`யார்ரா நீங்க…’ தெம்மா தெம்மா ரீல்ஸியன்ஸ் அலப்பறைகள்!

இன்னைக்கு எல்லார் மனசுலயும் ஆட்டோமெடிக்கா ஓடிகிட்டு இருக்குற பாட்டு, தெம்மா தெம்மா பாட்டுதான். அதைக் கேட்டதும் அந்த ஸ்டெப்பும் மனசுல வந்துபோகும். அந்தப் பாட்டுக்கு மியூசிக் போட்டு பாடிய மியூசிக் டைரக்டர் ஜெஸ்ஸி கிஃப்ட், தமிழ்ல நம்ம எல்லாருக்கும் புடிச்ச நிறைய பாடல்களை பாடியிருக்காரு. அந்தப் பாடல்கள் எல்லாம் என்ன? தெம்மா தெம்மா, தூத்துக்குடி கேஸ்ல என்ன நடந்துச்சு? அதெல்லாம் இருக்கட்டும், முதல்ல இந்தப் பாட்டு எப்படி வைரல் ஆச்சு?

இன்ஸ்டா ரீல்ஸ் வந்தபிறகு, பல வருஷத்துக்கு முன்னாடி வந்த பாட்டுலாம் தூசி தட்டி போட்டு அதை டிரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. அந்த வரிசைல இப்போ சேர்ந்துருக்க பாட்டுதான் தெம்மா தெம்மா. படம் வந்தப்ப ஒரு பய கண்டுக்கல, இப்போ என்னனா, தமிழ்நாடு, கேரளானு எல்லா ஸ்டேட் பசங்க, பொண்ணுங்களும் இந்த பாட்டுக்கு வைப் பண்ணிட்டு இருக்காங்க. கேரளால 2004-ல ரெயின் ரெயின் கம் அகெயின் படத்துல வந்த பாட்டுதான் தெம்மா தெம்மா. இந்தப் படத்துக்கு ஜெஸ்ஸி கிஃப்ட்தான் மியூசிக் போட்ருக்காரு. நம்ம தமிழ்ல இவர் மியூசிக் போட்ட, பாடுன நிறைய பாடல்கள் நம்மளோட ஃபேவரைட். 4 தி பீப்பிள்னு பரத் நடிச்ச படம் ஒண்ணு இருக்கு. அந்தப் படத்துக்கு இவர்தான் மியூசிக். படம் நமக்கு தெரியாது. ஆனால், பாட்டு இன்னைக்கும் நிறைய பிடிக்கும். லஜ்ஜாவதியே, அன்னக்கிளி நீவாடிலாம் இந்தப் படத்துல வர்ற பாடல்கள்தான். மியூசிக் போட்டு பாடவும் செய்திருப்பாரு. யுவன் ஷங்கர் ராஜால இருந்து ஹிப்பாப் தமிழா வரைக்கும் பிற மியூசிக் டைரக்டர்களோட இசைலயும் பல பாடல்கள் பாடியிருக்காரு. சண்டக்கோழி படத்துல கேட்டா கொடுக்குற பூமி பாட்டு செம மாஸா இருக்கும். அதை சின்மயி, கங்கா சித்தராசு, சுஜாதா மோகன்கூட சேர்ந்து ஜெஸ்ஸி பாடியிருக்காரு. வித்யாசாகர் இசையில் வெளியான மொழி படத்துல செவ்வானம் சேலை கட்டி இவர் பாடுனதுதான். வெயிலோடு விளையாடு பாட்டுல திப்பு, கைலாஷ் கெர், வி.வி.பிரசன்னாகூட சேர்ந்து ஜி.வி.பி மியூசிக்ல பாடியிருக்காரு.

ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல வந்த அந்நியன் படத்துல அண்டங்காக்கா கொண்டக்காரி, டி.எஸ்.பி மியூசிக்ல சச்சின் படத்துல குண்டுமாங்கா தோப்புக்குள்ள, டி.எஸ்.பி மியூசிக்ல வந்த சம்திங் சம்திங் படத்துல கிளியே கிளியே, அனிருத் மியூசிக்ல வந்த தானா சேர்ந்த கூட்டம் படத்துல பீலா பீலா, ஹிப்ஹாப் தமிழா மியூசிக்ல வந்த கலகலப்பு 2 படத்துல காரைக்குடி இளவரசி, பட்டாளம் படத்துல திசையெட்டும், டி.எஸ்.பி மியூசிக்ல வந்த ஆறு படத்துல ஃப்ரீயா வுடு மாமே பாட்டுலாம் ஜெஸ்ஸி கிஃப்ட் பாடுனதுதான். எல்லாப் பாட்டையுமே பார்த்தீங்கனா, செம பவர்ஃபுல்லா இருக்கும். அவரோட பாட்டைக் கேட்டாலே தனி எனர்ஜி ஒண்ணு வரும். அந்த மேஜிக் அவரோட குரல்ல இருக்கு. மலையாளம், தமிழ், தெலுங்குனு மூணு மொழிகள்லயும் எக்கச்சக்க ஹிட் பாடல்களை மனுஷன் கொடுத்துருக்காரு. சரி, திடீர்னு இவரோட தெம்மா தெம்மா பாட்டு ஹிட்டாக என்ன காரணம்? வேற என்ன இன்ஸ்டாதான். இன்ஸ்டாகிராம்ல ஹாஸ்டல் பொண்ணுங்க நிறைய பேர் சேர்ந்து இந்த பாட்டுக்கு எப்பவும்போல டான்ஸ் ஆடியிருக்காங்க. அந்த டான்ஸ் அவங்க எதிர்பார்க்காத விதமா வேற லெவல் ரீச் கொடுத்துருக்கு. முதல்ல கேரளால வைரல் ஆச்சு. அப்புறம், தமிழ் பசங்க அதை ட்ரோல் பண்ணி டிரெண்ட் பண்ணாங்க. அடுத்த சில நாள்கள்ல வேற மாநிலங்கள்லயும் டிடெண்ட் ஆக ஆரம்பிச்சுடுச்சு. இதை பத்தி ஜெஸ்ஸி கிஃப்ட், “இந்தப் பாட்டு 18 வருஷம் முன்னாடி போட்டது. ஆனால், இப்போ உள்ள இளம் வயசு பசங்களுக்கு புடிச்சதை பார்க்கும்போது சந்தோஷமாதான் இருக்கு. லஜ்ஜாவதி ஸ்டைல்ல பாட்டு போடணும்னுதான் இந்த தெம்மா தெம்மா போட்டேன்”னு சந்தோஷமா பேசியிருந்தார்.

தெம்மா தெம்மா பாட்டு வைரலானதுக்கு முக்கியமான காரணம் அந்த ஸ்டெப்தான். நிறைய பேர் அதை அபாசமா இருக்குனு வைச்சு செய்துட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல தூத்துக்குடில பசங்க சேர்ந்த அந்த ஸ்டெப்பை போட்டாங்க. அந்த வீடியோ வைரல் ஆனது, அந்த பசங்களுக்கு பெரிய பிரச்னையாவே மாறிச்சு. நம்ம தூத்துக்குடினு வைச்சிருந்த வாசகம் மேல பசங்க சிலர் ஏறி ஸ்டெப் போட்ருக்காங்க. பார்க்குறவங்களை முகம் சுழிக்க வைக்குது, இந்த காலத்து பசங்களுக்கு அறிவே இல்லைனுலாம் போஸ்ட் போட்டு அதை வைரல் பண்ணாங்க. இதுதொடர்பான புகாரும் சைபர் கிரைம் காவலர்களுக்கு போனது. வீடியோவை வைச்சு பசங்களை கண்டுபிடிச்ச போலீஸ், அவங்களை கடுமையா எச்சரிக்கை விடுத்தாங்க. அதுக்கப்புறம் அதே இடத்துல வைச்சு பசங்க வீடியோ ஒண்ணு வெளியிட்டாங்க. அதுல, “தூத்துக்குடி சின்னத்தை அவமானப்படுத்துற விதமா வீடியோ எடுத்ததை தப்புனு உணர்ந்துட்டோம். இனிமேல நாங்க தூத்துக்குடியை அவமானப்படுத்துற விதமா எதுவும் பண்ண மாட்டோம். பொதுச்சொத்துக்களில் வீடியோ எடுத்து போட மாட்டோம். அசிங்கமா வீடியோ எடுத்து இன்டர்நெட்ல அப்லோட் பண்ண மாட்டோம்”னு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டாங்க. இந்த ஸ்டெப் தொடர்பாகவும் ஜெஸ்ஸி கிஃப்ட் பேசுனாரு. அப்போ, “அவங்க போடுற ஸ்டெப்ஸ்லாம் பார்த்தா, ஃப்ரீடம எக்ஸ்பிரஸ் பண்ற மாதிரிதான் இருக்கு. அவங்க கல்சரே வேறயா இருக்கு. கரெக்டானு யாராலயும் சொல்ல முடியாது”னு விளக்கம் கொடுத்துருந்தாரு.

Also Read – `அண்டா மேல கைய வைச்ச…’ கட்சிகளின் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!

நம்ம மீம் கிரியேட்டர்களுக்கு சின்ன விஷயம் கிடைச்சாலே மீம்ஸ் போட்டு தாளிக்க ஆரம்பிச்சிருவாங்க. தெம்மா தெம்மா மாதிரி பெரிய கண்டண்டே கிடைச்சிருக்கு. விடுவாங்களா? முதல்ல அவங்க சொன்னதே, அடேய், இதெல்லாம் தமிழ்ல எப்பவோ பண்ணிட்டோம். சாக்லேட் படத்துல மல மல பாட்டு கேட்ருக்கீங்களா. தெம்மா தெம்மாக்குலாம் முன்னோடி அதுதான். இதெல்லாம் லேட்னு போட்டாங்க. தெம்மான்றது கோவத்துல பேசுற வார்த்தைடா, அதுக்கு இப்படி ஸ்டெப் போட்டு பங்கம் பண்றீங்க?னு கேள்விகள் கேட்டு வைச்சிருந்தாங்க. நம்ம நாட்டோட கலாசாரம் என்ன ஆகுது? இன்றைய தலைமுறை எதை நோக்கி போகுது? கேரளாவின் கலாசார வளர்ச்சி என்பது இதுதானா? இந்தப் பாட்டுக்கு நடனம் ஆடுன மாணவிகள் பெற்றோர்களை எதைக் கொண்டு அடிப்பது? அடுத்த தலைமுறைக்கு ஒழுக்கம்னு நம்ம என்னத்த கத்து கொடுக்கப்போறோம்? பெத்தவங்க கஷ்டப்பட்டு, காலேஜ் ஃபீஸ் கட்டி, ஹாஸ்டல் ஃபீஸ் கட்டி நல்லா படிச்சு முன்னேறூவானு அனுப்பி வைச்சா, இவங்க இப்படி ஸ்டெப் போட்டுட்டு திரியுறாங்கனு சோஷியல் மீடியால நிறைய பொங்கி வைச்சிருக்காங்க. அவங்க ஜாலியா டான்ஸ் ஆடி ரீல்ஸ் பண்றாங்க, அதைப் பார்த்துட்டு கடந்து போவீங்களா, அதை வைச்சு கலாசாரம் கிளாஸ் எடுத்துட்டு இருக்கீங்கனும் சிலர் போற போக்குல பேசிட்டு இருக்காங்க. ஹாஸ்டல் வார்டன் ரியாக்‌ஷன்லாம் போட்டு மீம்ஸ் போட்ருந்தாங்க. ரைட்டு எஞ்சாய்.

தெம்மா தெம்மா ரீல்ஸ் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!

1 thought on “`யார்ரா நீங்க…’ தெம்மா தெம்மா ரீல்ஸியன்ஸ் அலப்பறைகள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top