எங்க ஊரு சினிமா: மலைகளின் ராணி... ஊட்டியில் எடுக்கப்பட்ட 10 தமிழ் படங்கள்!

பரதேசி - பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம், பரதேசி. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது.

நண்பன் - விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஹாரிஸ் இசையில் 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம், நண்பன். இந்தப் படத்தின் சில காட்சிகளும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. 

நடிகன் - சத்யராஜ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் இளையராஜா இசையில் 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம், நடிகன். மிகப்பெரிய ஹிட்டான இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டிருக்கும்.

முள்ளும் மலரும் - மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இளையராஜா இசையில் 1978-ம் ஆண்டு வெளியான திரைப்படம், முள்ளும் மலரும். இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த கிளாசிக் திரைப்படத்தின் சில காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டவைதான்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

மூன்றாம் பிறை - பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில் 1982-ம் ஆண்டு வெளியான திரைப்படம், மூன்றாம் பிறை. பாலுமகேந்திரா மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான இந்த கிளாசிக் படமும் ஊட்டியில் படமாக்கப்பட்டதுதான்.

மூடுபனி - டைட்டிலுக்கு ஏற்றபடி பனிமூட்டம் நிறைந்த ஊட்டியை இயக்குநர் சில காட்சிகளில் படமாக்கியிருப்பார். பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் பிரதாப் போத்தன் நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூடுபனி.

காதல் கோட்டை - இதுல எங்கடா ஊட்டி வரும்னு யோசிக்கிறீங்களா? தேவயானி தன்னோட அக்காக்கூட வசிக்கிற இடமே ஊட்டிலதான். அஜித் நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையில் 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல்கோட்டை.

துருவங்கள் பதினாரு - கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரஹ்மான் நடிப்பில் ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம், துருவங்கள் பதினாரு. இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி பகுதிகளைச் சுற்றியே எடுக்கப்பட்டது.

தெய்வ திருமகள் - விக்ரம் நடிப்பில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம், தெய்வ திருமகள். இந்தப் படத்தின் காட்சிகள் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அண்ணாமலை - இந்தப் படத்தில் வரும் இண்ட்ரோ பாடல் மட்டும் ஊட்டியில் படமாக்கப்பட்டிருக்கும். ரஜினியின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் இண்ட்ரோ சாங் என்பதாலும் இன்று வரை சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு இந்தப் படத்தின் இசை இருப்பதாலும் இந்த லிஸ்டில் அண்ணாமலைப் படத்துக்கு சிறப்பான இடம் உண்டு.

இந்த லிஸ்டில் நாங்கள் குறிப்பிடாத, ஊட்டியில் எடுக்கப்பட்ட உங்களது ஃபேவரைட் படத்தைக் கமெண்டில் பதிவிடுங்க.