ஸ்மார்ட்போன் ஹேக்

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா… எச்சரிக்கும் 5 விஷயங்கள்!

ஹேக்கிங்கால் உங்கள் ஸ்மார்ட் போன் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி… இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்தினால், அதைக் கண்டுபிடிக்க முடியம்.

ஸ்மார்ட் போன் ஹேக்கிங், ஆன்லைன் மோசடியைப் போல பொதுவான பிரச்னையாக இன்றைய சூழலில் மாறிவிட்டது. வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு உள்ளிட்ட பல பெர்சனல் தகவல்கள் நம்முடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் என்பதால், அதை ஹேக்கர்கள் குறிவைக்கிறார்கள். மொபைல் ஆப்கள், இணையதள முகவரிகள் போன்றவைகள் மூலம் எளிதாக உங்கள் ஸ்மார்ட் போனில் நுழையும் ஹேக்கர்கள், பெர்சனல் தகவல்களைத் திருடி, அதன்மூலம் பண மோசடி, அடையாளத் திருட்டு உள்ளிட்டவைகளில் ஈடுபடுகின்றனர். உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நீங்கள் கொஞ்சம் உற்றுக் கவனித்தாலே கண்டுபிடித்துவிட முடியும் என்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள்.

ஸ்மார்ட்போன் ஹேக்கிங் – எச்சரிக்கும் ஐந்து விஷயங்கள்!

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

மொபைல் பேட்டரி

உங்கள் மொபைல் பேட்டரி வழக்கத்துக்கு மாறாக விரைவிலேயே குறைந்துவிடுகிறதா… ஆம் என்றால் உங்கள் ஸ்மார்ட்போனில் மால்வேர் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல், பேக்ரவுண்டில் மொபைல் ஆப்கள் செயல்பாட்டில் இருந்தாலும் சார்ஜ் சீக்கிரமே குறைந்து போக வாய்ப்பிருக்கிறது. இப்படியான சூழலில் பேக்ரவுண்டில் செயல்பாட்டில் இருக்கும் ஆப்பைக் குளோஸ் செய்துவிட்டு, பேட்டரி சார்ஜ் தீரும் நிலையை ஆய்வு செய்வது நல்லது.

மொபைல் ஆப் க்ராஷ்

உங்கள் மொபைலில் நீங்கள் பயன்படுத்தும் செயலிகள் அடிக்கடி செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் பிரச்னை ஏற்படலாம். மால்வேர் தாக்குதலால் இதுபோன்று உங்கள் ஸ்மார்ட்போனில் செயலிகள் க்ராஷாகி செயல்பாட்டை நிறுத்தினால், கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலிகள் அப்டேட் ஆகாமல் இருந்தால், அப்டேட் செய்துவிடுங்கள். பல நேரங்கள் ஆப்கள் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் இதுபோன்று பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்டேட் செய்தபிறகும் இந்தப் பிரச்னை தொடர்ந்தால், ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

ஓவர் ஹீட்டிங்

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

வழக்கத்துக்கு மாறாக உங்கள் ஸ்மார்ட்போன் சூடாகிறதா… அப்படியென்றால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஹேக்கர் உங்கள் மொபைலைப் பயன்படுத்துவதால் தன்னால் அது சூடாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள். அப்படியான சூழ்நிலையில் ஒரு டெக்னீசியனிடம் சென்று ஸ்மார்ட்போனைக் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது.

பாப்-அப்

தேர்டு பார்ட்டி எனப்படும் பாதுகாப்பில்லாத நபர்களிடம் இருந்து பெறப்படும் செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது, அதிக எண்ணிக்கையில் தேவையில்லாத பாப்-அப் விண்டோக்கள் ஸ்கிரீனில் திடீரெனத் தோன்றுவதுண்டு. இது வழக்கமானதுதான் என்றாலும், அதை நாம் புறக்கணித்துவிடக் கூடாது. உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க தேர்டு பார்ட்டி எனப்படும் மூன்றாவது நபர் அளிக்கும் செயலிகள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவது நலம்.

ஃபிளாஷ் லைட்

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஃபிளாஷ் லைட்டுகள் தன்னால் திடீரென ஆன் ஆகிறதா.. அப்படியென்றால் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற சூழலில், உங்கள் போனில் இருக்கும் மால்வேரை அழிக்க, உடனடியாக ஃபேக்டரி ரீசெட் அடிக்கலாம்.

Also Read – ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால் மீட்பது எப்படி… சிம்பிள் ஸ்டெப்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top