ஸ்மார்ட் வாட்ச் வாங்கும் யோசனையில் இருக்கிறீர்களா?வாங்குவதற்கு முன்பு நீங்கள் கவணிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


-
1 ஜாடிக்கேத்த மூடி அவசியம்!
நீங்கள் வாங்க இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது என்பதை முதலில் கவனியுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனுடன் அதை நேரடியாக இணைக்க முடியுமா என்பதும் முக்கியம். அதேபோல, அந்த ஸ்மார்ட் வாட்ச்சை நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் கேட்ஜெட்களில் எதனுடனெல்லாம் ஜோடி சேர்த்து டூயட் பாட வைக்கமுடியும் என்பதை தீர ஆராயுங்கள்.
-
2 டிஸ்பிளே
டிஸ்பிளே LCD-யா அல்லது AMOLED-ஆ என்பதை நீங்கள் முடிவெடுக்க வேண்டும். பேட்டரியின் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சம் டிஸ்பிளே. ஸ்க்ரீனுக்கு அதிகமான வேலை இருக்கும் போது பேட்டரியின் திறன் வெகுவாகக் குறையும். நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டிய இடைவெளியும் குறையும். அடிக்கடி சார்ஜ் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பவர்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் ஸ்மார்ட் வாட்சின் ஸ்க்ரீன்தான்.
-
3 ஸ்மார்ட்டாகத்தான் இருக்கிறதா?
அந்த ஸ்மார்ட் வாட்ச் எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறது என்பதையும் கவனியுங்கள். நொடிக்கொரு தரம் மொபைலை எடுத்து, வராத மெசேஜைத் தேடப்போய் வெட்டியாக நேரம் செலவழிப்பதற்குப் மாற்றாக உங்களால் ஸ்மார்ட் வாட்ச்சைப் பயன்படுத்த முடியுமா எனப் பாருங்கள். ஒன்றுக்கும் உதவாத மெசேஜ் நோட்டிபிகேஷன்களையும் பயணத்தின்போது மொபைலை எடுக்க சிரமப்படாமல், `கார்டு மேல இருக்க நம்பர் சொல்லு சார்' என்கிற ரீதியில் வாய்ஸ் கால்களையும் உங்கள் ஸ்மார்ட் வாட்சின் மூலமாகவே துண்டிக்க முடியுமா எனப் பாருங்கள்.
-
4 ஃபிட்னெஸ்தான் இலக்கு
ஃபிட்னெஸ் ஃப்ரீக்குகள் முதலில் ஸ்மார்ட் வாட்ச்சில் எத்தனை 'ஸ்போர்ட்ஸ் மோட்' இருக்கிறது என்பதைப் பார்ப்பார்கள். ஆனால், ஒரு சராசரி நபர் உடல்நலத்தில் கவணம் செலுத்த வேண்டிய விஷயங்கள் சில இயல்பாகவே இருக்கும். உங்களுக்குப் பொருந்தக்கூடிய/தேவையான விஷயங்கள் எல்லாம் வாட்ச்சில் இருக்கிறதா என்பதை பார்த்து முடிவெடுங்கள்.
-
5 பேஷன் ஸ்டேட்மெண்ட்
நீங்கள் அணியப்போகும் ஸ்மார்ட் வாட்ச் ஒரு கேட்ஜெட் மட்டுமே அல்ல. அது ஒரு ஃபேஷன் ஸ்டேட்மெண்ட். உங்கள் ஸ்மார்ட் வாட்ச் எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறது என்பதைக் கவனித்துத் தேர்ந்தெடுப்பதைப் போலவே, அதன் டிஸைன் மற்றும் லுக் எப்படி இருக்கிறது என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.
0 Comments