பழைய ஒரு ரூபாய் நோட்டின் இன்றைய மதிப்பு ரூ.50,000 என்றால் நம்ப முடிகிறதா… நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை.
பழைய ஸ்டாம்புகள், ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்கள் போன்றவற்றைச் சேகரிக்கும் வழக்கம் உலகில் பலருக்கு இருக்கிறது. அந்த பழக்கத்தாலேயே பழமையான பொருட்களுக்கான மவுசு காலத்துக்கேற்றவாறு தொடர்ந்து உயர்ந்து வரும். அப்படி, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பழமையான ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்களை விற்பதற்கென்றே பிரத்யேக இணையதளங்கள் இருக்கின்றன.
அப்படி ஒரு இணையதளம்தான் coinbazaar.com. அந்த இணையதளத்தில் பழைய ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்களை விற்பவர்கள், அதை விற்பதற்காக பட்டியலிடுகிறார்கள். அதை வாங்க நினைக்கும் ஆர்வலர்கள், காயின் பஜார் இணையதளத்தில் அதை வாங்கிக் கொள்ளலாம். அந்தவகையில், பழைய ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகின்றன.

அதுபோல ஒரு சம்பவம்தான் சமீபத்தில் நடந்திருக்கிறது. 1957ம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு ரூ.44,999-க்கு விற்பனையாகியிருக்கிறது. குறிப்பாக, அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம்.பட்டேல் கையெழுத்திட்டிருக்கும் அந்த ரூபாய் நோட்டின் சீரியல் நம்பர் `123456’ என்று தொடங்குகிறது. இந்த வகை ரூபாய் நோட்டுகள் மிகவும் அரிது என்கிறது அந்த இணையதளம். அந்த ஒரு ரூபாய் நோட்டின் ஒரிஜினல் விலை ரூ.49,999 ஆக இருக்கும் நிலையில், சலுகை விலையாக ரூ.44,999 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் குறிப்பிட்ட பொருளுக்கான டிமாண்ட் அதிகரிக்கும்போது, ஏலத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
Also Read – `இந்த 4 ஸ்டோரிய படிங்க’ – நிச்சயம் மோட்டிவேட் ஆவீங்க!
0 Comments