கூகுளிடம் ஒரு கேள்வியையாவது கேட்காமல் நம்முடைய ஒருநாள் முழுமை பெறுவதில்லை. சமையல், அழகுக் குறிப்புகள் தொடங்கி உடல்நலன், டெக், வெப் சீரிஸ்கள், ஆன்லைன் ஆஃபர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்க கூகுளிடம் தினசரி கோடிக்கணக்கான கேள்விகளைக் கேட்டு பதில் பெறுகிறார்கள். கூகுள் சர்ச் 24 ஹவர்ஸும் பிஸிதான் பாஸ்! இதில், பெரும்பாலானோர் மறந்துவிடும் விஷயம் ஒன்றிருக்கிறது. கூகுள் என்பது ஒரு சர்ச் பிளாட்ஃபார்ம் மட்டும்தான். அதனிடம் சொந்தமாக எந்தவொரு கண்டெண்டும் இருக்காது. உங்களுக்குத் தேவையான தகவல்கள் தொடர்பான ஆன்லைன் வெப்சைட்டுகளை அது உங்களுக்குக் காட்டும். அதேபோல், கூகுள் காட்டும் தகவல்கள் அனைத்தும் சரியானதாகவும் உண்மையானதாகவும் மட்டுமே இருக்கும் என்பது கட்டாயமல்ல.
ஆனால், குறிப்பிட்ட சில விஷயங்களை நீங்க கூகுள் பண்ணவே கூடாதுன்னு டெக் வல்லுநர்கள் சொல்றாங்க. அப்படி 7 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். ஏன் அந்த விஷயங்களைக் கூகுள் பண்ணக் கூடாதுன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க…
உங்கள் பெயர்
கூகுளில் கேட்க எத்தனையோ கேள்விகள் இருக்கும். ஆனால், உங்கள் பெயரை கூகுளில் தேட முயற்சிப்பது எதிர்பாராத சங்கடத்தை உருவாக்கலாம். அவுட் டேட்டடான போட்டோ, நெகட்டிவ் தகவல்கள் என கூகுள் ரிசல்ட் பேஜ் உங்களை அப்செட்டாக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் டெக் வல்லுநர்கள். சிம்பிளாக அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

ஆன்லைன் பேங்கிங் வெப்சைட்
உங்கள் வங்கியின் சரியான ஆன்லைன் பேங்க் URL தெரிந்தால் மட்டுமே, அதை கூகுளில் தேடுங்கள். அதிகாரப்பூர்வ வெப்சைட் அட்ரஸ் தெரியாமல் நீங்கள் கூகுளில் சர்ச் செய்தால், மோசடி வலைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
கஸ்டமர் கேர்
நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொடர்பு எண்களை கூகுளில் தேடுவது பாதுகாப்பானது இல்லை என்கிறார்கள். இதற்குப் பதிலாக குறிப்பிட்ட நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டுக்கு ஒரு விசிட் அடித்து, அவர்களின் தொடர்பு எண்ணை அங்கிருந்து நீங்கள் எடுத்துக் கொள்வது பாதுகாப்பான நடைமுறை. கூகுளில் தேடினால் வரும் ரிசல்டில் இருக்கும் எண்கள் மூலம் மோசடிகள் அரங்கேற வாய்ப்பிருக்கிறது.

மருந்துகள்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதற்கான மருந்துகளை கூகுளில் தேடுவது ஆபத்தான செயல். எந்தவொரு சூழலிலும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெர்சனல் ஃபைனான்ஸ் – ஸ்டாக் மார்க்கெட்
எப்போதுமே பெர்சனல் ஃபைனான்ஸ் அல்லது பங்குச் சந்தை தொடர்பான சீரியஸான அட்வைஸுக்கு கூகுளிடம் உதவி கேட்காதீர்கள். முதலீட்டு ஆலோசனைகள் போன்றவற்றை கூகுளிடம் நீங்கள் கேட்டால், அது மோசடிகளில் சிக்க வழி செய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.
இ-கமர்ஸ் ஆஃபர்
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபட்டிருக்கும் போது இ-கமர்ஸ் ஆஃபர்கள் பற்றி கூகுளைக் கேட்காதீர்கள். ஆஃபர்கள் என்ற பெயரில் மோசடி வெப்சைட்டுகள் எக்கச்சமாக இருக்கின்றன. அவற்றுக்குள் நீங்கள் செல்லும்போது, உங்கள் பிரவுசர் வழியாக பெர்சனல் தகவல்கள் திருடுபோகலாம்.

சட்டவிரோதம்
சட்டவிரோதமாக எதைப்பற்றியும் கூகுளில் தேட வேண்டாம். அது பின்னாட்களில் உங்களுக்குத் தேவையில்லாத தலைவலியை உருவாக்கும்.
சரி எதைத்தான் கூகுளில் தேடலாம் என்கிறீர்களா?
கூகுளில் தேட எத்தனையோ ஆக்கப்பூர்வமான கேள்விகள், தகவல்கள் இருக்கின்றன. ஏன் காமெடியாகக் கூட பல கேள்விகளை நீங்கள் கூகுளிடம் கேட்கலாம். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் கூகுளிடம் பதில் இருக்கும்.
கடந்த 2020-ல் கூகுள் சர்ச்சில் உலக அளவில் டாப் – 5

இந்திய அளவில் டாப் – 5

Also Read – ஃபேக் நியூஸ்களிலிருந்து ஒதுங்கியிருக்க என்ன செய்யலாம் – 4 ஐடியாக்கள்!
0 Comments