். கூகுள் முதலில் லேரி பேஜ் மற்றும் செர்கே பிரின் என்ற கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்டது. கூகுள் என்ற சொல் கூகோல் என்ற சொல்லில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கூகோல் என்பதன் பொருள் ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியங்களை போடுவதால் வரும் எண்ணைக் குறிப்பதாகும். கூகுள் என்ற சொல் சரியான ஸ்பெல்லிங் என்றும் இன்வெஸ்டர்ஸ் கூகோல் என்ற சொல்லை தவறுதலாக கூகுள் என்று எழுதியதால் கூகுள் என்ற சொல் வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. கூகுளுக்கு உண்மையில் ஆறு பிறந்தநாள்கள் உள்ளன. ஆனால், கூகுள் செப்டம்பர் 27-ஐ தனது பிறந்தநாளாக கொண்டாடி வருகிறது.
* ஆரம்பத்தில் கூகுளின் நிறுவனர்கள் அதனை விற்க முயன்றனர். 2002-ம் ஆண்டு கூகுளை யாகூ நிறுவனமானது 3 பில்லியன் டாலருக்கு வாங்க முன்வந்தது. எனினும், கூகுள் இதனை விற்க மறுத்துவிட்டது. இப்போது அதன் மதிப்பு 400 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம். ஆனால், யாகூ நிறுவனமானது பின்னாளில் அழிவை நெருங்கியது.
* கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத மோட்டோ `Don’t be evil’ என்பதாகும்.
* கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் கூகுளின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதனை கூகுள்ப்ளெக்ஸ் என்று அழைப்பார்கள். இந்த அலுவலகம் எப்போதும் பசுமையாகயும் பெட் ஃப்ரீ அலுவலகமாகவும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு விலையின்றி உணவு அளித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் கூகுள்தான்.
* கூகுளின் முதல் டூடுல் 1998-ம் ஆண்டு அமெரிக்காவில் பிரபலமான `பர்னிங் மேன்’ என்ற நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.
* மார்ச் 2001 வரை கூகுளின் முகப்பு பக்கமானது மையத்தில் இல்லாமல் வலது பக்கத்தில் அலைன்மண்ட் செய்யப்பட்டு இருந்தது.
* கூகுள் நிறுவனத்தின் முதல் ட்வீட்டானது பைனரி குறியீட்டில், “I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010″ என்று பதிவிடப்பட்டிருந்தது. அதாவது இதற்கு, “I’m feeling lucky” என்று பொருள்.
* 2006-ம் ஆண்டு மெரியம் வெப்ஸ்டர் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதிகளில் கூகுள் என்ற சொல் இடம்பிடித்தது. கூகுள் என்பதற்கு இணையத்தை பயன்படுத்து தகவல்களை தேடுதல் என்பது பொருள்.
Also Read : ஒன்றிய உயிரினங்களின் ட்விட்டர் சேட்டைகள்!