"தமிழ்நாட்டின் சிற்பக் களஞ்சியம்" மாமல்லபுரம் கோயிலின் பெருமைகள்

கடற்கரைக் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ‘ஐந்து கல் ரதங்கள்’ என்ற சிற்ப வினோதங்கள் காணப்படுகின்றன

குகைக் கோவில்கள் கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதி வராஹ மண்டபம், திருமூர்த்தி குகை, மற்றும் கிருஷ்ண மண்டபம் ஆகியவை சிறப்புமிக்க குகை கோயில்களாகும்

முதலாம் நரசிம்மவர்மன் (கிபி 630 – 668) என்ற பல்லவ மன்னன் காலத்தில் இந்த துறைமுகம் பிரபலமாக இருந்தது

இராஜசிம்ம பல்லவரால் கட்டப்பட்ட இந்த கோயிலில் 440 புராதன சின்னங்களையும் 45 அடி உயரத்தையும் கொண்டது

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

கிருஷ்ண மண்டபம் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறப்பு தொகுப்பாக உள்ளது, இதில் அவர் காத்தருளும் உயிர்களான மனிதர்கள், புள், பூச்சி, இனங்கள் செதுக்கப்பட்டுள்ளது

சிவபெருமான், தேவர்கள், மனிதர்கள், யானை, சிங்கம், மான் முதலிய மிருகங்கள், பறவைகள் ஆகிய சுமார் 100 புடைப்புச் சிற்பங்களை ‘அர்ஜுனன் தவம்’ சிற்பத்தில் காணலாம். ‘அர்ஜுனன் தவம்’ ஒரு சிறந்த கலை கருவூலமாகும்

தெய்வத் திருவுருவங்களை தவிர ஆதிவராக குகையில், சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன் ஆகிய பல்லவ மன்னர்களின் ஆளுயர உருவங்கள் அவர்களது மனைவியருடன் உள்ளது

இக்கோவில் பண்டைய நினைவுச் சின்னமாக விளங்குகிறதே தவிர இங்கு வழிபாடு நடைபெறவில்லை

திமிங்கல வடிவிலான பாறையில் 27மீ x 9 மீ அளவு பரப்புடையது. இது உலகின் மிகப்பெரிய தொகுப்பு சிற்பமாகும் இதில் கடவுள்கள், தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், பறவைகள் மற்றும் பூச்சி இருக்கின்றன

குடைவரைக்கோயில், ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், கட்டுமானக் கோயில்கள், படைப்புச் சிற்பங்கள் என 4 வகையான சிற்பங்கள் மாமல்லபுரத்தில் இருக்கின்றன