செய்திகள் கொட்டிக்கிடக்கும் இன்றைய சூழலில் அதில் உண்மையிலேயே செய்தி எது, பொய்யான செய்தி எது என்பதைப் பிரித்துப் பார்ப்பதே மிகப்பெரிய வேலை என்றாகிவிட்டது.
செய்திகள் முதல் ஸ்டேட்டஸ் வரை சோஷியல் மீடியா தகவல்களால் நிரம்பி வழிகிறது. உங்கள் அனுமதியில்லாமலேயே உங்கள் மூளைக்குள் தேவையில்லாத தகவல்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா பெருந்தொற்று போன்ற அசாதாரண சூழலில், அதுகுறித்த தவறான செய்திகள், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சோஷியல் மீடியா மூலம் பரப்பப்படுகின்றன. மன்னர் காலம்தொட்டே வதந்திகள் தனி ஆவர்த்தனம் செய்த வரலாறுகள் உண்டு.
ஃபேக் நியூஸ்களிலிருந்து ஒதுங்கியிருக்க என்ன செய்யலாம்?
சோர்ஸைக் கவனியுங்கள்
எந்தத் தகவலை எங்கு நீங்கள் பார்த்தாலோ அல்லது கேட்டாலும் சரி, அந்தத் தகவலின் சோர்ஸ் எங்கிருந்து என்பதை அறிய முயற்சி செய்யுங்கள். சோஷியல் மீடியாவில் ஒரு தகவலைப் பார்த்து, அதுதான் சோர்ஸ் என்ற முடிவுக்கு வர வேண்டாம். அதை நம்புவதற்கு முன்னர் அதன் சோர்ஸை டிராக் செய்ய முயற்சி எடுங்கள்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்…
சோஷியல் மீடியாவில் பார்க்கும் எல்லா தகவல்களையும் உண்மை என கண்ணை மூடிக் கொண்டு நம்பாதீர்கள். அதை மற்றவர்களுக்குப் பகிரும் முன்னர், அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொண்ட பின்னரே அதைச் செய்யுங்கள்.
தொழில்நுட்பத்தைத் துணைக்கு அழையுங்கள்
ஃபேக் நியூஸைக் கண்டுபிடிக்க தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஃபேக் நியூஸ்களில் இடம்பெற்றிருக்கும் போட்டோ அல்லது வீடியோ வடிவில் இருந்தால், அதன் ஸ்கிரீன்ஷாட்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் போன்ற ஆன்லைன் டூல் உங்களுக்கு உதவலாம்.
ஃபேக்ட் செக்
வாட்ஸ் அப் ஃபார்வார்டுகள் பொய்யான அல்லது தவறான தகவல்களைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பிட்ட செய்தி/தகவல் குறித்து ஒரு சில நிமிடங்கள் செலவழித்து ரிசர்ச் செய்தாலே, அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முடியும். அது தொடர்புடைய செய்திகளை ஆன்லைனில் நம்பகத்தன்மை கொண்ட இணையதளங்கள் அல்லது எளிதாகக் கிடைக்கும் ரிசோர்ஸ்களின் மூலம் கிராஸ் செக் செய்யுங்கள். இதன்மூலம் ஃபேக் நியூஸ்களை எளிதாகத் தவிர்க்க முடியும்.
Also Read – அமரர் ஊர்தி… மாநகராட்சி கட்டணம்… பிணங்களை எரிப்பதற்கு `பேக்கேஜ்’!