ஒரு பக்கம் ரொம்ப தீவிரமான SpaceX, Open AI மாதிரியான விஷயங்கள், வெற்றிகரமான Tesla Automobile-னு ஒரு திறமையான நபரா தெரிஞ்சாலும் ட்விட்டரில் கஞ்சா அடிச்ச மோட்லயே ட்வீட் போடுறது, ட்விட்டரையே விளைக்கு வாங்குறது, வாஷ்பேஸினைத் தூக்கிட்டு அலுவலகத்துக்கு வர்றதுன்னு கிறுக்குத்தங்களுக்கும் சொந்தக்காரார் எலான் மஸ்க், அவரோட சில சேட்டைகளைப் பார்க்கலாம்.
ஒரு 12 வயசு பையனுக்கு எது எதுலலாம் ஆர்வம் இருக்கும்? வீடியோ கேம், சினிமா, wwe, 2கே கிட்ஸ்னா கேர்ள்பிரண்ட்ஸ், 90ஸ் கிட்ஸ் ஒரு தலை ராக க்ரஷ்ஷூகள் பற்றி யோசிக்கவே இன்னும் 6 வயசு தேவைப்படும், எக்ஸ்ட்ரா வேணும்னா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சேர்த்துக்கலாம். இந்த லிஸ்ட்ல இருக்க வீடியோ கேம் மேல ஒரு பையனுக்கு ஆர்வம் அதிகம், விளையாடி சலிச்ச பிறகு, அவனுக்குப் புடிச்ச மாதிரியே ஒரு வீடியோ கேமை அவனே டெவலப் பண்ணிருக்கான். அதோட இந்த விஷயம் முடியல. அந்த கேமும் விளையாடி சலிச்ச பிறகு ஒரு மீடியாவுக்கு அந்த கேமை 500$-க்கு அந்தப் பையன் வித்திருக்கான். ஒன்றை உருவாக்குவது மட்டுமில்ல, அதை எப்படி காசாக்குறது, அதில் இருந்து வருவாயைப் பெருக்குறது எப்படிங்குற வித்தையை கத்துகிட்ட அந்த 12 வயசுப்பையன் தான் எலான் மஸ்க்.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புறது, விமானங்களுக்கான நீண்ட ஓடுதளங்களின் தேவையை குறைத்து சின்ன இடங்களிலேயே விமான நிலையங்களை அமைக்க சாத்தியத்தை உருவாக்குறது, இரவிலும் சோலார் பேனல்கள் மூலமாக மின்சாரத்தை மக்கள் பெறும் வகையில் தொழில்நுட்பங்களை மாற்றியமைக்குறது, ஆர்ட்டிஃபீஷியல் இண்டெலிஜென்ஸை மனிதர்களுடைய தேவைகளுக்கேற்ற வகையில் வடிவமைக்குறதுந்னு தொழில்நுட்பத்தோடவே வீம்பா விளையாடி சாதிக்குற எலான் மஸ்க் பெரும்பாலான நேரங்களில் கிறுக்குத்தனங்களும் செய்யக்கூடிய ஆள்தான், இப்போ ட்விட்டரை வச்சு செஞ்சுகிட்டிருக்க சேட்டை மாதிரி. அப்படி அவரோட சில கிறுக்குத் தங்களைப் பார்ப்போம்.
டெஸ்லா CEO- பதவிக்காக அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எலான் மஸ்க் இன்னைக்கு கை வைக்காத துறைகளே இல்லை, ஆனா அவர் என்ன படிச்சிருப்பார்னு நினைக்குறீங்க? Stanford-ல எலான் ஒரு சேட்டையை பண்ணியிருக்காரு, எத்தனை நாள்கள் ஸ்டேன்ஃபோர்ட்ல படிச்சிருப்பாருன்னு நினைக்குறீங்க? கூகுள் பண்ணிப் பாக்காம கமெண்ட் பண்ணுங்க. கடைசியில் பதிலைப் பார்ப்போம்.
The Spy Who Loved Me என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நீருக்கு அடியில் ஓடக்கூடிய ஒரு காரை ஓட்டி ஜேம்ஸ் பாண்ட் சாகசம் செய்வார். அந்தக் கார் மேல எலானுக்கு ஒரு கண், ஒரு மில்லியன் டாலர் கொடுத்து அந்தக் காரை வாங்கினார் தலைவர். டெஸ்லாவிலிருந்து Cybertruck என ஒரு காரின் படங்களும் மாடல்களும் வெளியாகி பயங்கரமா கிண்டல் செய்யப்பட்டதே ஞாபகம் இருக்கா? அந்த காரோட இன்ஸ்பிரேஷனே எலான் வாங்கின அந்த ஜேம்ஸ் பாண்ட் கார்தான்.
படத்தைப் பார்த்து இவர் இன்ஸ்பையர் ஆனது இருக்கட்டும், எலானோட கேரக்டரைப் பார்த்து இன்ஸ்பயர் ஆன பயங்கர ஃபேமஸான ஒரு கதாபாத்திரம் Iron Man – Tony Stark. அந்தக் கதாபாத்திரத்துக்காக ராபர்ட் டௌனி ஜூனியர், எலானோட சில மேனரிசங்களையும் நடவடிக்கைகளையும் படங்களில் பிரதிபலிச்சிருப்பாரு. Ironman 2 படத்தில் எலானே ஒரு கேமியோவும் செய்திருப்பாரு, அது போக “The Simpsons,” “South Park,” & “Rick and Morty” போன்ற அனிமேஷன்களிலும் bigbang theory போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிச்சிருப்பாரு.
அதிகாரப்பூர்வ கணக்குகளின் படியே அவருடைய குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைத் தாண்டிவிட்டது. X-men காமிக்ஸ்களில் வரும் Xavier கதாபாத்திரத்தின் தாக்கத்தினால் தன்னுடைய ஒரு குழந்தைக்கு Xavier எனப் பெயர் சூட்டினார். தன்னுடைய இன்னொரு குழந்தைக்கு X Æ A-12 Musk எனப் பெயர் சூட்டினார், இந்தப்பெயரை எப்படி உச்சரிக்கனும் பொருள் என்னன்னும் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார். ஒருமுறை பேட்டியில் ஏன் இத்தனை குழந்தைகள் என்ற கேள்விக்கு “மனிதர்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாவிடில் இந்த மனித நாகரிகம் சிதைந்துவிடும். நான் என்ன போதிக்கிறேனோ, அதையே செய்கிறேன்.” அப்படினுலாம் ரவுசு பண்னியிருப்பார், கோவிட் சமயத்துலயும் இப்படி கோக்கு மாக்கா பேசி ஊரெல்லாம் திட்டுவாங்குவாரு, அதையெல்லாம் தொடச்சிப் போட்டுட்டு அடுத்த நாள் ட்விட்டர்ல இன்னொரு ஊசிவெடியை கொளுத்திப் போட்டுட்டு, ஊரே ஊறப்போட்டு அடிக்கும் போது வேற வேலையைப் பார்க்க போயிடுவாரு.
தான் உருவாக்கும் நிறுவனங்களுக்குப் பெயர் வைக்க எல்லாம் யோசிக்கவே மாட்டாரு, என்னடா இப்படி ஒரு பேர் வச்சிருக்கன்னு நம்மையெல்லாம் யோசிக்க வைக்குற மாதிரி ஒரு பேரை வைப்பாரு, அப்படி அவரோட ஒரு நிறுவனத்தோட பெயர் The Boring Company. உலகப் பணக்காரர்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் அடிக்கடி வந்து போற ஒரு நபர், எக்கச்சக்கமான நிறுவனங்கள் இருக்கு, அந்த நிறுவனங்களோட பங்குகள், அதனுடைய divident, லாபம்னு அவருக்கு வருமானத்துக்குப் பஞ்சமில்லை. அவருடைய பல நிறுவங்களுக்கு அவரே CEO-வும் கூட. டெஸ்லாவுக்கும் அவர்தான் CEO, அந்த வேலைக்காக அவர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 0 அமெரிக்க டாலர்கள்.
ட்விட்டரை நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போ எலான் வாங்கி இருந்தாலும் அவர் ட்விட்டர்ல சேர்ந்தது 2009-ம் ஆண்டு, அப்போல இருந்தே டிவிட்டரில் அவர் அடிக்கும் கூத்துகள் ஏராளம் அதையெல்லாம் சொல்லனும்னா இப்படி நூறு வீடியோ போட வேண்டி இருக்கும். ஒரே ஒரு சேம்பிள், டிவிட்டரை அவர் வாங்கிய அன்று அவருடைய டிவிட்டர் பயோ “Chief Twit”. ஆனால், சில நாள்களிலேயே பலரும் டிவிட்டரில் இதை சரி செய்யனும், அதை மாத்தனும், இங்க ஒழுகுது, அங்க உருளுது, அதோ உடையுதுன்னு எக்கச்சக்கமா எலானை டேக் பண்ணி ட்வீட் போட இப்போ அவரோட பயோவை “Twitter Complaint Hotline Operator”-னு மாத்தி வச்சிருக்காரு. இந்த வீடியோ பப்ளிஷ் ஆகும் போது அவர் வேற பயோ கூட மாத்தியிருக்கலாம்.
இயற்பியல் மற்றும் பொருளாதாரன் என இரண்டு துறைகளிலும் பேச்சிலர் டிகிரி வாங்குமளவுக்கு கிறுக்கு முற்றிப்போன எலான் மஸ்க், Stanford பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் டாக்டரேட் படிப்பதற்காகப் போனார். ஆனால், போன இரண்டாவது நாளே படிப்பை மூட்டைகட்டித் தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிட்டார். நெட்ஸ்கேப்பில் வேலையில் சேர்வதற்காக விண்ணப்பித்தார். ஆனால், கொஞ்ச நாள்களுக்காகவே சகோதரகளுடன் இணைந்து Zip2 என்ற சேவையைத் துவக்கினார், இப்போதைய கூகுள் மேப்பின் முன்னோடியாக ஒரு நகரத்தின் தொழில்கள், தொடர்பு முகவரி தொலைபேசி எண்கள் அடங்கிய சேவை இது, அப்போதைய செய்தித்தாள்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக இது இருந்தது. இந்த நிறுவனத்தை 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்று பெரும் லாபமீட்டினார் மஸ்க். 12 வயதில் தனக்குப் பிடித்த கேமை உருவாக்கி லாபமீட்டியதைப் போலவே இன்று வரை தொட்டதிலெல்லாம் வெற்றி என வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
முதல் நாள் டிவிட்டர் அலுவலகம் வரும்போதே கையில் வாஷ்பேஸின் கொண்டு வந்தது, CEO-வை நீக்குவது, டிவிட்டரில் வெரிபைட் அக்கவுண்ட்டுக்குக் காசு, செயல்படாம இருக்குற அக்கவுண்ட்களை நீக்குவது, பாட்களை முடித்துக்கட்டுவதுன்னு தினந்தினம் ஒரு சேட்டை செய்துகிட்டிருக்க எலான் மஸ்க் டிவிட்டரில் அடுத்து என்ன சேட்டை செய்யலாம்னு நீங்க அவருக்கு ஒரு யோசனை கொடுங்க.