இசைப்புயல்... மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்... ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படம் `ரோஜா’. பாடல்கள் ஒவ்வொண்ணும் தரமா இருக்கும். தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த ஒலி அமைப்பையே ரஹ்மான் மாற்றியமைத்து அதகளம் செய்திருப்பார். அந்தப் படத்துக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ.25,000. அந்தப் படத்துக்கு தேசிய விருதும் பெற்றார்.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான `யோதா’ என்ற படத்துக்குதான் ரஹ்மான் முதலில் இசையமைத்தார். ஆனால், அதற்கு முன்பாக `ரோஜா’ வெளியானது. எனவே, ரஹ்மானின் முதல் படம் `ரோஜா’ ஆனது.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

தூர்தர்ஷனில் வெளியான `வொண்டர் பலூன்’ நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்து மக்கள் மத்தியில் சுட்டிக் குழந்தையாக கவனம் பெற்றார். சின்ன வயசுலேயே சிறப்பாக இசைக்கருவிகளை கையாண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கம்யூட்டர் இன்ஜினீயர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்ததாம். நல்ல வேளை அவர் மியூசிக் டைரக்டர் ஆனாரு. இல்லைனா, நம்ம நிலைமைலாம் என்ன ஆயிருக்கும்?!

இந்திய அளவில் மட்டுமல்ல... உலக அளவிலும் ரஹ்மானுக்கு ரசிகர்கள் அதிகம்.  இதற்கு சாட்சிதான்... `கனடா நாட்டின் ஒன்டாரியோவில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் 2013-ம் ஆண்டு வைக்கப்பட்டது. அந்த தெருவின் முழுப்பெயர், Allah-Rakha Rahman St’ - இந்த சம்பவம்.

ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மகன் அமீன் - இருவருமே பிறந்த தேதி ஒன்றுதான். 

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய `ஜெய் ஹோ’ பாடல், முதல்முதலில் சல்மான்கான் நடிப்பில் உருவான `யுவ்ராஜ்’ படத்துக்காக இசையமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, ரஹ்மானின் `சையா சையா’ பாடல் டென்செல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான `இன்சைட் மேன்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஏர்டெல்லின் சிக்னேச்சர் டியூனை இதுவரை 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இசை இதுதான்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

`நீங்கள் இறப்பதற்கு முன்பு கேட்க வேண்டிய 1000 ஆல்பங்கள்’ என்ற தலைப்பில் புகழ்பெற்ற ஆங்கில பத்திரிகையான `கார்டியன்' பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் ரஹ்மான் இசையமைத்த `பாம்பே' படத்தின் ஆல்பமும் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை வெள்ளை மாளிகையில் 2009-ம் ஆண்டு சந்தித்தார். அப்போது, இரவு உணவுக்கு முன்பாக வெள்ளை மாளிகையில் ரஹ்மானின் இசைக்கச்சேரி நடந்தது. வெள்ளைமாளிகையில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியக் கலைஞர், ரஹ்மான்தான்.

2 ஆஸ்கர், 1 கோல்டன் குளோப், 1 பப்ஃடா, 6 தேசிய விருது, 32 ஃபிலிம் ஃபேர், 6 தமிழக அரசின் விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான்.