`முதல் படம், சம்பளம், அரசியல்’ - கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

கே.ஜி.எஃப் படத்தின் மூலமாக இந்திய அளவில் பிரபலமானவர், யஷ். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள் இங்கே...

கே.ஜி.எஃப் ஸ்டார் யஷ்-ன் உண்மையான பெயர், நவீன் குமார் கௌடா. யஷ்ஷின் அப்பா ஒரு டிரைவர்.

சின்ன வயசுலயே நடிப்பு மேல ஆர்வம் வந்ததால, வீட்டுல இருந்து வெளியேறி பெங்களூர் வந்து தியேட்டர் ஆர்டிஸ்டா சேர்ந்துருக்காரு.

`நந்த கோகுலா’ அப்டின்ற சீரியல்லதான் யஷ் முதன்முதல்ல நடிச்சாரு. அப்புறம் படத்துல துணை கதாபாத்திரங்கள்ல நடிச்சாரு.

`மோகினா மனசு’ அப்டின்ற படத்துல நடிச்சதுக்காக சிறந்த துணை கதாபாத்திரத்துக்கான ஃபிலிம் ஃபேர் விருது வாங்கினாரு.

யஷ் ஹீரோவா நடிச்ச முதல் படம், `மொதலசாலா’.

யஷ்க்கு நடிப்பு மட்டுமல்ல, பாட்டு பாடவும் வரும். சேண்டில்வுட்ல சில பாடல்கள் பாடியிருக்காரு.

`நந்த கோகுலா’ சீரியல் செட்ல அறிமுகமான ராதிகாவை காதலித்து யஷ் திருமணம் செய்துகொண்டார். பின்னர், 4 படங்ளில் சேர்ந்து நடித்தும் உள்ளனர்.

யஷ் மற்றும் அவரது மனைவி இணைந்து ஏழை மக்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

கே.ஜி.எஃப் படம் வெளியான பிறகு கன்னட உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறினார். அவரது சம்பளம் ரூ.15 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

யஷ் அரசியலில் அவ்வப்போது ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு முன்பு நடந்த கர்நாடக தேர்தல்களில் பா.ஜ.க மற்றும் ஜனதா தளம் ஆகிய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

கே.ஜி.எஃப்-2க்கு நீங்க எந்த அளவு வெயிட் பண்றீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!