‘ஜெயம்’ ரவியும் அவரது அண்ணன் மோகன் ராஜாவும் சிறுவர்களாக இருக்கும்போதே பெரியவன் டைரக்டர், சின்னவன் ஹீரோ’ என அப்போதே முடிவு செய்துவிட்டாராம்.
எடிட்டர் மோகன் தெலுங்கில் தயாரித்த ‘பாவா பாவமரிடி’, ‘பல்நடி பௌருஷம்’ என்ற இரு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் ‘ஜெயம்’ ரவி. ஆனால், தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததில்லை.
சிறுவயதிலேயே பரத நாட்டிய கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் முறைப்படி பரதம் கற்ற ‘ஜெயம்’ ரவி, தனது 12-வது வயதில் அரங்கேற்றமும் செய்திருக்கிறார்.
இனி நடிப்புதான் வாழ்க்கை என சிறுவயதிலேயே முடிவாகி அதற்கேற்ப, லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன், மும்பை கிஷோர் நமிட் கபூர் இன்ஸ்டியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் என படித்திருந்தாலும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக ‘ஆளவந்தான்’ படத்தில் பணியாற்றியிருக்கிறார்.
முதல் படத்தில் சாஃப்ட் லுக் இளைஞனாக தோன்றிய ‘ஜெயம்’ ரவி, இரண்டாவது படமான ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி’ படத்துக்காக முறைப்படி பாக்ஸிங் கற்று ஃபிட்டாக வேறொரு ஆள் போல தோன்றினார். இதுதான் பின்னாளில் அவர் ‘பூலோகம்’ படத்தில் முழுநேர பாக்ஸர் ரோலில் நடிக்கவும் கை கொடுத்தது.
மோகன் ராஜா எழுதும் எல்லா கதைக்கும் முதல் விமர்சகர் ‘ஜெயம்’ ரவிதான். கதை மெருகேறுவதற்காக தனக்குத் தெரிந்த ஆலோசனைகளையும் வழங்குவார். மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த ‘வேலாயுதம்; பட டிஸ்கஷனில் தீவிரமாக பங்கேற்ற ‘ஜெயம்’ ரவி, விஜய்யின் மாஸ் இமேஜுக்கேற்ற பல விஷயங்களைச் சொன்னாராம்.
சதா, அசின், ஷ்ரேயா, ஹன்சிகா, தன்ஷிகா, சாயிஷா என இவரது படத்தில் அறிமுகமான இந்த ஹீரோயின்கள் எல்லோருமே மிகப்பெரிய ஸ்டார் ஆனதால், ‘‘ஜெயம்’ ரவி படத்தில் ஹீரோயினா இண்ட்ரோ ஆனா லக்குப்பா’ என்பது கோலிவுட்டில் உலவும் சீக்ரெட் செண்டிமெண்ட்.
கராத்தே, வில்வித்தை உள்ளிட்ட அனைத்து தற்காப்பு கலைகளையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தவர் ‘ஜெயம்’ ரவி.
முதல் படமான ‘ஜெயம்’ படம் பார்த்துவிட்டு ரஜினியே போன் செய்து, நேரடியாக தன்னை பாரட்டியதை மிகப்பெரும் சாதனையாக நினைக்கிறார் ‘ஜெயம்’ ரவி.
தமிழ் ஹீரோக்களில் விஜய் தொடங்கி சிவகார்த்திகேயன்வரை எந்த செட் ஹீரோக்களுடனும் ஈகோ இல்லாமல் நட்பாக பழகக்கூடியவர் ‘ஜெயம்’ ரவி. இவர்களில் ஆர்யா, விஷால், ஜீவா, கார்த்தி ஆகியோர் ‘ஜெயம்’ ரவிக்கு ரொம்பவே க்ளோஸ். இவர்கள் சம்பந்தபட்ட எந்த பட விழாக்களிலும் ‘ஜெயம்’ ரவியை நிச்சயம் பார்க்கலாம்.
kisan vikas patra: இரட்டிப்பாகும் முதலீடு – போஸ்ட் ஆபிஸின் ரிஸ்க் ஃப்ரீ முதலீட்டுத் திட்டம் பற்றி தெரியுமா?