YouTube Classics: யூடியூபில் நீங்க மிஸ் பண்ணக் கூடாத தமிழ் கிளாசிக் நிகழ்ச்சிகள்!

என்னதான் புதுசு புதுசா நாளொரு வெப் சீரிஸ் வாரமொரு படம் வெளிவந்தாலும் யூ டியூப்ல இருக்க சில நிகழ்ச்சிகள் காலத்தால் அழியாத வரம் பெற்றவை. அந்த மாதிரி பல ஷோக்கள் நம்ம மனசை வருடிக் கொடுத்து லேசாக்கிடுற வல்லமை பெற்றவை.

அப்படி, யூ டியூப்ல காணக்கிடைக்கிற கிளாசிக்கான எவர்கிரீன் 10 நிகழ்ச்சிகள்/ஷோக்கள் பத்திதான் நாம இப்பப் பார்க்கப் போறோம்.

நட்சத்திர சங்கமம்

சன் டிவி ஒருங்கிணைப்பில் 70ஸ் நாயகிகளைக் கொண்டாடிய நிகழ்ச்சி நட்சத்திர சங்கமம். இயக்குநர் மனோபாலா, நடிகை ரோஹினி தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் சரோஜா தேவி, எம்.என்.ராஜம், லதா, வாணிஸ்ரீ, காஞ்சனா, விஜயகுமாரி, வெண்ணிற ஆடை நிர்மலா,

வாணிஸ்ரீயின் நடிப்பில் வசந்த மாளிகையில் இடம்பெற்றிருந்த, கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆளில்லையோ’ தொடங்கி சரோஜா தேவியின்,மானல்லவோ கண்கள் தந்தது’, விஜயகுமாரி – எஸ்.எஸ்.ஆர் நடிப்பில் உருவாகியிருந்த ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக, செவ்வாய் கோவைப்பழமாக, லாதாவும் எம்ஜிஆரும் நடித்திருந்த உரிமைக்குரல் படத்தின் `விழியே கதையெழுது’ என எவர்கிரீன் கிளாச்சிக்கல் பாடல்களை வடிவேலு குரலில் கேட்டிருக்கீங்களா… நம்ம நினைச்சே பார்க்க முடியாத காம்பினேஷன் இது. ஆனா, இந்தப் பாட்டுகளையெல்லாம் தன்னோட வசீகர வாய்ஸுல வைகைப்புயல் பாடுனதை இந்த ஷோவுல நீங்க ரசிக்க முடியும். அவர் பாடுனதை அரங்கத்துல இருந்த அத்தனை பேரும் லயிச்சுப் போய் ரசிக்குறதை நீங்க பார்க்க முடியும். சிவாஜி, காஞ்சானா நடித்த சிவந்த மண் பட்டத்து ராணி பாடல் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரஸ்யத்தையும் நடிகை சச்சு பகிர்ந்திருப்பார். சிவக்குமார், மோகன், ராம்கி, விக்னேஷ், சுரேஷ், ராஜேஷ், குயிலி தொடங்கி நடிகர் கார்த்தி வரையில் கலந்துக்கிட்ட இந்த நிகழ்ச்சியை யூ டியூப்ல நீங்க எப்பப் பார்த்தாலும் அந்தக் காலத்துக்கே ஒரு டிராவல் போய்ட்டு வந்த அனுபவம் கொடுக்கும்.

வாலி 1000

எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய், சிம்பு, தனுஷ் வரையில் நான்கு தலைமுறைகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பாட்டெழுதிய கவிஞர் வாலியைக் கொண்டாடும் வகையில் வாலி 1000 என்ற நிகழ்ச்சி வசந்த் டிவியில் ஒளிபரப்பானது. ஏறக்குறைய 15 எபிசோடுகளைக் கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சியில் வாலியோடு திரைத்துறை பிரபலங்கள், கலந்துகொண்டு ஒவ்வொரு எபிசோடிலும் அவரிடம் கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறுவார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, குஷ்பு, வெங்கட் பிரபு, நா.முத்துக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டிருப்பார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனுடனான பயணத்தில் தொடங்கி காதலன் முக்காலா முக்காபுலா பாடல் வரிகள் உருவான பின்னணி வரை வாலி இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பார். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலு கந்தனை நான் மறவே’,நான் ஆணையிட்டால்’, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றெழுதத் தொடங்கிய வாலிமச்சான் ஓப்பன் த பாட்டில்’ என்று தலைமுறைகளுக்கேற்றவாறு எழுத்தையும் தனது டோனையும் அப்டேட் செய்துகொண்டவர். இதனாலேயே வாலிபக் கவிஞர் என்று கொண்டாடப்பட்டார். தமிழ் சினிமாவின் பயணம் 60 ஆண்டுகாலம் எப்படி மாறி வந்திருக்கிறது, அதன் பயணம் குறித்து தெரிஞ்சுக்க இந்த நிகழ்ச்சி நிச்சயம் ஒரு தகவல் சுரங்கமா இருக்கும்.

Celebrating the Legend: KS Ravikumar

குடும்பங்கள் கொண்டாடும் லெஜண்டரி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரைக் கொண்டாடிய தருணம். ஒரு பேட்டியாக மட்டுமே இல்லாமல், அவரது படங்களை ரசித்துப் பார்த்த ஃபேமிலி ஆடியன்ஸுடனான ஒரு இன்ட்ராக்டிவ் செஷனாகவே இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும். நமது தமிழ்நாடு நவ் சேனல் நடத்திய அந்த நிகழ்வில் படையப்பா தொடங்கி அவ்வை சண்முகி, தசாவதாரம் வரையில் கதை உருவாக்கம் முதல் ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்கள் வரை பகிர்ந்திருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். நான்கு பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த நிகழ்ச்சி மூலம் கே.எஸ்.ரவிக்குமார் பற்றி மட்டுல்ல பிரபலங்கள் பலரது வெளியில் தெரியாத பக்கங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமாரின் இரண்டு மகள்கள் நிகழ்ச்சிக்கு வந்து அவரிடமே இதுவரை பகிர்ந்துகொள்ளாத எமோஷனல் மொமெண்டுகளையும் பகிர்ந்திருப்பார்கள். அத்தோடு, இயக்குநர் மனோபாலா, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பிரபலங்களும் கே.எஸ்.ரவிக்குமாருடனான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்திருப்பார்கள்.

ரஜினியைப் பேட்டி எடுத்த கே.பாலசந்தர்

சிவாஜிராவை ரஜினிகாந்தாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமைமிகு இயக்குநர் கே.பாலச்சந்தர். தான் அறிமுகப்படுத்திய ரஜினியை அவரே பேட்டி எடுத்த அபூர்வ நிகழ்வு தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டு விழாவில் அரங்கேறியது. பாரதிராஜா, இளையராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், விக்ரமன், வெற்றிமாறன் உள்ளிட்ட பல தலைமுறை இயக்குநர்களோடு நடிகர், நடிகைகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஒரு போர்ஷன்தான் ரஜினியை கே.பாலச்சந்தர் பேட்டிகண்ட நிகழ்வு. இதில், ஆட்டோபயோகிராஃபி, இயக்கம் தொடங்கி சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்ததால் இழந்தவைகள் என பல ஆங்கிளிலும் ரஜினியிடம் கேள்வி கேட்டிருப்பார் கே.பி. சுவாரஸ்யமான இந்தத் தொகுப்பு ரஜினி பற்றி இதுவரை நாம் தெரிந்துகொள்ளாத புதிய பக்கங்களையும் காட்டியிருக்கும். மிஸ் பண்ணாமப் பாருங்க ஃபோக்ஸ்..!

உங்கள் நான் – கமல் ஸ்பெஷல்

நடிகர், இயக்குநர், பாடகர், நடன இயக்குநர் என பன்முகம் காட்டிய கலைஞானி கமல்ஹாசனைக் கொண்டாடிய நிகழ்வு இது. திரையுலகில் 59 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த கமலை அவரை நினைவுச் சாளரங்களை மீட்டி ரசிகர்களுக்கும் அதன் சாராம்சத்தை அள்ளி அள்ளி பருகச் செய்த நிகழ்ச்சி இது. ரஜினி தொடங்கி கே.எஸ்.ரவிக்குமார், சங்கர், ஜெயம் ரவி, கார்த்தி என நடிகர் கமலுடனான தங்கள் அனுபவங்களை மேடையில் பகிர்ந்திருப்பார்கள். இசைஞானி இளையராஜாவின் எக்ஸ்க்ளூசிவ் பாட்டுக் கச்சேரியும் அதில் கமல் பாடியதும் நிச்சயம் வித்தியாசமான அனுபவம் கொடுக்கும். நான்கு எபிசோடுகளாக ஹாட்ஸ்டாரில் இருக்கும் நிகழ்ச்சியை மிஸ் பண்ணாமப் பாருங்க மக்களே!

https://www.hotstar.com/in/tv/ungal-naan/1260014268

நண்பன் 100 நாள் நிகழ்வு

ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜீவா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் 100 நாள் நிகழ்வு விஜய் ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்று சொல்லலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது கோபிநாத், சிவகார்த்திகேயன். இந்த நிகழ்ச்சியை நீங்க எப்போ பார்த்தாலும் புதுசா ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்க முடியும். `நீதான் ஹீரோவாகிட்டயே இன்னும் நீ இங்க என்ன பண்ற’ என்று சிவகார்த்திகேயனை விஜய் கலாய்த்தது முதல் விஜயின் ஆன்-ஸ்கிரீன் ஜோடி பற்றிய கேள்விக்கு சங்கீதா கொடுக்கும் பதில் என பல சுவாரஸ்யங்கள் இதுல இருக்கும். சிவகார்த்திகேயன் – கோபிநாத்துடனான கேள்வி-பதில் செஷனில் மனம் திறந்து விஜய் நிறையவே பேசியிருப்பார்.

ஸ்டண்ட் யூனியன் நிகழ்ச்சி

தென்னிந்திய ஸ்டண்ட் யூனியன் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், விவேக், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் என கோலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாமல், மோகன்லால், பாலகிருஷ்ணா உள்ளிட்ட மற்ற மாநில ஹீரோக்களும் கலந்துகொண்ட நிகழ்வு இது. நடிகர் விவேக் பேச்சு அப்ளாஸ் அள்ளியது. அஜித்துக்கு தல பட்டம் கொடுத்தது யார் தொடங்கி பல சுவாரஸ்யமான சம்பவங்களை அவர் பகிர்ந்திருந்தார். நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஸ்டண்ட் கலைஞர்களின் சாகசங்களும் இடம்பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி சண்டைக் கலைஞர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்தது. 2017-ல் முதல்முறையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி கொரோனா முதல் லாக்டவுன் காலத்திலும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

Also Read – மக்கள் மனதில் விஜய் டிவி இடம் பிடிக்கக் காரணமான 8 நிகழ்ச்சிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top