ரெய்னாவைப் பற்றி பேசும்போது ஐபிஎல் தொடரினைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அதுவும் பஞ்சாப் அணிக்கு எதிராக 87 ரன்கள் விளாசிய போட்டியை மறக்க முடியுமா? 2014-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், அந்தப் போட்டியில் சென்னை தோல்வியடைந்தது. வீரனின் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தானே!