வழக்கமாக ஆன்ட்ராய்ட் போன்களில் வந்த ஒரு வசதி ஐபோனுக்கு சில வருடங்கள் கழித்து பிரமாண்ட அறிவிப்புகளோடு கொண்டு வரப்படும்… நம்ம ஐபோன் பாய்ஸும் ‘ஆஹோ… ஓஹோ…’ என புகழ்வார்கள். ஆனால், அது ஆன்ட்ராய்டில் இருந்ததை விட சிறப்பாகவே சில சமயங்களில் இருக்கும். இத்தகையை வரலாற்று சிறப்பை ட்விட்டர் அடிக்கடி உடைக்கும். ட்விட்டர் ஸ்பேஸ் வசதியும் முதலில் ஐபோன்களுக்கே கொண்டு வரப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐபோன்களுக்கு அளித்த வசதி ஒன்றை தற்போதுதான் ட்விட்டர் ஆன்ட்ராய்ட் போன்களுக்கு கொண்டு வந்திருக்கிறது.
DM என சுருக்கமாக அழைக்கப்படும் DIrect Message, ட்விட்டரின் பிரைவேட் மெசேஜிங் வசதி. இதில் எளிமையான ஆனால், உபயோகமான ஒரு விஷயம் ‘DM-களில் தேடுவது’. இந்த வசதி மொபைல் ஆப்’களில் இல்லாமல் இருந்தது.
Also Read : சென்ட்ரல் விஸ்டா திட்டம் – நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை!
இந்த வசதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன்களுக்கு வழங்கியது ட்விட்டர்.
விரைவில் ஆன்ட்ராய்ட் போன்களுக்கும் இந்த வசதி வரும் என எதிர்பார்த்து காத்திருந்து இந்த விஷயத்தையே எல்லோரும் மறந்துவிட்டார்கள். இந்நிலையில் இன்று ட்விட்டர் இந்த வசதியை ஆன்ட்ராய்டுக்கும் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தாலும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டு வந்திருப்பதாக ட்விட்டர் அறிவித்திருக்கிறது.