இ-கமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வணிக அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எந்தவொரு பொருளையும் வீட்டிலிருந்தே உங்களால் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இ-கமர்ஸ் வணிகத்தின் பெருவெற்றி. இந்திய மார்க்கெட்டில் வணிகம் செய்யும் முறையையே இ-கமர்ஸ் மாற்றியிருக்கிறது. 2017ம் ஆண்டு இந்திய இ-கமெர்ஸ் மார்க்கெட்டின் மதிப்பு 38.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.290.5 ஆயிரம் கோடி). இது 2026-ல் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சியடையும் என்று கணித்திருக்கிறார்கள் (ரூ.15.09 லட்சம் கோடி).
இந்த தகவல்களெல்லாம் எதுக்குனு கேக்குறீங்களா… விஷயம் இருக்கு. ஆன்லைன்ல ஷாப்பிங் பண்றவரா இருந்தா, ஃபோலியான பொருட்களை அடையாளம் தெரிஞ்சிருக்குறது எப்படின்னு பார்ப்போம். அதுக்கு சிம்பிளா 7 வழிகள் இருக்கு.
-
1 காண்டாக்ட் டீடெய்ல்ஸ்
பொதுவாக ஆன்லைனில் அதிகம் விற்பனையாகும் பொருட்களை அப்படியே ஜெராக்ஸ் காப்பியெடுத்தது போல போலியாக உருவாக்கி மார்க்கெட்டில் விடுவது அதிகம். அப்படிப்பட்ட போலியான பொருட்கள், ஒரிஜினலைப் போலவே தங்களது போலியான பொருட்களையும் உருவாக்கிவிடுவார்கள். ஆனால், அவர்கள் கோட்டை விடும் ஒரு இடம் இருக்கிறது. ஒவ்வொரு பொருளின் லேபிளிலும் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் முகவரி இடம்பெற்றிருக்கும். அதேபோல், குறைகள் இருந்தால் தொடர்புகொள்ள வேண்டிய முகவரியும் இடம்பெற்றிருக்கும். நீங்கள் ஆன்லைனில் ஒரு பொருளை வாங்குவதாக இருந்தால், அது ஒரிஜினலா டூப்ளிகேட்டா என கண்டுபிடிக்க இந்த முகவரிகள் இருக்கானு செக் பண்ணிட்டு அப்புறமா ஆர்டர் போடுங்க.
-
2 பேக்கேஜ்
நீங்க வாங்குற பொருளோட பேக்கேஜ்ல என்னென்ன மாதிரியான பொருட்கள் இருக்கும்னு தெரிஞ்சு வைச்சுக்கோங்க. உதாரணமா, இப்போ வர்ற பெரும்பாலான ஸ்மார்ட் போன் பிராண்டுகள், சார்ஜர், சிம் கார்டு எஜெக்டர் பின், சேஃப் கேஸ் கொடுப்பாங்க. இப்படி நீங்க வாங்கப்போற பொருளோட பேக்கேஜ்ல இடம்பெற வேண்டிய எல்லாப் பொருளும் கரெக்டா இருக்கானு செக் பண்ணிக்கோங்க. இதுல ஒரு பொருள் மிஸ்ஸாகும்பட்சத்தில், அது ஃபேக்கா இருக்க வாய்ப்பு இருக்கு.
-
3 ஸ்கிரீன் குவாலிட்டி
இது டிஜிட்டல் பொருட்களுக்குப் பொருந்துற பாயிண்ட். ஸ்மார்ட்போனோ, ஸ்மார்ட் டிவியோ, லேப்டாப்போ வாங்கப் போறீங்கன்னா, அந்தப் பொருளோட ஸ்கிரீன் குவாலிட்டி ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு ஐபோனை எடுத்துக்கலாம். ஆன்லைனில் அதிகமாக ஃபேக்கா விற்கப்படுற பொருள் ஆப்பிளோட ஐபோன். ஐபோனை வாங்குறதுக்கு முன்னாடி, அதோட ஸ்கீரின் பிரைட்னைஸை செக் பண்ணிப் பாருங்க. அப்படியே அதை ஆப்பிளோட அதிகாரப்பூர்வ வெப்சைட்ல இருக்க பிரைட்னஸ், இமேஜோட கம்பேர் பண்ணிப் பாருங்க உங்களுக்கே அது ஒரிஜினலா, ஃபேக்கானு தெரிஞ்சுடும்.
-
4 லோகோ
என்னதான் ஒரு பொருளை காப்பியடிச்சு ஃபேக்கா தயாரிச்சாலும், சில விஷயங்களில் போலிகள் கோட்டைவிடுவார்கள். அதில், தரம் தவிர்த்து முக்கியமானது குறிப்பிட்ட நிறுவனத்தோட லோகோ. ஒரிஜினல் பொருட்களோட லோகோவை அந்தந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட இடத்துலதான் பொசிசன் பண்ணிருப்பாங்க. அந்தப் பொருளை வாங்குறதுக்கு முன்னாடி, ஆன்லைனில இருக்க போட்டோக்களை செக் பண்ணி அதைத் தெரிஞ்சுக்கோங்க. நீங்க வாங்கப் போற பொருள்லயும் லோகோ சரியான இடத்துலதான் இருக்கானு செக் பண்ணதுக்கு அப்புறம் ஆர்டர் பண்றது நல்லது.
-
5 பேட்டர்ன்
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் ஒரு பேட்டர்னை ஃபாலே பண்ணியிருந்தால், அதைச் சரியாகக் கடைபிடித்திருப்பார்கள். உதாரணத்துக்கு, ஒரு பெரிய நிறுவனத்தோட செக்டு ஷர்டை நீங்கள் எடுக்க விரும்பினால், அந்த நிறுவனம் அந்த ஷர்டில் வரிகள் முழுமையாக அல்லது நேராக இடம்பெற்றிருப்பதை உறுதி செய்திருப்பார்கள். பெரும்பாலான ஃபேக் தயாரிப்புகளில் இந்த முழுமை மிஸ்ஸாகியிருக்கும்.
-
6 சேஃப் கேஸ்
ஒரிஜினல் பொருட்களோடு கொடுக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களும் நேர்த்தியாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு ஆப்பிளின் ஏர் பாட்ஸ் வாங்கப் போகிறீர்கள் என்றால், அதனுடைய சேஃப் கேஸ் டிசைன் மீதும் கவனம் செலுத்துங்கள். ஆப்பிள் வெப்சைட்டுக்குப் போய் சேஃப் கேஸ் டிசைனைப் பார்த்து, ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். இந்த ஒப்பீடு ஒரிஜினலைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவலாம்.
-
7 தரம் குறைந்த பேக்கேஜிங்
பெரும்பாலான நிறுவனங்களின் பொருட்கள் நேர்த்தியாக பேக் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். பேக்கேஜை வைத்தே அது ஒரிஜினலா அல்லது ஃபேக்கா என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். பேக்கேஜ் தரமில்லாமல், நேர்த்தியாக இல்லாமல் இருந்தால் அது நிச்சயம் ஃபேக்காக இருக்க வாய்ப்பிருக்கிறது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்லைனில் பொருட்கள் வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், நம்பகமான மற்றும் முன்னணி இணையதளங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. அதேபோல், ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர், ஏற்கனவே அதை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் எழுதிய ரிவ்யூவைப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
0 Comments