பெண்கள் அதிகம் பயன்படுத்தும் 8 எழுத்து பாஸ்வேர்டு..!

Nord Security என்ற நிறுவனம், VPN சர்வீஸ் வழங்குவது, சைபர் செக்யூரிட்டி ஆலோசனைகளை வழங்குவது என பல வசதிகளை வழங்கி வருகிறார்கள். அவர்களுடைய NORDPASS என்ற சர்வீஸ் மூலமாக பாதுகாப்பான பாஸ்வேர்ட் தேர்ந்தெடுப்பது, Password Management Service போன்றவற்றை வழங்குகிறார்கள். இதற்கும் மேலாக அவர்கள் இச்சமூகத்துக்கு வழங்கும் பெரும் சேவை ஒன்று இருக்கிறது.

அது, ஒவ்வொரு ஆண்டும் மிக சுலபமாக ஹேக் செய்யப்பட்ட, மோசமான பாஸ்வேர்ட்களின் பட்டியலை வெளியிடுவது.

அப்படி, Nordpass வெளியிட்ட 2021-ம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் பட்டியலை பார்த்தால், சில ஆச்சரியங்கள் இருக்கின்றன. உலகளவில் எந்தெந்த நாடுகளில், எந்தளவுக்கு பாஸ்வேர்ட்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நீங்களே இந்த வரைபடத்தில் பாருங்கள்.

Countries most affected by data leaks

இதில் இந்தியா மிகக் குறைந்தளவிலான தாக்குதலையே சமாளித்திருக்கிறது. அவ்வளவு பாதுகாப்பான பாஸ்வேர்டுகளையா இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி வருகிறதா? இந்தியர்கள் பயன்படுத்தும் மோசமான பாஸ்வேர்டுகளின் பட்டியலைப் பார்ப்போமா?

  • Password
  • 12345
  • 123456
  • 123456789
  • 12345678
  • india123
  • 1234567890
  • 1234567
  • qwerty
  • abc123
  • iloveyou

முழுமையான 200 மோசமான பாஸ்வேர்டுகளை இங்கு பார்க்கலாம்.

இந்தியாவில் ஆண்களும் பெண்களும் எப்படி பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலையும் தந்திருக்கிறார்கள். நீங்களே அந்தப் பட்டியலைப் பாருங்க

இந்திய ஆண்கள், பெண்களின் பாஸ்வேர்ட்கள்

பெண்களுடைய பாஸ்வேர்டுகளில் சாய்ராமும், கிருஷ்ணாவும் அதிகம் பயன்படுத்தப்பட, ஆண்களோ எண்களிலேயே சுழண்டுகொண்டிருக்கிறார்கள்.

பாஸ்வேர்டுகளில் முன்னாள் காதலிகளின் பெயர்கள் வைக்கும் நியாண்டர்தால் கால மனிதர்களின் பழக்கம் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

பாஸ்வேர்ட் மீம்

omsairam என்ற பாஸ்வேர்டை உடைத்துக் கண்டுபிடிக்க ஹேக்கர்களுக்கு மூன்று மணிநேரம் தேவைப்பட்டிருக்கிறது.

krishna என்ற பாஸ்வேர்டை crack செய்ய ஹேக்கர்கள் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நொடிக்கும் குறைவு.

jaimatadi அதாவது Jai Mata Di, என்ற பக்திப் பாடலின் முதல் சில வார்த்தைகளையும் நம்மவர்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்த, அந்த பாஸ்வேர்டைக் கண்டறிய ஹேக்கர்களின் நிரல்களுக்கு 24 மணிநேரம் எடுத்திருக்கிறது.

Dictionary வார்த்தைகளை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்பதால், இந்தியப் பெயர்களுக்கும் வார்த்தைகளுக்கும் அதிக நேரம் எடுத்திருக்கிறது.

இன்னும் கொஞ்சம் வருஷத்துல கோலியே ஓய்வை அறிவிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை. ஆனால், இன்னமும் sachin பெயரை பாஸ்வேர்டாக பயன்படுத்துகிறார்கள்.

பாஸ்வேர்ட் மீம்

abhishek, priyanka, rajesh, deepak, lakshmi, aditya, sanjay, sandeep, ashish, manish, anjali, suresh, prakash, vishal இந்தப் பெயர்களை எல்லாம் மக்கள் தங்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் அதிகமானோர் தங்கள் பெயர்களையே பாஸ்வேர்டாக பயன்படுத்துகிறார்களாம்.

பெண்களைவிட ஆண்கள் தங்கள் பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு விஷயம் “கெட்டவார்த்தைகள்/வசவுச்சொற்கள்”

அதேசமயம் ஆண்களை விட பெண்கள் பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு விஷயம் iloveyou

Also Read : `80-களின் கனவுக்கன்னி ராதா ஃபேனா நீங்க?’ – உங்களுக்கான குவிஸ்தான் இது!

சரியான பாஸ்வேர்டை எப்படித் தேர்ந்தெடுப்பது?

Use complex passwords : பாஸ்வேர்டுகளில் எண்கள், சிம்பல்கள், எழுத்துகளைக் கலந்து பயன்படுத்த வேண்டும். Lowercase, higher case-களையும் கலந்து பயன்படுத்த வேண்டும். dictionary words-களை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.

உங்கள் காதலியை நீங்கள் 2019-ம் ஆண்டு திருச்சூரில் சந்தித்திருந்தால் உங்கள் பாஸ்வேர்டை Luv*2019@TRIC இப்படி அமைக்கலாம். இதுதான் உலகின் ஆகச்சிறந்த பாஸ்வேர்ட் என்று சொல்ல முடியாது. ஆனால், ஓரளவுக்கு கடினமான பாஸ்வேர்ட்.

குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை பாஸ்வேர்டுகளை மாற்றுங்கள்.

ஒரு முறை பயன்படுத்திய பாஸ்வேர்டை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்.

Also Read: தமிழ்நாட்டையே ஆட்டுவித்த ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா காம்போவின் ஸ்பெஷல் பாடல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top