இந்திய அணி

T20 World Cup: இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படியிருக்கிறது? #IndVsNZ

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கடினமாகியிருக்கிறது. இந்திய அணியால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியுமா?

இந்திய அணி

துபாயில் நடைபெற்ற சூப்பர் 12 குரூப் 2 போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியைச் சந்தித்திருந்ததால், இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா களம் கண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுக்க, எளிதான இந்த டார்கெட்டை 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து நியூசிலாந்து எட்டியது. இதனால், 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டது. அதேநேரம், இந்திய அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.

இந்திய அணி
இந்திய அணி

இந்தியா இடம்பெற்றிருக்கும் குரூப் 2-வைப் பொறுத்தவரையில், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகள் மூலம் அரையிறுதி வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்துடன் ஆப்கானிஸ்தானும் களத்தில் இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இந்திய அணியை வென்ற நியூசிலாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நமீபியா 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இந்தியா ஐந்தாவது, ஸ்காட்லாந்து ஆறாவது இடத்தில் இருக்கின்றன.

இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா?

அடுத்தடுத்த இரண்டு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற சிறிய அளவிலான வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி, ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து என தனது அடுத்த 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டும். இது மட்டும் போதாது, மற்ற போட்டிகளின் முடிவும் இந்திய அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும். நியூசிலாந்து அணி அடுத்து விளையாடும் 3 போட்டிகளில் இரண்டிலாவது தோற்க வேண்டும். அதேபோல், நமீபியா அணியும் இரண்டு போட்டிகளில் தோற்க வேண்டும்.

இந்திய அணி
இந்திய அணி

இந்திய அணி, தனது அடுத்த 3 போட்டிகளிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். ஒருவேளை புள்ளிகள் அடிப்படையில் அந்த அணியோடு சமநிலை ஏற்படும் பட்சத்தில், அரையிறுதிக்குத் தகுதிபெற ரன் ரேட் கைகொடுக்கும். இவையெல்லாம் நடக்க வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும், இதுதான் இந்தியா அரையிறுதிக்குத் தகுதிபெற ஒரே வழி. இது நடக்கவில்லையென்றால், டி20 போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் ஐசிசி கோப்பைகள் எதுவும் இன்றி முடிவுக்கு வரும்.

இந்திய அணியின் அடுத்த போட்டிகள்:

  1. இந்தியா Vs ஆப்கானிஸ்தான் – நவம்பர் 3
  2. இந்தியா Vs ஸ்காட்லாந்து – நவம்பர் 5
  3. இந்தியா Vs நமீபியா – நவம்பர் 8

Also Read – T20 World Cup: இந்தியா சறுக்கியது எங்கே… #IndVsPak போட்டியின் 4 முக்கிய தருணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top