எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 5 Minutes Craft அல்லது Life Hacks என்று சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும். அதைப் பார்க்கும் போது ̀இதுக்கு பருத்தி மூட்ட குடோன்ல இருந்துருக்கலாம்ல’ என்று தோன்றும். நம் எண்ணத்தைதான் இவர் எந்தவித டயலாக்கும் இன்றி ̀இதைத்தான் ராத்திரி பூராம் உக்காந்து ஒட்டிக்கிட்டு இருந்தியா’ என்று சொல்லாமல் தனது காமெடியான ரியாக்ஷனிலேயே சொல்வார். இவர் யார், பாம்பேயில் என்ன செய்துகொண்டிருந்தார் (பாட்ஷா ஸ்டைல்), போன்ற இவரது பர்சனல் பக்கங்களை பார்க்கலாம் வாங்க!
-
1 ஒரு சின்ன இன்ட்ரோ!
இவரது நிஜப்பெயர் Khabane Lame. செல்லமாக Khaby என்று அழைக்கப்படுபவர். இவர் இத்தாலி குடியுரிமைபெற்ற Senegalese. இத்தாலியை சேர்ந்த Turin எனும் பகுதியில் உள்ள Chivasso எனும் ஊரில் வசித்து வருகிறார். டிக்டாக் சூப்பர் ஸ்டாரான இவருக்கு 34 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். மார்ச் 9, 2000-ல் (21 வயது) பிறந்த. இவர் ஒரு 2K கிட். வீட்டிற்கு ரொம்பவே செல்லம். டிக் டாக்கில் மார்ச் 2020-ல் அக்கவுன்ட் ஆரம்பித்து போஸ்ட் போட்டுக் கொண்டு வருகிறார். அதே சமயம் ரேஸிசம் பற்றியும் நிறைய பேசக்கூடியவர்.
-
2 சோஷியல் மீடியா சென்சேஷன்
ஒரு வருட காலமாக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வரும் இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர். இவரது போஸ்ட் பல்வேறு ஃபேஸ்புக் குரூப்களிலும், சோஷியல் மீடியாக்களிலும் வைரலாகி வருகிறது. அதுவும் இவர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் தமிழ்நாட்டின் பக்கம் ரொம்பவே பரிச்சயம் ஆனார். கொரோனா காலத்தில் இவர் சானிடைஸர் போட்டுக் கொண்டதுதான் இவரின் முதல் வீடியோ. தான் பதிவிட்ட முதல் போஸ்ட்டே செம வைரல் ஆனாது. ஷங்கர் சர்கார் என்பவர் இவரது வீடியோவை மார்வெல் மீம்ஸ் என்ற ஃபேஸ்புக் குரூப்பில் ஷேர் செய்திருக்கிறார். அது 16 ஆயிரம் ரியாக்ஷன்கள் மற்றும் 21 ஆயிரம் ஷேர்களையும் பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு க்ரூப்களிலும், மீம் பேஜ்களிலும் வலம் வரத் தொடங்கினார். 2020 ஜூலையில் Kevin Believe என்பவரோடு இணைந்து சில Social Experiments வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார்.
-
3 மீம்களின் நாயகன் :
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்துதான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார். இவரது ரியாக்ஷன் ஒன்றை மட்டும் வைத்து எப்பேற்பட்ட போட்டோவுக்கும் மீம் போட்டு மகிழத் தொடங்கினர் மீம் கிரியேட்டர்கள். இவரைப் போலவே பலரும் இமிடேட் செய்து வீடியோ அப்லோட் செய்வார்கள். அதுவும் பல மில்லியன் வியூஸ்களையும் பெற்றிருக்கும். ஆனால், ரியல் ஹீரோ அவர்தான் என்ற ரக கமென்ட்களைத்தான் நாம் கமென்ட் டப்பாவில் பார்க்க முடியும். அந்தளவிற்கு இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
-
4 காதல் கபி கபி
2000-ல் பிறந்த இந்த 2K கிட் ஸைரா என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அதை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை தனது பெற்றோர்களுடன் கூட போட்டோ போஸ்ட் செய்யாத கபி, தான் காதலிப்பதை மட்டும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
-
5 காசு கபி
வீடியோவும் போட்டோவும் அப்லோட் செய்த ஆரம்பத்தில் இத்தாலியில் மட்டும் பிரபலமாக இருந்தார். அடுத்ததாக டிக் டாக்கில் வீடியோ போட்ட பின் இவரது புகழ் உச்சத்துக்கு சென்றுவிட்டது. எந்தளவிற்கு என்றால் டிக் டாக்கில் இருக்கும் டிக் டாக் பேஜை விட இவரது பேஜிற்கு ஃபாலோயர்கள் ஜாஸ்தி. அதையும் இவரது பாணியிலேயே வீடியோ செய்து பதிவிட்டிருந்தார். இவர்களைப் போல் சோஷியல் மீடியாவில் ஃபேமஸாக இருப்பவர்களை Social media influencer என்பார்கள். அப்படி இருக்கும் இவர்கள் சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்தால் பணம் தாறுமாறாக வரும். அதுவும் இவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் பெரிய நிறுவனத்தின் விளம்பரங்களை இவர் செய்யும் போது அதில் 30 ஆயிரம் டாலர் வரை இவருக்கு சம்பளமாக வரும் என்கின்றனர்.
இவரது பெரிய ப்ளஸ்ஸே இவருக்கென்ற தனி ரூட்டை இவரே அமைத்துக்கொண்டதுதான். மற்றவர்களைப் போல் இவரும் டிக் டாக்கில் டான்ஸ் ஆடுவது, பாட்டுப் பாடுவது என்று இல்லாமல் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி அதில் வீடியோக்களை பதிவிட்டதுதான் இவருக்கான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.
0 Comments